தமிழில் கும்கி படத்தில் அறிமுகமான லட்சுமிமேனன் சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, பாண்டியநாடு படங்களில் நடித்தார் அத்தனை படங்களுமே ஹிட். கும்கியில் விக்ரம் பிரபுடனும், சுந்தரபாண்டியன், குட்டிப்புலி படத்தில் சசிகுமாருடன் நடித்தார், பாண்டியநாடு படத்தில் விஷாலுடன் நடித்தார். அடுத்தும் விஷால், விமல், கவுதம் கார்த்திக் என இளம் ஹீரோக்களுடன் நடித்து வரும் லட்சுமி மேனன் மலையாளத்தில் சீனியர் நடிகர்களுடன் நடிக்க தயாராகி விட்டார். முதலில் அவதார் என்ற படத்தில் சீனியர் ஹீரோ திலீபுடன் நடிக்கிறார். அதனை ஜோஷி இயக்குகிறார்.
தமிழில் 5 படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் லட்சுமிமேனன் இடையில் 25 நாட்கள் அவதாருக்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறார். ரஃபி ரிங் ஸ்டாரில் நடித்து வரும் திலீப் அடுத்து அவதாரில் நடிக்கிறார். ஏப்ரல் மாதம் படப்பிடிப்புகள் தொடங்குகிறது.
லட்சுமிமேனன் தமிழில் அறிமுகமாவதற்கு முன்பு வினயன் இயக்கிய ரகுவிண்ட ஸவந்தம் ரஷியா என்ற படத்தில்தான் அறிமுகமானார். அதன் பிறகு ஐடியல் கப்பிள் என்ற படத்தில் நடித்தார். இரண்டு படங்களுமே அங்கு பிளாஃப். இப்போது தமிழில் முன்னணி நடிகையாகவிட்டு மீண்டும் மலையாளத்துக்கு சென்றுவிட்டார்.