ஆயுதப் பூஜைக்குப் பிறகு தான் உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தை துவங்குவேன் என்று மத்திய அமைச்சர் மு. க. அழகிரி தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சித் தேர்தல் நெருங்குவதையடுத்து மதுரை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அதற்கு காரணம் அதிமுகவினரின் அனல் பறக்கும் பிரச்சாரம் தான். திமுகவினர் மத்திய அமைச்சர் அழகிரி இல்லாததால் உற்சாகமில்லாமல் இருக்கின்றனர்.
திமுகவினர் சற்று சுணக்கமாக உள்ள நிலையில் மதுரை மேயர் பதவிக்குப் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பாவை ஆதரி்த்து அக்கட்சி அமைச்சர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதைப் பார்த்த திமுக மேயர் வேட்பாளர் பாக்கியநாதன் மு. க. அழகிரியைத் தொடர்பு கொண்டு, அண்ணா நீங்க இல்லாம தேர்தல் பிரச்சாரம் சூடே பிடிக்கமாட்டேங்குது. நம்ம ஆளுங்கெல்லாம் டல்லா இருக்காங்க. அதனால் நீங்கள் வந்து பிரச்சாரம் செய்து அனலைக் கிளப்பணும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
அதற்கு அழகிரி, ஆயதப் பூஜை முடிந்த பிறகு பிரச்சாரத்திற்கு வருகிறேன். அதுவரை மாவட்ட செயலாளர்களை வைத்து சமாளியுங்கள் என்று கூறியுள்ளாராம்.
இதையடுத்து ஆயுத பூஜை முடிந்ததும் 'அண்ணன்' தலைமையில் பட்டையைக் கிளப்ப அழகிரியின் ஆதரவாளர்கள் தயாராகி வருகின்றனர்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?