'ஜிகர்தண்டா' படத்தையடுத்து கார்த்திக் சுப்புராஜ் விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா மற்றும் கருணாகரன் , நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். இப்படத்திற்கு 'இறைவி' என பெயரிடப்பட்டுள்ளது.
சி.வி.குமாரின் "திருகுமரன் எண்டெர்டெயின்மெண்ட்" இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்திற்கு தற்போது ஹீரோயின்கள் தேர்வு நடந்துவருகிறது. இதுகுறித்து தயாரிப்பாளர் சிவி.குமார் கூறுகையில் "6 நாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. எனினும் இன்னமும் முடிவு செய்யவில்லை" எனக் கூறியுள்ளார்.
படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார். விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது. 'ஜிகர்தண்டா' வெற்றியால் இந்த படத்திற்கு சற்றே எதிர்பார்ப்பு வலுத்துள்ளது.