Wednesday, 17 December 2014

ஆதார் அட்டை வாட்ஸ் அப் ஜோக்ஸ் Adhaar Card whatsapp jokes

- 0 comments

2020 ஆம் வருடத்தில் இருந்து ஒரு காட்சி..

 

(போன்) ஆப்பரேட்டர்: ஹலோ.. பிஸ்ஸா ஹட்..

 

கஸ்டமர்: என்னோட ஆர்டரை எடுத்துக்குறீங்களா ப்ளீஸ்..?

 

ஆப்பரேட்டர்: முதல்ல உங்க ஆதார் கார்டு நம்பரை சொல்றீங்களா சார்..?

 

கஸ்டமர் :ஒரே நிமிஷம்.. என்னோட ஆதார் கார்டு நம்பர் 889861356102049998-45-54610

 

ஆப்பரேட்டர்: ஸோ.. நீங்கதான் மிஸ்டர் சிங்.. நம்பர் 17 மல்லிகை தெரு, காந்தி நகர்ல இருந்து கூப்புடுறீங்க.. உங்க வீட்டு நம்பர் 40942366, ஆஃபீஸ் நம்பர் 76452302 மொபைல் நம்பர் 0142662566. இப்ப நீங்க உங்க மொபைல்ல இருந்து எங்களுக்கு கால் பண்ணி இருக்கீங்க..

 

கஸ்டமர் : வாவ்.. இத்தனை நம்பரையும் எப்புடி சார் புடிச்சீங்க..? ஆப்பரேட்டர்: நாங்க மெயின் சிஸ்டத்தோட கனெக்ட்டடா இருக்கோம் சார்..

 

கஸ்டமர்: வெல்.. எனக்கு ஒரு இறால் பிஸ்ஸா ஆர்டர் எடுத்துக்க முடியுமா..?

 

ஆப்பரேட்டர்: என்னைக் கேட்டா அது வேணாம்னுதான் சொல்லுவேன் சார்..

 

கஸ்டமர்: வாட்..? எதுக்குங்க..?

 

ஆப்பரேட்டர்: உங்க மெடிக்கல் ரெக்கார்ட்ஸ்படி உங்களுக்கு ஹை பிபி இருக்கு.. அதுவுமில்லாம உங்களோட கொலஸ்ட்ரால் லெவலும் அதிகமா இருக்கு..

 

கஸ்டமர்: வாட்..? அப்ப நான் என்னதான்ய்யா சாப்புடுறது..?

 

ஆப்பரேட்டர்: எங்களோட லோ ஃபேட் ஹெக்கியன் மீ பிஸ்ஸாவை ட்ரை பண்ணிப் பாருங்க.. அது உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்..

 

கஸ்டமர்: எனக்கு புடிக்கும்னு உங்களுக்கு எப்புடிப்பா தெரியும்..?

 

ஆப்பரேட்டர்: போன வாரம் நேஷனல் லைப்ரரில இருந்து பாப்புலர் ஹெக்கியன் உணவுகள்ன்ற புத்தகத்தை நீங்க எடுத்திருக்கீங்க சார்..

 

கஸ்டமர்: மை காட்.. போதும்ய்யா.. அப்பன்னா நீங்க சொன்னதையே மூணு பிஸ்ஸா ஃபேமிலி சைஸ்ல குடுத்துருங்க..

 

ஆப்பரேட்டர்: நிச்சயமா சார்.. பத்து பேரு கொண்ட உங்களோட குடும்பத்துக்கு அது நிச்சயமா போதுமானதா இருக்கும்.. பில் அமௌண்ட் 2450 ரூபா சார்..

 

கஸ்டமர்: என் கார்டுலயே நான் பே பண்ணிறலாமா..?

 

ஆப்பரேட்டர்: இல்ல சார்.. நீங்க கேஷாத்தான் தர வேண்டி இருக்கும். உங்க கிரெடிட் கார்டு லெவலை நீங்க க்ராஸ் பண்ணிட்டீங்க. அது மட்டும் இல்லாம போன அக்டோபர்ல இருந்து 1,51,748 ரூபா க்ரெடிட் கார்டு பாக்கி வச்சிருக்கீங்க.. அதுல நீங்க கட்டாம விட்ட உங்க ஹவுசிங் லோனை நான் சேக்கலை..

 

கஸ்டமர்: சரி. அப்பன்னா உங்காளு வர்றதுக்குள்ள நான் பக்கத்துல இருக்குற ஏடிஎம்முக்கு போயி கேஷ் எடுத்து வச்சுர்றேன்..

 

ஆப்பரேட்டர்: அதுவும் முடியாது சார்.. இந்த ரெக்கார்டுபடி உங்க ஏடிஎம் ஓவர்டிராஃப்பட்ட லெவலையும் நீங்க தாண்டிட்டீங்க..

 

கஸ்டமர: ப்ச்.. நான் எப்புடியாவது கேஷ் ரெடி பண்ணி வச்சுர்றேன்.. நீங்க பிஸ்ஸாவை அனுப்புங்க.. எவ்வளவு நேரத்துல வரும்..?

 

ஆப்பரேட்டர்: 45 நிமிஷம் ஆகும்.. அவ்வளவு நேரம் வெய்ட் பண்ண முடியாதுன்னா உங்கக பைக்ல வந்து நீங்களே கூட வாங்கிட்டு போயிறலாம் சார்..

 

கஸ்டமர்: வாட்..?

 

ஆப்பரேட்டர்: எங்க சிஸ்டத்துல இருக்குற தகவல்படி உங்ககிட்ட ஒரு பைக் இருக்கு. அதோட நம்பர் 1122 சார்..

 

கஸ்டமர் : ?? (இந்த படுபாவிக என் பைக் நம்பரை கூட தெரிஞ்சு வச்சிருக்கானுகளே..)

 

ஆப்பரேட்டர்: வேற எதாவது வேணுமா சார்..?

 

கஸ்டமர் : ஒண்ணும் வேணாம்ப்பா.. நீங்க விளம்பரத்துல சொன்னா மாதிரி அந்த மூணு ஃப்ரீ கோக் பாட்டிலையும் சேத்து அனுப்பிருவீங்கள்ல..?

 

ஆப்பரேட்டர்: நார்மலா குடுப்போம் சார்.. ஆனா உங்க மெடிக்கல் ரெக்கார்டுப்படி உங்களுக்கு சுகர் இருக்கு.. அதனால உங்க ஹெல்த்தை மனசுல வச்சு நாங்க அந்த ஆஃபரை உங்களுக்கு தரமுடியாது. சாரி சார்..

 

கஸ்டமர் : ***%&$%%### You $##$%%@!))) (உங்களுக்கு தெரிந்த கெட்ட வார்த்தைகளை ரீப்ளேஸ் செய்து கொள்க)

 

ஆப்பரேட்டர்: சார்.. வார்த்தைகளை கவனமா பேசுங்க சார்.. இப்புடிதான் ஒரு போலீஸ்காரரை கெட்ட வார்த்தைல திட்டினதுக்காக 2012 மார்ச்ல உங்களுக்கு ரெண்டு மாச சிறை தண்டனையும் 5000 ரூபாய் அபராதமும் கிடைச்சதுங்குறதை மறந்துறாதீங்க..

 

கஸ்டமர் : (மயக்கம் போட்டு விழுகிறார்)

 

படித்துப் பாரக்கும்போது இது வேடிக்கையாகத் தோன்றலாம். ஆனால் ஆதார் அட்டை வினியோகிக்கும் அரசின் உள் நோக்கம் இதுதான்.

 

இவ்வாறு முடிகிறது அந்த பகிர்வு!

 

[Continue reading...]

மோடியின் 6 மாத கால ஆட்சியின் சாதனை modi and subramanian swamy

- 0 comments

இது மோடியின் 6 மாத கால ஆட்சியின் சாதனை

முஸ்லிம்களின் ஓட்டுரிமை பறிக்கப்பட வேண்டும் -சு சாமி

தமிழர்களின் படகை நான்தான் பிடித்துவைக்க ராஜபக்க்ஷேவிடம் சொன்னேன் சு.சாமி

பகவத்கீதையை தேசியநூலாக அறிவிக்க வேண்டும் -சுஷ்மா

பாஜக அல்லாதவர்கள் தவறான வழியில் பிறந்தவர்கள்-சாத்வி நிரஞ்சன் ஜோதி

காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சே ஒரு தேசியவாதி -

சாக்ஷி மகராஜ்

இந்தி மொழியை நாடு முழுவதும் பரப்ப வேண்டும் -ராஜ்நாத் சிங்

பாபர் மசூதி இந்தியாவின் அவமான சின்னம் -ஆர்.எஸ்.எஸ்

தாஜ்மகாலை இடிக்க வேண்டும் -உபி ஆர்எஸ். எஸ்

மோடியை பற்றி பேசிவிட்டி வைகோ பாதுகாப்பாக திரும்ப முடியாது ஹெச். ராஜா

கருத்துக்கள் வரவேற்க்கப்படுகிறது.

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger