உத்தரகாண்ட் மாநிலத்தில் போலீஸ் உயர் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் பெண் போலீஸ் ஒருவர் 2 நாட்களாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்.
திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை தன்னை வற்புறுத்தி பாலியல் உறவு கொண்ட பின்னர் கைவிட்ட போலீஸ் கூடுதல் சூப்பிரண்ட் பர்மிந்திர சிங் தோபால் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் முக்தா மெஹ்ரா (28) டேராடூனில் உள்ள போலீஸ் தலைமையகத்தின் முன்னால் கடந்த திங்கட்கிழமை உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
இதனால், பதற்றமடைந்த போலீஸ் உயர் அதிகாரிகள் முக்தா மெஹ்ராவை தூக்கிச் சென்று வேறு இடத்தில் விடுமாறு போலீசாருக்கு உத்தரவிட்டனர்.
தற்போது நாரி நிகேதன் பகுதியில் தனது உண்ணாவிரதத்தை தொடர்ந்து வரும் அவர், என்னை கொன்று விடுவதாக பல்வேறு தரப்பில் இருந்து மிரட்டல் வருகிறது. எனக்கு நீதி கிடைக்கும் வரை போராட்டத்தை தொடர்வேன் என்று கூறியுள்ளார்.