Friday 11 April 2014

ஹன்சிகா வாய்ப்பை நயன்தாரா தட்டி பறிக்க முயன்றது உண்மையா?: போட்டு உடைத்த இயக்குனர்

- 0 comments





தமிழ், தெலுங்கு சினிமாவில் நயன்தராவுக்கும், ஹன்சிகாவுக்கும் தொடர்ந்து ஒரு பனிப்போர் நடந்து வருகிறது. ஒருவரையே இருவரும் காதலித்ததில் தொடங்கி, பிரிந்தது வரை இந்த மோதல் தொடர்கிறது. அதைத்தாண்டி ஒருவர் வாய்ப்பை ஒருவர் தட்டிப் பறிக்கும் காரியங்களும் நடந்து வருவது பற்றி அரசல் புரசலாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது.

ஜெயம்ரவி ஜோடியா ஹன்சிகா நடிக்கும் ரோமியோ ஜூலியட் என்ற படத்தை எஸ்.ஜே.சூர்யாவின் உதவியாளர் லக்ஷ்மண் இயக்குகிறார். இந்தப் படத்தில் ஹன்சிகாவுக்கு கிடைத்த வாய்ப்பை நயன்தாரா தட்டிப் பறிக்க முயன்றதாகவும், சம்பளத்தைகூட பாதியாக குறைத்துக் கொள்ள முன்வந்ததாகவும் கூறப்பட்டது. இப்போது இதனை படத்தின் இயக்குனர் லக்ஷ்மண் போட்டு உடைத்திருக்கிறார்.

அவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது: "ரோமியோ ஜூலியட் படத்தின் கதையை கேட்டதும் மற்ற பட வேலைகளை ஒதுக்கி வைத்து விட்டு இந்தப் படத்தில் நடிக்கிறேன் என்று சொல்லிவிட்டு வந்தார் ஜெயம்ரவி. அந்த அளவுக்கு அவருக்கு இந்த கதை பிடித்திருந்தது. நயன்தாராவுக்கும் பிடித்திருந்தது.

ஜெயம் ரவி சார் தற்போது நயன்தாராவுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தின் பிரேக்கில் இதன் கதையை நயன்தாராவிடம் கூறியிருக்கிறார். உடனே நயன்தாராவுக்கு இந்த கதை பிடித்துபோய் நானே நடிக்கிறேன். இந்த கேரக்டர் எனக்காகவே உருவாக்கின மாதிரி இருக்கு. சம்பளத்தைகூட எவ்வளவு வேணும்னாலும் குறைச்சிக்கிறேன்னு சொல்லியிருக்காங்க. அந்த அளவுக்கு அவுங்க இந்தக் கதையில நடிக்க ஆசைப்பட்டாங்க. நாங்கதான் தொடர்ந்து ஒரே ஜோடி அடுத்தடுத்து படத்துல வேண்டாம்னும் வித்தியாசமான காமினேஷனா இருக்கட்டும்னும் ஹன்சிகாவை ஒப்பந்தம் செய்தோம்"

இவ்வாறு லக்ஷ்மண் கூறியிருக்கிறார்.
[Continue reading...]

கால்பந்து வீரர்கள் கைது

- 0 comments



லண்டன்: 'ஸ்பாட் பிக்சிங்கில்' ஈடுபட்ட ஏழு கால்பந்து வீரர்கள், லண்டனில் கைது செய்யப்பட்டனர்.

கிரிக்கெட்டில் போல கால்பந்து போட்டியிலும் 'மேட்ச் பிக்சிங்', 'ஸ்பாட் பிக்சிங்' போன்ற சூதாட்ட சர்ச்சைகள் இருந்து கொண்டு தான் உள்ளது. வடமேற்கு இங்கிலாந்தில் கால்பந்து லீக் கிளப்பை சேர்ந்த 6 வீரர்கள், கடந்த டிசம்பர் மாதம் 'ஸ்பாட் பிக்சிங்' தொடர்பாக கைது செய்யப்பட்டு, ஜாமினில் வெளிவந்தனர். இதுகுறித்து 'தேசிய கிரைம் ஏஜென்சி' (என்.சி.ஏ.,) விசாரித்து வருகிறது. இதனிடையே, 18 முதல் 30 வயது வரையிலான 7 வீரர்கள் நேற்று புதியதாக கைது செய்யப்பட்டனர்.

தவிர, ஜாமினில் வெளியான வீரர்களுக்கும் தொடர்பு இருப்பது உறுதியானதால், 6 வீரர்களும் மீண்டும் கைதாகினர். மொத்தம் 13 பேர் மீது, ஊழல் மற்றும் பணமோசடி குற்றம் சுமத்தப்பட்டு, விசாரணை நடக்கிறது.


[Continue reading...]

இடி இடிக்கும் போது அர்ஜுனா.. அர்ஜுனா என்பது ஏன் தெரியுமா?

- 0 comments



நம் ஊரில் மழை பெய்யும் போது இடி இடித்தால் போதும். அர்ஜுனா...அர்ஜுனா என்பார்கள் பெரியவர்கள். உடனே, நம் வீட்டு இளசுகள், நீ அர்ஜுனான்னு சொன்னவுடனே, அவன் வில்லையும் அம்பையும் எடுத்துகிட்டு வந்து, இடி சத்தமே இல்லாம பண்ணிட போறானாக்கும் என்று கேலி செய்வார்கள். இடிதாங்கி கண்டுபுடிச்சு எத்தனையோ வருஷமாகியும், அதை பில்டிங் மேலே வைக்காம இன்னமும் அர்ஜுனான்னு புலம்பிகிட்டு இருக்கியே! என்று இடியிலிருந்து தப்பும் அறிவியல் உபகரணம் பற்றியும் எடுத்துச் சொல்வார்கள். உண்மையில், உண்மையான அறிவியல் காரணம் என்ன தெரியுமா?இடி பலமாக இடிக்கும் போது, சிலரது காது அடைத்து ஙொய்ங் என்று சத்தம் வரும். இதிலிருந்து தப்ப அர்ஜுனா என்றால் போதும். காது அடைக்காது. அர் என்று சொல்லும் போது, நாக்கு மடிந்து மேல் தாடையைத் தொடும். ஜு என்னும் போது வாய் குவிந்து காற்று வெளியேறும். னா என்னும் போது, வாய் முழுமையாகத் திறந்து காற்று வெளியே போகும். இப்படி காற்று வெளியேறுவதால் காது அடைக்காது. அதற்குத்தான் அர்ஜுனா வை நம்மவர்கள் துணைக்கு அழைத்தார்கள். அர்ஜுனன் கிருஷ்ண பக்தன் என்பதால், அவன் பெயரை உச்சரிப்பது மனதுக்கு பலம் என்ற ஆன்மிக காரணத்துடன், காது அடைத்து விடக்கூடாது என்ற அறிவியல் காரணமும் இதில் புதைந்து கிடக்கிறது. இனிமேல், இடி இடித்தால் அர்ஜுனா கோஷம், இடியையும் தாண்டி ஒலிக்கட்டும்! சரியா! 

[Continue reading...]

டாஸ்மாக்' கடைகளில் விற்பனை அதிகமாகக் காணப்படுகிறது.

- 0 comments


தமிழகத்தில், லோக்சபா தேர்தலையொட்டி, பணப்புழக்கம் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. 'டாஸ்மாக்' கடைகளில், தினமும், 80 கோடி ரூபாய் மதிப்புக்கு மது வகைகள் விற்பனை நடப்பதன் மூலம், இது அம்பலமாகி உள்ளது.


தமிழகத்தில், சென்னை உட்பட, ஐந்து மண்டலங்களில், 6,838 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இங்கு, அரசு நிர்ணயம் செய்துள்ள விலையில், தினமும், சராசரியாக, 67 கோடி ரூபாய் அளவிற்கே, மதுபானங்கள் விற்பனையாகி வந்தன. தமிழகத்தில், வரும் 24ம் தேதி, லோக்சபா தேர்தல் நடக்கிறது. பல ஆண்டுகளுக்குப் பின், தமிழக அரசியல் களத்தில், தி.மு.க., கூட்டணி, பா.ஜ., கூட்டணி, அ.தி.மு.க., - காங்., - கம்யூ., என, ஐந்து முனை போட்டி நிலவுகிறது. இதனால், கடந்த தேர்தல்களை விட, இந்த தேர்தலில், பணப்புழக்கம் அதிகமாகக் காணப்படுகிறது.
[Continue reading...]

கடும் மின்தடை

- 0 comments



மாநிலம் முழுவதும் உள்ள கடும் மின்தடையை தவிர்க்க, சென்னையில் மின்தடை நேரத்தை அதிகரிக்க, மின் வாரிய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். தற்போது, சென்னையில், தினசரி, சுழற்சி முறையில், இரண்டு மணி நேரம் மின்தடை செய்யப்படுகிறது. இதை, நான்கு மணி நேரமாக அதிகரிக்கச் செய்ய வேண்டும் என, மின் வாரிய அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். ஆனால், லோக்சபா தேர்தலை காரணம் காட்டி, தமிழக அரசின் உயர் அதிகாரிகள், இதற்கு அனுமதி அளிக்க மறுத்து விட்டனர்.

தமிழகத்தில், கடந்த, 2007 - 08, 2008 - 09ல், பல பன்னாட்டு நிறுவனங்கள் தொழில் துவங்கின. இதனால், 1,000 மெகாவாட் கூடுதல் மின்சார தேவை ஏற்பட்டது. இதனால், இன்று வரை, மின் பற்றாக்குறை நிலவுகிறது. இது, தற்போது, அதிகரித்தும் உள்ளது.


[Continue reading...]

தங்கம் விலை ரூ.24 உயர்வு

- 0 comments


சென்னை : தங்கம் விலை இன்று(ஏப்ரல் 11ம் தேதி) சவரனுக்கு ரூ.24 உயர்ந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் காலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,778-க்கும், சவரனுக்கு ரூ.24 உயர்ந்து ரூ.22,224-க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.20 உயர்ந்து ரூ.29,710-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை குறைந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை 30 காசுகள் குறைந்து ரூ.46.70-க்கும், பார்வெள்ளி கிலோவுக்கு ரூ.270 குறைந்து ரூ.43,645-க்கும் விற்பனையாகிறது.   
[Continue reading...]
- 0 comments

c';fs; uhrp nk\kh?  






மேஷம்
: இன்று, நீங்கள் பிறருக்காக தகுதிக்கு மீறிய வாக்குறுதி தரவேண்டாம். செயல்களில் அதிக சுறுசுறுப்பு தேவைப்படும். தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். பண வரவை விட செலவு அதிகரிக்கும். நிர்பந்தத்தின் பேரில், பொருள் வாங்க வேண்டாம்.
[Continue reading...]
- 0 comments
உலகிலேயே குள்ளமான (63 செ.மீ) பெண் என கின்னசில் இடம் பெற்ற, நாக்பூரை சேர்ந்த 20 வயது ஜோதி அம்கி தன் முதல் ஓட்டை பதிவு செய்தார்.
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger