பாகிஸ்தானில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டுத் தாக்குதலில் 5 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலியாகியுள்ளதோடு 15க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
பாகிஸ்தான் தோர்கர் மாவட்டத்தில் ஜுத்பா என்ற இடத்தில் உள்ள பொலிஸ்நிலைய தலைமை அலுவலகத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி முகாம் உள்ளது. அங்கு பயிற்சி முடித்த பொலிஸார் அபோதாபாத்தில் பணிக்காக 3 வாகனங்களில் அனுப்பப்பட்டனர்.
கடைசி வேன் ஷா டிரக் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது சாலையோரம் மறைத்து வைத்திருந்த குண்டுகளை ரிமோட் கண்ட்ரோல் மூலம் தீவிரவாதிகள் வெடிக்க செய்தனர்.
இதில் வேனில் பயணம் செய்த 5 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலியானார்கள். 15க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இத்தாக்குதலுக்கு பாகிஸ்தான் அதிபர் ஆசிப்அலி சர்தாரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
http://tamil-actress-photo.blogspot.com
http://tamil-actress-photo.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?