Wednesday, 1 January 2014

அரியானாவில் கொடூரம்: டெல்லி இளம்பெண் 8 பேர் கொண்ட கும்பலால் கற்பழிப்பு Delhi based girl gang molested by eight persons in Haryana

Img அரியானாவில் கொடூரம்: டெல்லி இளம்பெண் 8 பேர் கொண்ட கும்பலால் கற்பழிப்பு Delhi based girl gang molested by eight persons in Haryana

சண்டிகர், ஜன. 2-

டெல்லியை சேர்ந்த இளம் பெண் அரியானா மாநிலத்தில் 8 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியை சேர்ந்த அந்த இளம் பெண் அரியானா மாநிலம் பரிதாபாத் பகுதியில் வசிக்கும் தோழியை சந்தித்துவிட்டு டெல்லி திரும்புவதற்காக பல்லப்கர் பஸ் நிலையத்தில் நின்றிருந்தார். அப்போது ஒரு காரில் வந்த 5 பேர் அவரை வலுக்கட்டாயமாக காருக்குள் தூக்கிப் போட்டு கடத்தி சென்றனர்.

ஊருக்கு ஒதுக்குப்புறமான ஒரு பகுதியில் காரை நிறுத்தினர். அந்த இடத்தில் ஏற்கனவே 3 பேர் இவர்களின் வருகைக்காக காத்திருந்தனர். காரை விட்டு அந்த பெண்ணை கீழே இறக்கி அவரை 8 பேரும் கதறக் கதற கற்பழித்தனர்.

அவர்களின் வெறிக்கு ஈடு கொடுக்க முடியாமல் மயக்கமடைந்து கிடந்த அந்த பெண்ணை மீண்டும் காரில் தூக்கிப் போட்டுக் கொண்டு வந்த அவர்கள், பழையபடி பல்லப்கர் பஸ் நிலையம் அருகே இறக்கி விட்டுவிட்டு தப்பிச் சென்று விட்டனர்.

மயக்கம் தெளிந்து எழுந்த அந்த பெண் தனக்கு நேர்ந்த கொடுமைகளை விளக்கி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். விரைந்து செயல்பட்ட போலீசார் அந்த காமக்கொடூரர்களில் 7 பேரை கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் மேலும் ஒரு குற்றவாளியை பிடிக்க தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

பிடிபட்ட 7 பேரும் தேடப்படும் நபரும் பல்வால் அருகேயுள்ள ஹசன்பூர் பகுதியை சேர்ந்தவர்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.
...

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger