Tuesday 6 March 2012

இந்தியாவின் இராணுவ உதவியே இலங்கை தமிழர் அழிவுக்கு காரணம்: தா.பாண்டியன்

- 0 comments

'இலங்கையில் தமிழ் இனம் அழிய இந்தியா அளித்த இராணுவ உதவிதான் காரணம். இலங்கைக்கு எதிரான போர்க் குற்றச்சாட்டுக்களில் இந்தியாவுக்கும் பாதிப் பங்கு உண்டு.இந்நிலையில், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது மீது ஐக்கிய நாடுகள் சபை விசாரணை நடத்தினால் இந்தியாவின் பங்கும் தெரிந்துவிடும் என்பதற்காக இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க இந்தியா தயங்குகிறது' என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை போர்க்குற்றவாளியாக இந்தியா அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஏற்பாட்டில் தமிழ்நாடு முழுவதும் இன்று உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தா.பாண்டியன் தலைமை தாங்கி கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

[Continue reading...]

இந்திய பிரதமருக்கு தமிழக முதல்வர் மீண்டும் கடிதம்

- 0 comments
 

ஐ.நா. மன்றத்தில் கொண்டுவரப்படும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவளிக்குமாறு பிரதமருக்கு முதலமைச்சர் ஜெயலலிதா மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த மாதம் 29-ந் திகதி முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், தமிழர்களை இனப்படுகொலை செய்து போர்க்குற்றம் புரிந்த இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனை பொருட்படுத்தி, ஐநாவில் கொண்டுவரப்படும் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், இன்று (06) மீண்டும் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ள முதலமைச்சர் ஜெயலலிதா, தனது முந்தைய கடிதத்திற்கு, இதுவரை எந்தவொரு பதிலும் இல்லாத நிலையில், இலங்கைக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்திய பிரதிநிதி பேசிருப்பத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், ஐ.நா. மனித உரிமை க்குழு கூட்டத்தில் கொண்டுவரப்படும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்திய அரசு ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கையை கண்டிக்கும் வகையில் இந்தியா செயல்படும் வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ள முதல்வர், பிரதமரிடமிருந்து சாதகமான பதில் வரும் என எதிர்ப்பார்ப்பதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

[Continue reading...]

சேலம் கோவிலில் இரவு நேரத்தில் அம்மன் அழும் சத்தத்தால் பரபரப்பு

- 0 comments
 
 
சேலம் அம்மாப்பேட்டையில் ஸ்ரீராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு அம்மாப்பேட்டை மற்றும் இதையொட்டி உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் சாமியை வணங்கி செல்வார்கள். இந்த கோவிலில் திருப்பணி நடந்து வந்தது. திடீரென இந்த திருப்பணி நடக்கவில்லை. இந்த திருப்பணி நடத்த பல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஸ்ரீராமலிங்க சவுடேஸ்வரி அம்மன்கோவிலில் இரவு நேரத்தில் அம்மன் அழும் சத்தமும், உர் உர் என்ற சத்தமும் கேட்கிறது.
 
இதை கேட்டு அக்கம் பக்கம் வசிப்பவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் இதுபற்றி கோவில் நிர்வாகிகளிடம் தெரிவித்தனர். அவர்களும் வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். நேற்று இரவும் இந்த சத்தம் கேட்டது. இதை அறிந்த திரளான பொதுமக்கள் கோவிலுக்கு வந்து இந்த சத்தத்தை கேட்டனர். பின்னர் அவர்கள் கோவில் முன் கற்பூரம் ஏற்றி சாமியை வணங்கி சென்றனர். கோவிலில் ஏன் இந்த சத்தம் கேட்கிறது என இந்த பகுதியில் வசிக்கும் ராஜன், சாந்தி மற்றும் பொதுமக்கள் பலர் கூறியதாவது:-
 
இந்த கோவிலை தெலுங்கு தேவாங்கர் சமூகத்தினர் பயன்படுத்தி சாமியை வணங்கி வருகிறார்கள். கோவிலில் ஸ்ரீராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 8 ஆண்டுக்கு முன் ராஜகோபுரம் கட்டத்தொடங்கினர். பின்னர் இந்த பணி நின்று விட்டது. நின்று போன கோவில் திருப்பணியை கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் மீண்டும் புதிய நிர்வாகிகள் மூலம் திருப்பணி தொடர்ந்து நடந்தது.
 
கடந்த ஒரு வாரமாக ஏதோ ஒரு காரணத்திற்காக பணிகள் நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் தான் கோவிலில் அம்மன் அழும் சத்தமும், நீண்ட மூச்சு வாங்குவது போன்ற சத்தமும் கேட்கிறது. சில நேரத்தில் சலங்கை சத்தமும் கேட்கிறது. இந்த சத்தம் கேட்காமல் இருக்க வேண்டும் என்றால் தடைப்பட்டுள்ள திருப்பணி மீண்டும் நடக்க வேண்டும். திருப்பணி தடைப்பட்டதால் தான் அம்மன் ஆவேசப்பட்டு அழுகிறார் என்றும் நாங்கள் நம்புகிறோம். உடனே திருப்பணி தொடங்கி கோவிலில் கும்பாபிசேகம் செய்ய வேண்டும்.
 
இவ்வாறு அவர்கள் கூறினர்.
 
சேலம் அம்மாப்பேட்டை ஸ்ரீராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று இரவு 10 மணி அளவில் சத்தம் கேட்க தொடங்கியது. இதை அறிந்த திரளான பெண்கள் கோவில் முன் திரண்டனர். பின்னர் சிறிது நேரத்தில் இந்த சத்தம் கேட்கவில்லை. இதன் பிறகு ஒரு மணிநேரம் கழித்து சலங்கை சத்தம் கேட்டது. பிறகு சத்தம் கேட்கவில்லை. சத்தம் விட்டு விட்டு கேட்டதால் பொதுமக்களும், பக்தர்களும் கோவில் முன்புறமும், கோவில் பின்புறமும் நின்று சாமியை வணங்கினர்.
 
திரளான பொதுமக்கள் கோவில் முன் பூ, பழம் வைத்து வணங்கி சென்றனர். நேற்று இரவு கோவிலில் வந்த சத்தத்தை கேட்க பக்தர்கள் விடிய விடிய கோவில் முன் அமர்ந்து இருந்தனர். இதனால் அம்மாப்பேட்டை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு இருந்தது. கோவிலில் சத்தம் வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இரவு நேரத்தில் மட்டும் இந்த சத்தம் வருவதால் கோவிலுக்குள் பறவை ஏதும் இருக்குமோ என எண்ணிய பக்தர்கள் கோவில் முழுவதும் சுற்றி பார்த்தனர்.
 
ஆனால் பறவை ஏதும் இல்லை. திருப்பணி செய்ய கோவில் முழுவதும் தென்னை மட்டை கட்டப்பட்டுள்ளது. இதில் ஏதும் பறவை இருக்குலாம் என கருதிய பக்தர்கள் தென்னை மட்டைகளை தட்டி பார்த்தனர். இதிலும் எந்த பறவையும் இல்லை. இரவு நேரத்தில்மட்டும் எப்படி சத்தம் வருகிறது என பொதுமக்கள் பரபரப்பாக பேசிக்கொள்கிறார்கள்.



[Continue reading...]

இடைத்தேர்தல்: பொத்து, பொத்துன்னு வாக்காளர்கள் காலில் விழும் வேட்பாளர்கள்

- 0 comments
 
 
 
இடைத்தேர்தலையொட்டி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருக்கும் தேமுதிக வேட்பாளர் முத்துக்குமார் யாரைப் பார்த்தாலும் தடாலென காலில் விழுந்து வாக்கு கேட்கிறார்.
 
சங்கரன்கோவில் இடைத்தேர்தல் வரும் 18ம் தேதி நடக்கிறது. இதையொட்டி தி்முக, அதிமுக, தேமுதிக, மதிமுக, பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தி்முக, தேமுதிக வேட்பாளர்கள் மின்வெட்டை பிரதானமாக வைத்து பிரச்சாரம் செய்கின்றனர். அதிமுக வேட்பாளர் தமிழக அரசின் இலவச திட்டங்களை எடுத்துக் கூறி வாக்கு கேட்கின்றார்.
 
பாஜக வேட்பாளர் முருகன் தமிழகத்தில் ஏற்படும் மின்வெட்டை உணர்த்தும் வகையில் கையில் தீப்பந்தத்துடன் சென்று வாக்கு கேட்கிறார். திமுக வேட்பாளர் சூரியகுமார் முதியவர்கள் காலில் விழுந்து வாக்கு சேகரித்து வருகிறார். முன்னாள் அமைச்சர் கருப்பசாமி வயது வித்தியாசமின்றி பார்ப்பவர் காலில் எல்லாம் விழுந்து வாக்கு சேகரிக்கும் பழக்கம் உடையவர். அவர் தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சராகிய பின்னரும் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க செல்லும்போதும் பொதுமக்கள் காலில் விழுந்து நன்றி தெரிவித்தார்.
 
தற்போது தேமுதிக வேட்பாளர் முத்துகுமார் யாரைப் பார்த்தாலும் தடாலென காலில் விழுந்து ஓட்டு கேட்கிறார். அதிமுக வேட்பாளர் முத்துசெல்வி இதுவரை யார் காலிலும் விழவில்லை. போகிற போக்கில் அவரும் வாக்காளர் காலில் விழுந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கின்றனர் சங்கரன்கோவில் தொகுதி வாக்களர்கள்.



[Continue reading...]

கர்நாடக சட்டசபையில் மேலும் 15 எம்.எல்.ஏ.க்கள் பிட் படம் பார்த்தனர்

- 0 comments
 
 
கர்நாடக சட்டசபை கூட்டம் நடந்து கொண்டு இருந்தபோது அமைச்சர்கள் செல்போனில் ஆபாச படம் பார்த்துக் கொண்டு இருந்தனர். சட்டசபை நிகழ்ச்சியை படம் எடுத்துக் கொண்டு இருந்த தொலைக்காட்சி கேமிராவில் இது பதிவானது.
 
இந்த விவகாரம் கர்நாடக அரசியலில் பெரும் புயலை கிளப்பியது. இதையடுத்து பாரதீய ஜனதாவைச் சேர்ந்த அமைச்சர்கள் லட்சுமண் சபதி, சி.சி.பாட்டீல், கிருஷ்ண பாளேமர் ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.
 
இந்த விவகாரம் தொடர்பாக ஸ்ரீசைலப்பா பிதரூர் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது. கடந்த 2 நாட்களாக இக்குழு பத்திரிகையாளர்களிடம் விசாரணை நடத்தியது. இதை தொடர்ந்து குற்றச்சாட்டில் சிக்கிய 3 முன்னாள் அமைச்சர்களிடம் நேரில் விசாரணை நடத்த பேரவை குழு தீர்மானித்தது.
 
இதற்காக வருகிற 8-ந்தேதி ஆஜராகுமாறு 3 முன்னாள் அமைச்சர்களுக்கும் நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கிடையே ஆபாச படத்தை மேலும் 15 எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் பார்த்தது விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
 
இது குறித்து பேரவை குழுவில் இடம் பெற்று இருக்கும் பாரதீய ஜனதாவைச் சேர்ந்த எம்.எல்.ஏ. நேரு செலேகர் கூறியதாவது:-
 
சட்டசபையில் 3 முன்னாள் அமைச்சர்கள் தவிர பாரதீய ஜனதா, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சியைச் சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் ஆபாச படத்தை பார்த்துள்ளனர். இது எங்கள் விசாரணையில் தெரிய வந்துள்ளது. எங்கள் கடமையை அரசியல் பாரபட்சமின்றி நிறைவேற்றுவோம்.
 
இவ்வாறு அவர் கூறினார்.



[Continue reading...]

பின்லேடன் படத்தில் ஷபனா ஆஸ்மி

- 0 comments
 
 
 
சர்வதேச பயங்கரவாதி பின்லேடன். அல்கொய்தா தீவிரவாத இயக்க தலைவரான இவரை பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத்தில் பதுங்கி இருந்தபோது அமெரிக்க ராணுவம் சுட்டுக்கொன்றது.
 
தற்போது இவரது கதையை காத்ரின் பிஜல்லா சினிமா படமாக தயாரிக்க முடிவு செய்துள்ளார். அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
 
இந்த நிலையில் இப்படத்தில் நடிக்க பாகிஸ்தான் நடிகர், நடிகைகள் மறுத்து விட்டனர். எனவே இந்தியாவை சேர்ந்தவர்கள் அதில் நடிக்க உள்ளனர்.
 
இந்த நிலையில் பாகிஸ்தானியர் கேரக்டரில் இந்தி நடிகை ஷபனா ஆஸ்மி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது இந்த தகவலை ஷபனா ஆஸ்மி மறுக்கவில்லை. இதுகுறித்து ஏற்கனவே தன்னிடம் பேசப்பட்டதாக அவர் கூறினார்.



[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger