Img சில நிமிடங்களில் புத்தாண்டு துவங்கியதால் ஓராண்டு தள்ளி பிறந்த இரட்டை குழந்தைகள் American Twin Babies born in seperate years
நியூயார்க், ஜன.2-
அமெரிக்காவில் 2 பெண்களுக்கு கடந்த டிசம்பர் மாதம் 31-ம் தேதி நள்ளிரவு நடைபெற்ற வெவ்வேறு பிரசவங்களில் இரட்டை குழந்தைகளில் ஒன்று 2013-ம் ஆண்டிலும், மற்றொன்று 2014-ம் ஆண்டிலும் பிறந்துள்ளன.
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள மெட்ஸ்டார் வாஷிங்டன் ஆஸ்பத்திரியில் கடந்த டிசம்பர் மாதம் 31-ம் தேதி இரவு 11.58 மணிக்கு லொர்ரெய்ன் யாலெனி பெகாசோ என்ற பெண்ணுக்கு நடைபெற்ற தலைப் பிரசவத்தில் 6 பவுண்ட் எடையுள்ள அழகிய பெண் குழந்தை பிறந்தது.
அதை தொடர்ந்து, அடுத்த 3 நிமிடங்களில் (அதாவது) 2014 ஜனவரி மாதம் 1-ம் தேதி நள்ளிரவு 12.01 மணிக்கு இரண்டாவதாக 5 பவுண்ட் எடையுடன் அழகிய ஆண் குழந்தை ஒன்றும் பிறந்தது.
இந்த இரட்டை குழந்தைகளின் பிறப்பில் உள்ள கால இடைவெளி வெறும் 3 நிமிடங்கள் மட்டும்தான் என்றபோதிலும், முன்னதாக பிறந்த பெண் குழந்தையின் பிறந்த தேதி 31-12-2013 என்றும், அடுத்ததாக பிறந்த ஆண் குழந்தையின் பிறந்த தேதி 1-1-2014 எனவும் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், டொரொண்டோ நகரில் உள்ள கிரெடிட் வேல்லி ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட லிண்ட்ஸே ஸல்குவெரியோ என்ற பெண்ணுக்கு 31-12-2013 பின்னிரவு 11.52 மணிக்கு 6 பவுண்ட் எடையுள்ள அழகிய பெண் குழந்தை பிறந்தது. இதனையடுத்த 8 நிமிடங்களில் (அதாவது) 1-1-2014 அதிகாலை 12 மணி 38 விணாடிக்கு மற்றொரு பெண் குழந்தையையும் அவர் பிரசவித்தார்.
ஒரே பிரசவத்தில், வெவ்வேறு ஆண்டுகளில் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த 2 தாய்களும், அவர்களின் 4 குழந்தைகளும் நல்ல நிலையில் உள்ளதாக டாக்டர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
...
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?