தமிழ், தெலுங்கு சினிமாவில் நயன்தராவுக்கும், ஹன்சிகாவுக்கும் தொடர்ந்து ஒரு பனிப்போர் நடந்து வருகிறது. ஒருவரையே இருவரும் காதலித்ததில் தொடங்கி, பிரிந்தது வரை இந்த மோதல் தொடர்கிறது. அதைத்தாண்டி ஒருவர் வாய்ப்பை ஒருவர் தட்டிப் பறிக்கும் காரியங்களும் நடந்து வருவது பற்றி அரசல் புரசலாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது.
ஜெயம்ரவி ஜோடியா ஹன்சிகா நடிக்கும் ரோமியோ ஜூலியட் என்ற படத்தை எஸ்.ஜே.சூர்யாவின் உதவியாளர் லக்ஷ்மண் இயக்குகிறார். இந்தப் படத்தில் ஹன்சிகாவுக்கு கிடைத்த வாய்ப்பை நயன்தாரா தட்டிப் பறிக்க முயன்றதாகவும், சம்பளத்தைகூட பாதியாக குறைத்துக் கொள்ள முன்வந்ததாகவும் கூறப்பட்டது. இப்போது இதனை படத்தின் இயக்குனர் லக்ஷ்மண் போட்டு உடைத்திருக்கிறார்.
அவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது: "ரோமியோ ஜூலியட் படத்தின் கதையை கேட்டதும் மற்ற பட வேலைகளை ஒதுக்கி வைத்து விட்டு இந்தப் படத்தில் நடிக்கிறேன் என்று சொல்லிவிட்டு வந்தார் ஜெயம்ரவி. அந்த அளவுக்கு அவருக்கு இந்த கதை பிடித்திருந்தது. நயன்தாராவுக்கும் பிடித்திருந்தது.
ஜெயம் ரவி சார் தற்போது நயன்தாராவுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தின் பிரேக்கில் இதன் கதையை நயன்தாராவிடம் கூறியிருக்கிறார். உடனே நயன்தாராவுக்கு இந்த கதை பிடித்துபோய் நானே நடிக்கிறேன். இந்த கேரக்டர் எனக்காகவே உருவாக்கின மாதிரி இருக்கு. சம்பளத்தைகூட எவ்வளவு வேணும்னாலும் குறைச்சிக்கிறேன்னு சொல்லியிருக்காங்க. அந்த அளவுக்கு அவுங்க இந்தக் கதையில நடிக்க ஆசைப்பட்டாங்க. நாங்கதான் தொடர்ந்து ஒரே ஜோடி அடுத்தடுத்து படத்துல வேண்டாம்னும் வித்தியாசமான காமினேஷனா இருக்கட்டும்னும் ஹன்சிகாவை ஒப்பந்தம் செய்தோம்"
இவ்வாறு லக்ஷ்மண் கூறியிருக்கிறார்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?