நம்ம டாக்குட்டரோட ஒரு படம் நினைவிருக்கிறதா?படத்தின் பெயர்
'பிரியமானவளே' என்று நினைக்கிறேன்.அது ஒரு தெலுங்குப் படத்தின்
ரீமேக் எனச் சொல்கிறார்கள் .அதில் திருமணம் என்ற நிரந்தர உறவை
விரும்பாத நாயகன்,நாயகியை ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் மணம்
செய்து கொள்வான்.இந்தக் கதை இப்போது அசலாகிறது.
மெக்சிகோ நாட்டில்(மெக்சிகோ என்றதுமே சுஜாதாவின் சலவைக்காரி
ஜோக் நினைவுக்கு வரக்கூடாது!) புதிதாக ஒரு சட்டம் இயற்று
கிறார்களாம். .
திருமணம் என்பது ஒரு வாழ்நாள் பந்தம் என்பதை மாற்றி மணம்
செய்து கொள்பவர்கள் விருப்பத்துக்கேற்ப திருமண உறவுக்கான
காலத்தைத் தீர்மானித்துக் கொள்ளும் உரிமையை வழங்கப்
போகிறார்கள்.
திருமண ஒப்பந்தத்துக்கான குறைந்த பட்சக்காலம் இரண்டு ஆண்டுகளாக
இருக்கும்.
அவர்கள் அந்தக்காலத்தில் மகிழ்ச்சியாக இருந்து உறவை
நீட்டிக்க விரும்பினால்,அவ்வாறு செய்து கொள்ளலாம். இல்லையெனில்,
ஒப்பந்த காலத்துடன் பிரச்சினையின்றி உறவு முடிவுக்கு
வந்து விடும்.
திருமண உறவில் கசப்பு ஏற்பட்டபின், மண விலக்குக்காக வழக்குத்
தொடர்ந்து நீண்டகால சிக்கல்களில் மாட்டிக் கொள்வது இதனால்
தவிர்க்கப்படும்.
இது எப்படியிருக்கு?!
...............................
திருமணம் பற்றி எழுதியவுடன் திருமணம் பற்றிச் சில செய்திகள்
நினைவுக்கு
வருகின்றன!------
"எல்லா ஆண்களும் கட்டாயம் மணம் செய்து கொள்ள வேண்டும்;
ஏனென்றால் மகிழ்ச்சி மட்டுமே வாழ்க்கையாகி விடாது!"
"பிரம்மச்சாரிகளுக்கு அதிக வரி விதிக்க வேண்டும்;அவர்கள்
மட்டும் மகிழ்ச்சியாக இருப்பது அநியாயம்!"
"பணத்துக்காக மணந்து கொள்ளாதீர்கள்.அதை விட மலிவாகக்
கடன் கிடைக்குமே!"
புதிதாக மணம் முடித்தவர்கள் சிரித்தால்,எல்லோருக்கும்
ஏனென்று தெரியும்;பத்து வருடங்கள் மணவாழ்க்கை
முடித்தவர்கள் சிரித்தால் அனைவரும் எப்படி என்று
வியக்கிறார்கள்!
காதலுக்குக் கண்ணில்லை;ஆனால் திருமணம் கண்ணைத்
திறந்து விடும்!
ஒரு ஆண் தன் மனைவிக்காகக் கார்க் கதவைத்திறந்தால்,ஒன்று
மனைவி புதிதாக இருக்க வேண்டும் அல்லது கார் புதிதாக
இருக்க வேண்டும்!
கணவன்: நமது திருமண ஆண்டு விழாவைக் கொண்டாட
எங்கே செல்ல விரும்புகிறாய்?
மனைவி:இது வரை செல்லாத புதிய இடத்துக்கு.
கணவன்:சமையலறை?!
ஒரு தம்பதி கேட்டதைக் கொடுக்கும் கிணற்றுக்கு வந்தார்கள்.முதலில்,
கணவன் ஒரு காசைக் கிணற்றுக்குள் போட்டு விட்டு ஏதோ வேண்டிக்கொண்டான்.
அடுத்தது மனைவி காசைப் போட்டுக்
கிணற்றுக்குள் குனிந்தாள்,அதிகம் குனிந்ததால் கிணற்றுக்குள்
விழுந்து விட்டாள்.கணவன் அதைக்கண்டு அதிர்ச்சியடைந்தான்.
பின் உரக்கச் சொன்னான்."உண்மை!உண்மை! கேட்டது உடனே
கிடைக்கிறது!!"
லிமெரிக்
..............
"கண்ணன் ஒரு வேலையில்லாத ஆளு
கல்யாண ஆசை வந்தது ஒரு நாளு
ராதா கிட்ட சொன்னான் ஆசை
கிடைத்தது அவனுக்கு நல்ல பூசை
இப்போ செய்வதில்லை அவன் ஓசை!"
http://galattasms.blogspot.com
http://galattasms.blogspot.com