Thursday, 2 January 2014

நடிகை அனுஷ்கா ஷர்மா வீட்டில் புத்தாண்டு கொண்டாடிய விராட் கோலி !!

- 0 comments
இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் வீரரும், அணியின் துணை கேப்டனுமான விராட் கோலி பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவின் வீட்டிற்கு புத்தாண்டை கொண்டாட நள்ளிரவில் வந்தார். அவர்கள் இருவருக்கிமிடையே காதல் மலர்ந்திருப்பதாக "கிசுகிசு" பரவி வரும் நிலையில் அவர், தனது தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தை முடித்துகொண்டு, சக வீரர்களுடன் மும்பை விமான நிலையம் வந்தடைந்த பின் நேராக அனுஷ்காவின் வெர்சோவா அபார்ட்மெண்ட் வீட்டிற்கு வந்தது குறிப்பிடத்தக்கது. 

விராட் கோலியை தனது வீட்டிற்கு அழைத்து வர பி.எம்.டபிள்யூ மற்றும் ரேஞ்ச் ரோவர் ஆகிய தனது சொகுசு கார்களை விமான நிலையத்திற்கு அனுஷ்கா அனுப்பி வைத்திருந்தார். பி.எம்.டபிள்யூ காரில் கோலி வந்தபோது அவரது உடைமைகள் ரேஞ்ச் ரோவரில் வெர்சோவா அபார்ட்மெண்ட்டிற்கு வந்து சேர்ந்தன. அனுஷ்கா கொடுத்த நள்ளிரவு விருந்தில், கோலி மற்றும் அவருக்கு நெருக்கமான நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். 

விருந்து அதிகாலை வரை நீடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னணி ஷாம்பூ விளம்பரம் ஒன்றில் இணைந்து நடித்த இவ்விருவருக்கம் காதல் மலர்ந்ததாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது. 

 
[Continue reading...]

பசுபதிபாண்டியன் கொலை வழக்கு: சுபாஷ் பண்ணையார் உள்பட 11 பேர் திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜர் Pasupathi pandiyan murder subash pandian with 11 members surrendered

- 0 comments

Img பசுபதிபாண்டியன் கொலை வழக்கு: சுபாஷ் பண்ணையார் உள்பட 11 பேர் திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜர் Pasupathi pandiyan murder subash pandian with 11 members surrendered

திண்டுக்கல், ஜன.2–

தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவன தலைவராக இருந்து வந்தவர் பசுபதிபாண்டியன். இவர் கடந்த 10.1.2011–ம் ஆண்டு திண்டுக்கல் அருகே நந்தவனப்பட்டியில் உள்ள அவரது வீட்டில் மர்மநபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கொலை வழக்கு தொடர்பாக தாடிக்கொம்பு போலீசார் தூத்துக்குடி மாவட்டம் மூலக்கரையை சேர்ந்த சுபாஷ் பண்ணையார் உள்பட 18 பேர் மீது வழக்குபதிவு செய்தனர். இந்த வழக்கில் நிர்மலா, முத்துப்பாண்டி உள்ளிட்ட சிலரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு திண்டுக்கல் 2–வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்து வருகிறது.

தலைமறைவாக இருந்து வந்த சுபாஷ் பண்ணையார் கடந்த மாதம் 3–ந்தேதி திண்டுக்கல் 2–வது மாஜுஸ்திரேட் கோர்ட்டில் ஆஜராகி முன்ஜாமீன் பெற்றுக்கொண்டார்.

இன்று காலை இந்த வழக்கு விசாரணை திண்டுக்கல் 2–வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நீதிபதி சையதுசுலைமான் தலைமையில் வந்தது.

அப்போது சுபாஷ் பண்ணையார், ஆறுமுகம், சண்முகசுந்தரம், அருளானந்தம், நடராஜன், மாடசாமி, ஆனந்தராஜ், தாராசிங், சன்னாசி, ரமேஷ், அருள்மணி ஆகியோர் நேரில் ஆஜரானார்கள். பின்னர் நீதிபதி சுலைமான் மீண்டும் வழக்குவிசாரணையை வருகிற 18.2.2014 அன்று ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

முன்னதாக கோர்ட்டில் ஆஜராவதற்காக வந்த சுபாஷ்பண்ணையாரை மாவட்ட எல்லையான பாண்டியராஜபுரத்தில் இருந்து போலீசார் பலத்த பாதுகாப்புடன் திண்டுக்கல் கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர்.

நீதிபதி முன்பு ஆஜரான அவர் கோர்ட்டை விட்டு வெளியே வரும்போது புகைப்படக்காரர்கள் படம் எடுத்துவிடக்கூடாத வகையில் முகத்தை கையால் மறைத்துக்கொண்டு வேகமாக ஓடிவந்து தயாராக நிறுத்தப்பட்டிருந்த காரில் ஏறிச்சென்றார்.

சுபாஷ் பண்ணையார் கோர்ட்டில் ஆஜரானதையடுத்து கோர்ட்டு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இந்த சம்பவத்தால் இன்று காலை கோர்ட்டு முழுவதும் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

...

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger