ஐந்தாவது ஐ.பி.எல் "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 4ம் தேதி துவங்குகிறது. இதில் புனே வாரியர்ஸ் அணியின் கேப்டனாக யுவராஜ் சிங் இருந்தார். நுரையீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள யுவராஜ், அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார். எனவே அவருக்கு பதிலாக புதிய கேப்டன் மற்றும் ஆலோசகராக முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார்.
முதல் மூன்று தொடர்களில் நடிகர் ஷாருக்கானின் 'கொல்கத்தா நைட் ரைடர்ஸ்' அணிக்கு கேப்டனாக இருந்தார் கங்குலி. இவரது தலைமையில் கொல்கத்தா அணி பெரிய அளவில் சோபிக்காததால், நான்காவது தொடருக்கான ஏலத்தில் இவரை எந்த ஒரு அணியும் தேர்வு செய்யவில்லை. நீண்ட போராட்டத்துக்கு பின், கடந்த முறை அறிமுகமான புனே வாரியர்ஸ் அணி இவரை ஒப்பந்தம் செய்தது. தற்போது புனே வாரியர்ஸ் அணியின் புதிய கேப்டனாக, கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து புனே அணியின் உரிமையாளர் சுப்ரதா ராய் கூறுகையில், 'ஐந்தாவது ஐ.பி.எல்., தொடருக்கான புனே அணியின் கேப்டன் மற்றும் ஆலோசகராக கங்குலியை நியமித்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவரது அனுபவம், வெற்றிக்கு நிச்சயம் கைகொடுக்கும் என நம்புகிறேன். இவர், அணியில் இடம் பெற்றுள்ள மற்ற வீரர்களுக்கு சிறந்த முன்னோடியாக இருந்து வழிநடத்துவார் என எதிர்பார்க்கிறேன்,'' என்றார்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?