Saturday, 24 March 2012

மிரட்ட வருகிறது ஆரண்யகாண்டம்!

- 0 comments
 
 
படம் ரொம்ப நல்லாயிருக்கு என்று நாலு பேர் சொல்லும் முன் ஆரண்யகாண்டம் திரையரங்குகளிலிருந்து தூக்கப்பட்டது. விமர்சகர்களும், விருதும் மீண்டும் இப்படத்துக்கு ஒரு கௌவரத்தை வழங்கியிருக்கிறது. பர்மா பஜா‌ரில் அதிகமாக தேடப்படும் டிவிடி ஆரண்யகாண்டம். பலரும் பார்க்க விரும்பும் இந்தப் படத்தை ‌ரீ ரிலீஸ் செய்ய‌த் தயா‌ரிப்பாளர் தரப்பு முடிவு செய்துள்ளது.



தியாகராஜன் குமாரராஜா இயக்கிய இப்படம் வழக்கமான சினிமா ஃபார்முலாவை உடைத்ததுடன் ஒரு விஷுவல் அனுபவத்தையும் பார்வையாளர்களுக்கு தந்தது. பின்னணி இசையில் ஆரண்யகாண்டம் சாதனை பு‌ரிந்தது எனலாம். ஜாக்கி ஷெராஃபின் நடிப்பு இன்னொரு ட்‌‌ரீட்.


ஆரண்யகாண்டத்தைப் பார்க்க விரும்புகிறவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் மீண்டும் படத்தை ‌ரிலீஸ் செய்ய‌த் திட்டமிட்டுள்ளனர். தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
[Continue reading...]

வித்யா பாலனைப் போல் என்னால் நடிக்க முடியாது: அசின்

- 0 comments
 
 
 
மலையாளப் படவுலகிலிருந்து தமிழ்ப்பட உலகிற்கு வந்தவர் அசின். இங்கே சூர்யாவுடன் நடித்த 'கஜினி' படம் சூப்பர் ஹிட்டாகவே, பாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட்ட 'கஜினி' யின் மூலம் மும்பை பட உலகிலும் கால்பதித்தார்.
 
தற்போது பாலிவுட்டில் அபிஷேக் பச்சன் மற்றும் அஜய்தேவ்கன்னுடன் நடித்து வரும் அசின் தமிழ்படங்களில் தலைகாட்டுவதே இல்லை. இவர் கடைசியாக விஜயுடன் 'காவலன்' படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு எந்த தமிழ்ப்படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகவில்லை.
 
இதுகுறித்து அசினிடம் கேட்டதற்கு;
 
பாலிவுட் படங்களிலேயே நான் கவனம் செலுத்திக்கொண்டிருப்பதாக வரும் தகவல்கள் உண்மையானது அல்ல. தென்னிந்திய அளவில் நான் ஒரு பிரபலமான நடிகை என்றாலும், பாலிவுட்டைப் பொறுத்த வரையில் நான் இன்னும் புதுமுக நடிகைதான். தென்னிந்திய படங்களில் நடிக்க மாட்டேன் என்று சொல்லவில்லை. நல்ல ஸ்கிரிப்டை தேடிக்கொண்டிருக்கிறேன். நல்ல ஸ்கிரிப்ட் அமைந்தால் கண்டீப்பாக தமிழில் நடிப்பேன்.
 
உங்களைப் போல் டாப்ஸி, காஜல் அகர்வால் ஆகியோர் பாலிவுட்டிற்கு வந்திருக்கிறார்களே? அவர்களை உங்களுக்கு போட்டியாக கருதுகிறீர்களா? என்று கேட்டதற்கு;
 
இல்லவே இல்லை. யாரும் யாருக்கும் போட்டியாளர்கள் இல்லை. இங்கே அனைவரும் தங்களது திறமையான நடிப்பால் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வது மட்டுமின்றி, நிலைநிறுத்திக் கொள்கிறார்கள்.
 
'டர்ட்டி பிக்சர்' படத்தில் வித்யாபாலன் நடித்தது போல் நீங்களும் நடிப்பீர்களா என்று கேட்டதற்கு:
 
டர்ட்டி பிக்சரில் வித்யா பாலன் நடித்ததைப் போல் என்னால் நடிக்க முடியாது. நான் இன்னும் அது போன்ற கேரக்டர்களில் நடிக்கும் அளவிற்கு தயாராகவில்லை.



[Continue reading...]

ஐ.பி.எல்: யுவராஜுக்கு பதிலாக புனே வாரியர்சின் கேப்டன் ஆகிறார் கங்குலி

- 0 comments
 
 
 
ஐந்தாவது ஐ.பி.எல் "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 4ம் தேதி துவங்குகிறது. இதில் புனே வாரியர்ஸ் அணியின் கேப்டனாக யுவராஜ் சிங் இருந்தார். நுரையீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள யுவராஜ், அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார். எனவே அவருக்கு பதிலாக புதிய கேப்டன் மற்றும் ஆலோசகராக முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார்.
 
முதல் மூன்று தொடர்களில் நடிகர் ஷாருக்கானின் 'கொல்கத்தா நைட் ரைடர்ஸ்' அணிக்கு கேப்டனாக இருந்தார் கங்குலி. இவரது தலைமையில் கொல்கத்தா அணி பெரிய அளவில் சோபிக்காததால், நான்காவது தொடருக்கான ஏலத்தில் இவரை எந்த ஒரு அணியும் தேர்வு செய்யவில்லை. நீண்ட போராட்டத்துக்கு பின், கடந்த முறை அறிமுகமான புனே வாரியர்ஸ் அணி இவரை ஒப்பந்தம் செய்தது. தற்போது புனே வாரியர்ஸ் அணியின் புதிய கேப்டனாக, கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார்.
 
இதுகுறித்து புனே அணியின் உரிமையாளர் சுப்ரதா ராய் கூறுகையில், 'ஐந்தாவது ஐ.பி.எல்., தொடருக்கான புனே அணியின் கேப்டன் மற்றும் ஆலோசகராக கங்குலியை நியமித்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவரது அனுபவம், வெற்றிக்கு நிச்சயம் கைகொடுக்கும் என நம்புகிறேன். இவர், அணியில் இடம் பெற்றுள்ள மற்ற வீரர்களுக்கு சிறந்த முன்னோடியாக இருந்து வழிநடத்துவார் என எதிர்பார்க்கிறேன்,'' என்றார்.



[Continue reading...]

கூடங்குளம் அணு உலை போராட்டத்தில் நக்சலைட் தீவிரவாதிகள்?- போலீஸ் தகவல்

- 0 comments
 
 
 
கூடங்குளம் எதிர்ப்பு போராட்ட குழுவில் சதிஷ் குமார், முகிலன், வன்னியரசு ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். பிடிபட்ட மூவரில் சதீஷ் மற்றும் முகிலன் இருவரும் நக்சலைட் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்றும், நக்சலைட் கும்பலுடன் வன்னி அரசு தொடர்பு வைத்திருப்பதாகவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
 
மேலும் போராட்டக்காரர்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இடிந்தகரையில் மேலும் சில நக்சலைட்டுகள் இருப்பதாகவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
 
மேற்கு வங்க மாநிலத்தின் நந்தி கிராமத்தில் இரசாயன ஆலை அமைக்க அரசு நிலம் ஒதுக்கியது. ஆனால் ஆலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். போலீஸ் விசாரணையில் விவசாயிகளுக்கும் நக்சலைட் கும்பல்களுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. நக்சலைட்டுகளின் பின்னணியிலேயே விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததும் தெரிய வந்தது.
 
இந்நிலையில் நந்தி கிராம பாணியில் கூடங்குளம் மக்கள் செயல்படுகிறார்களா? எனும் சந்தேகமும் போலீசுக்கு எழுந்துள்ளது.
 
ஏனென்றால் போராட்டக்காரர் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் ஏற்கனவே தங்களுக்குப் பின் போராட்டம் நடத்த இளைஞர் படை இருப்பதாக தெரிவித்திருந்தார். இளைஞர் படை என்று உதயகுமார் கூறியது நக்சலைட்டுகளைத் தான் எனும் சந்தேகமும் போலீசுக்கு வலுத்துள்ளது.
 
ஆனால் பிடிப்பட்டவர்கள் நக்சலைட் கும்பல்களைச் சேர்ந்தவர்கள் என போலீஸ் தரப்பில் கூறுவதற்கு கூடங்குளம் மற்றும் இடிந்தகரை மக்கள் தங்களது எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளனர்.



[Continue reading...]

இதயசுத்தியில்லையாம்... - கருணாநிதி உள்ளிட்ட தமிழக தலைவர்களை தாக்கும் கருணா!

- 0 comments
 
 
கருணாநிதி உள்ளிட்ட தமிழகத் தலைவர்களுக்கு இலங்கை பிரச்சினையில் இதயசுத்தியில்லை என்று காட்டிக் கொடுப்புக்கே அகராதியில் தனி அர்த்தம் தந்த இலங்கை அமைச்சர் கருணா கூறியுள்ளார்.
 
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரித்து வாக்களித்ததால் ஆளாளுக்கு வாய்க்கு வந்தபடி பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்தியத் தலைவர்கள், தமிழகத் தலைவர்கள் சிங்கள வெறியர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
 
இலங்கை அரசில், அதிபர் ராஜபக்சே சொன்னதைச் செய்யும் நபராகத் திகழும் அமைச்சர் கருணா என்கிற விநாயகமூர்த்தி முரளிதரனும் தன் பங்குக்கு தமிழக தலைவர்களை விமர்சித்துள்ளார்.
 
கருணாநிதி உள்ளிட்ட பல தமிழக அரசியல்வாதிகள் அரசியல் ரீதியாக தோற்றுப் போனவர்கள் என்றும், அவர்களுக்கு உண்மையான தமிழ் மக்களின் ஆதரவு கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார்.
 
ஈழக் கோரிக்கையை பிரச்சாரம் செய்து சில தமிழ் மக்களை தூண்டி அதன் மூலம் அரசியல் இருப்பை உறுதி செய்து கொள்ள இவர்கள் முயற்சிக்கின்றார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
"கருணாநிதி போன்ற தமிழகத் தலைவர்கள் இதய சுத்தியுடன் தமிழர் பிரச்சினையில் கவனம் செலுத்தவில்லை என்பதனை பல தமிழர்கள் அறிவார்கள்.
 
இந்தத் தமிழ் தலைவர்களின் பிழையான வழிகாட்டல்களினால் பெருமளவிலான உயிர்கள் பலியாகின.
 
அதிகார மோகம் காரணமாக கருணாநிதி போன்ற அரசியல்வாதிகள் மக்களை திசை திருப்புகின்றனர். நல்லிணக்கம் மற்றும் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் போன்ற விஷயங்களில் அரசாங்கம் ஏற்கனவே நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
 
நீண்டகாலமாக நீடித்து வந்த பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காண முடியாதல்லவா. சற்று கால அவகாசம் வேண்டாமா?
 
தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கம் உறுதியான நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், இந்தத் தீர்மானம் தேவையற்றது," என்று கூறியுள்ளார்.



[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger