Saturday 5 November 2011

தமிழ்குறிஞ்சியில் இன்றைய முக்கிய செய்திகள்

- 0 comments
அண்ணா நூலகத்தை இடமாற்றம் செய்ய தடை - உயர்நீதிமன்றம் உத்தரவு  அண்ணா நூலகத்தை இடமாற்றம் செய்ய தடை - உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னையில் கோட்டூர் புரத்தில் இயங்கிவந்த அண்ணா நூலகத்தை இடமாற்றம் செய்வதாக அரசு அறிவித்ததை

அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடமாற்ற அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு  அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடமாற்ற அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு
அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடம் மாற்ற விஜயகாந்த், டாக்டர் ராமதாஸ் உள்பட பல்வேறு

கிராமப்புற இளம் பெண்களுக்கு இலவச சானிட்டரி நாப்கின்  கிராமப்புற இளம் பெண்களுக்கு இலவச சானிட்டரி நாப்கின்
தமிழகம் முழுவதும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் பயன்படுத்துவதற்கு இலவச நாப்கின் வழங்கிட முதல்வர்
தமிழ்ப் பண்பாட்டுச் சின்னங்களை அழிக்கிறார்: ஜெயலலிதா மீது கருணாநிதி குற்றச்சாட்டு  தமிழ்ப் பண்பாட்டுச் சின்னங்களை அழிக்கிறார்: ஜெயலலிதா மீது கருணாநிதி குற்றச்சாட்டு
தமிழ்ப் பண்பாட்டுச் சின்னங்களை, ஒவ்வொன்றாக முதல்வர் ஜெயலலிதா அழித்து வருவதாக திமுக தலைவர்
வடமாவட்டங்களில்  இன்று மழைபெய்யும்  வடமாவட்டங்களில் இன்று மழைபெய்யும்
தமிழ்நாட்டின் வடமாவட்டங்களில் அநேக இடங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) மழை பெய்யும் என்று வானிலை
 பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.80 உயர்வு
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.80 உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வு, நேற்று நள்ளிரவு
 கனிமொழிக்கு ஜாமீன் மறுப்பு
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கனிமொழியின் ஜாமீன் மனுவை டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றம் தள்ளுபடி
 தங்கம் சவரனுக்கு ரூ. 144 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை சவரனுக்கு ரூ. 144 உயர்ந்து ரூ.
 ஐஸ்வர்யாவுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்கும்?
அபிஷேக்பச்சனை திருமணம் செய்த ஐஸ்வர்யா ராய் தற்போது 9 மாதம் கர்ப்பமாக உள்ளார்.
--
     

www.tamilkurinji.com

[Continue reading...]

அறிவு வளர்ச்சிக்கு எதிரான மன நிலையில் ஜெ.- பெ.மணியரசன்

- 0 comments
 
 
 
உலகத் தரம் வாய்ந்த அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்றுவதென்று தமிழக முதல்வர் செயலலிதா எடுத்த முடிவு அரசியல் காழ்ப்புணர்ச்சிக் காரணமாக செய்யப்பட்ட முடிவு என்று குறுக்கிப் பார்த்துவிடக் கூடாது. அறிவு வளர்ச்சி, கல்வி ஆகியவற்றின் மீது அவருக்குள்ள அக்கறையின்மை, அலட்சியம் எதிர்நிலை மனப்போக்கு ஆகியவற்றின் காரணமாகவே இம்முடிவை எடுத்துள்ளார் என்று தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சித் தலைவர் பெ.மணியரசன் கூறியுள்ளார்.
 
இதுதொடர்பாக மணியரசன் விடுத்துள்ள விரிவான அறிக்கை:
 
உலகத் தரம் வாய்ந்த அண்ணா நூற்றாண்டு நூலகத்தை அதற்கென எழுப்பட்ட கோட்டூர்புரம் கட்டடத்திலிருந்து நுங்கம்பாக்கத்திற்கு மாற்றுவதென்று தமிழக முதல்வர் செயலலிதா எடுத்த முடிவு அரசியல் காழ்ப்புணர்ச்சிக் காரணமாக செய்யப்பட்ட முடிவு என்று குறுக்கிப் பார்த்துவிடக்கூடாது. அறிவு வளர்ச்சி, கல்வி ஆகியவற்றின் மீது அவருக்குள்ள அக்கறையின்மை, அலட்சியம் எதிர்நிலை மனப்போக்கு ஆகியவற்றின் காரணமாகவே இம்முடிவை எடுத்துள்ளார். கல்வி மற்றும் அறிவு வளர்ச்சிக்கு எதிரான செயலலிதாவின் மன நிலைக்கு நிறைய சான்றுகள் தரலாம்.
 
முதலில் சமச்சீர் கல்வியை தடை செய்தார்
 
கடந்த மே மாதம் முதலமைச்சரான உடனேயே கல்வியாளர்களால் பாராட்டப்பெற்ற சமச்சீர்க் கல்வியை தடைசெய்தார். தமிழகத்தில் பெரும்பாலானோர் சமச்சீர்க் கல்வியை மீட்க கருத்துகள் கூறினார்கள், போராடினார்கள். பரவலான மக்கள் கருத்தை செயலலிதா மதிக்கவில்லை. உச்ச நீதிமன்றம் கட்டளையிட்ட பிறகு வேறு வழியின்றி வேண்டா வெறுப்பாக சமச்சீர்க் கல்வியை செயல்படுத்தி வருகிறார்.
 
செம்மொழி ஆய்வு மையத்தை சிறுமைப்படுத்தினார்
 
இந்தியஅரசின் கீழ் செயல்படும் செம்மொழி மையம் தமிழக அரசுக்கு சொந்தமான பாலாறு இல்லத்தில் செயல்பட்டு வந்தது. அதில் பொதுப்பணித்துறை அமைச்சரை குடியேற்றி செம்மொழி மையத்தை ஒரு சிறு பகுதியில் செயல்படும் நிலைக்கு உள்ளாக்கினார்.
 
தமிழக அரசின் கீழ் இயங்கி வந்த பாரதிதாசன் செம்மொழி ஆய்வகத்தையும் பாலாறு இல்லத்திலிருந்து வெளியேற்றி எழும்பூரில் ஒரு சிறிய இடத்திற்கு மாற்றினார். அத்துடன் பாரதிதாசன் செம்மொழி ஆய்வு மையத்திற்கு உரிய நிதி ஒதுக்காமலும், உரிய ஆய்வுத்திட்டம் வகுக்காமலும் முடக்கிவிட்டார்.
 
தமிழ்ப் பல்கலைக்கழகத்தையும் விட்டு வைக்கவில்லை
 
தஞ்சையில் இயங்கும் தமிழ்ப் பல்கலைக்கழகத்தையும் செயலலிதா விட்டு வைக்கவில்லை. எம்.ஜி.ஆர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தை உருவாக்கிய போது அதன் விரிவாக்கத்திற்கென ஆயிரம் ஏக்கர் நிலம் ஒதுக்கினார். ஏற்கனவே அவ்வளாகத்தில் வீடுகள் கட்டப்பட்டு தனியாருக்கு விற்பனை செய்தார்கள். இப்பொழுது தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தமிழ்ப் பல்கலைக் கழக வளாகத்திற்குள் கட்ட அ.இ.அ.தி.மு.க. அரசு ஏற்பாடுகள் செய்து வருகிறது.
 
தமிழர்களின் அறிவு வளரக் கூடாது என்பதில் குறியாக இருக்கிறார்
 
இவற்றையெல்லாம் தொகுத்துப்பார்த்தால் தமிழக முதல்வர் செயலலிதாவிற்கு தமிழ் மக்களின் அறிவு வளர்ச்சியிலும், கல்வி வளர்ச்சியிலும் அக்கறையில்லை என்பது மட்டுமல்ல, எதிர்நிலைக் கருத்தை கொண்டுள்ளார் எனபது தெரியவருகிறது. இலவசங்கள் வழங்கி, வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொள்வது என்ற அதிகார அரசியலில் மட்டுமே செயலலிதா குறியாக இருக்கிறார். மக்கள் அறிவு வளர்ச்சிப் பெறுவதும், விழிப்புணர்ச்சி அடைவதும் அவரது வாக்கு வங்கி அரசியலுக்கும் அவரின் எதேச்சாதிகார மனப்போக்கிற்கும் இடையூறு விளைவிக்கும் என்று அச்சப்படுகிறார்.
 
அறிவு வளர்ச்சிக்கும் கல்வி வளர்ச்சிக்கும் எதிரான அவரது மன நிலை, முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு எதிரான அவரது பழிவாங்கும் அரசியலோடு இணைந்து போகிறது.
 
அறிவு தாகத்தின் மீதான தாக்குதல்
 
தமிழ்நாட்டிலுள்ள கல்வியாளர்களும், விழிப்புற்ற மக்களும் கல்வி மற்றும் அறிவு தாகத்தின் மீது செயலலிதா நடத்தும் தாக்குதல்களை முறியடிக்க வேண்டும். கோட்டூர்புரத்தில் இப்பொழுதுள்ள கட்டடத்திலேயே அண்ணா நூற்றாண்டு நூலகம் தொடர்ந்து செயல்படவும், தமிழக முதல்வரின் இடமாற்ற முயற்சியை தடுக்கவும் போராட வேண்டுமென்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.



[Continue reading...]

11-11-11... அரிதான நாளில் ஐஸ்வர்யாராய்க்கு சிசேரியன் மூலம் பிரசவம்

- 0 comments
 
 
 
ஐஸ்வர்யாராய்க்கும், அமிதாப்பச்சன் மகன் அபிஷேக்பச்சனுக்கும் 2007-ம் ஆண்டு ஏப்ரல் 20-ந்தேதி திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின்பும் ஐஸ்வர்யாராய் தொடர்ந்து நடித்தார். தமிழில் "ராவணன்", "எந்திரன்" படங்களிலும் நடித்தார். கடந்த ஜூன் 21-ந்தேதி ஐஸ்வர்யா கர்ப்பமாக இருக்கும் தகவலை மாமனார் அமிதாப்பச்சன் வெளியிட்டார். அதன் பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்தினார்.
 
டாக்டர்கள் ஆலோசனைப்படி சத்தான உணவுகள் சாப்பிட்டு வீட்டில் ஓய்வு எடுத்தார். வயிறு பெரிதாக இருந்ததால் பொது விழாக்களில் பங்கேற்பதையும் தவிர்த்தார். ஐஸ்வர்யாராய்க்கு நவம்பர் மாதம் 2-வது வாரத்தில் பிரசவம் இருக்கும் என டாக்டர்கள் கணித்தனர். நாட்கள் நெருங்குவதால் அமிதாப்பச்சன் குடும்பத்தினர் பரபரப்பாகியுள்ளனர்.
 
சமீபத்தில் உறவினர்கள், நெருங்கிய நண்பர்களை அழைத்து ஐஸ்வர்யாராய்க்கு வளைகாப்பு நிகழ்ச்சியை விமர்சையாக நடத்தினர். பிரசவதேதி நெருங்குவதால் அமிதாப்பச்சன் குடும்பத்தினர் பரபரப்பாகியுள்ளனர். வருகிற 11-ந்தேதி சிசேரியன் மூலம் பிரசவத்துக்கு ஏற்பாடு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அன்றைய தேதி 11-11-11 என்ற அபூர்வ தினமாக கருதப்படுகிறது. எனவே அந்த நாளில் பிரசவம் நடக்க வேண்டும் என்று பச்சன் குடும்பத்தினர் ஆர்வப்படுகின்றனர்.
 
பேரக்குழந்தைக்கு இப்போதே விளையாட்டு பொம்மைகள், துணிமணிகள் என அமிதாப்பச்சனும் அவர் மனைவி ஜெயாபச்சனும் வாங்கி குவிக்கிறார்களாம். இதற்காக அவர்கள் மும்பையில் உள்ள பிரபல பொம்மை கடைகளில் ஏறி இறங்கிய வண்ணம் உள்ளனர்.



[Continue reading...]

ஜெயலலிதாவின் அறிவிப்பு அதிர்ச்சியளிக்கிறது: விஜய்காந்த்

- 0 comments
 
 
 
அண்ணா நூற்றாண்டு நூலக கட்டடம் குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு அதிர்ச்சியளிப்பதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
 
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை கோட்டூர்புரத்தில் ரூ. 200 கோடியில் கட்டப்பட்ட அண்ணா நூற்றாண்டு நூலகம் குழந்தைகள் நல மருத்துவமனையாக மாற்றப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு கண்டு அதிர்ச்சியடைந்தேன்.
 
அவ்வாறு மாற்ற வேண்டிய அவசியம் ஏதும் எழவில்லை. மக்கள் வரிப்பணம், 200 கோடி ரூபாயில், உயர் கல்விக் கட்டடங்கள் நிறைந்துள்ள பகுதியில், நூலகம் அமைந்துள்ளதால், கல்வியாளர்கள் எளிதில் வந்து செல்கின்றனர்.
 
புதிய தலைமைச் செயலகக் கட்டடத்தைப் போல இந்த நூலகம் கட்டப்பட்டதில் முறைகேடு நடந்ததாக எந்த குற்றச்சாட்டும் எழவில்லை. அண்ணாவின் பெயரில் இயங்கும் பல்கலைக்கழகத்துக்கு அருகிலேயே அவரது பெயரில் உலகத்தரம் வாய்ந்த நூலகம் அமைந்திருப்பது பொருத்தமானது.
 
குழந்தைகள் உயர் சிறப்பு மருத்துவமனை ஒன்றை, அரசு அமைக்க விரும்பினால், ஏற்கனவே உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையை மேம்படுத்தியிருக்கலாம். திருமழிசையில் ரூ.2,160 கோடியில் அமைய உள்ள துணை நகரத்திலோ அல்லது தமிழகத்தின் பிற நகரங்களிலோ புதிதாக மருத்துவக் கல்லூரியுடன் கூடிய குழந்தைகள் மருத்துவமனையை அமைக்கலாம்.
 
கடந்த ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது என்பதற்காகவே இதை மாற்றுகிறார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஜனநாயகத்தில் ஆட்சிகள் மாறுவது இயற்கை. முந்தைய ஆட்சியின் திட்டங்களை மாற்றுவதன் மூலம் மக்களின் பணம்தான் விரயமாகிறது.
 
அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மக்கள் பயன்படுத்துகிறார்களா என்பதைப் பார்க்க வேண்டும். வேண்டுமானால் இந்த நூலகத்தை பல்வேறு வசதிகளுடன் மேம்படுத்தலாம். கோயம்பேடு பேருந்து நிலையம் இரண்டு ஆட்சிகளிலும் நிறைவேற்றப்பட்ட திட்டமாகும். எனவே, மக்கள் aநலன் கருதி கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடம் மாற்றும் முடிவை அரசு கைவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.
 
மாற்றுவது கண்டிக்கத்தக்கது-கிருஷ்ணசாமி:
 
இந் நிலையில் திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்றுவது கண்டிக்கத்தக்கது என்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
 
நிருபர்களிடம் அவர் கூறுகையில், திமுக ஆட்சியில் கொண்டு வந்த பல்வேறு நலத்திட்டங்களை அதிமுக அரசு கைவிடுவது நல்லதல்ல. நூலகத்தை மருத்துவமனையாக்குவது என்பது தவறான அணுகுமுறை. அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவமனையாக்கும் திட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். நூலகத்தை மருத்துவமனையாக்குவது நடைமுறைக்கு சாத்தியமாகதத் திட்டம்.
 
5,000 பேர் அமர்ந்து படிக்கக் கூடிய ஒரு நூலகத்தை, அதுவும் செயலுக்கு வந்து 8 மாத காலத்தில், அப்படியே குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றுவோம் என்று இன்றைய அதிமுக அரசு அறிவித்திருப்பது முற்றிலும் தவறானது. இதை எந்த வகையிலும் ஏற்க முடியாது என்றார்.



[Continue reading...]

ஆபாச பட வழக்கு: நெல்லை கோர்ட்டில் நடிகை ஷகீலா ஆஜர்

- 0 comments
 
 
 
பாளையில் உள்ள ஒரு சினிமா தியேட்டரில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகை ஷகீலா நடித்த ஆபாச படம் திரையிடப்பட்டிருந்தது. அந்த படத்தில் சென்சார்போர்டு அனுமதிக்காத ஆபாச காட்சிகள் ஒளிபரப்பப்பட்டதாக புகார் கூறப்பட்டது. அதன் பேரில் பாளை போலீசார் அந்த தியேட்டரில் அதிரடி சோதனை நடத்தி ஆபாச பட ரீல்களை பறிமுதல் செய்தனர்.
 
இது தொடர்பாக தியேட்டர் மேலாளர், நிர்வாகிகள் மற்றும் நடிகை ஷகீலா, நடிகர் தினேஷ் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிந்தனர். இந்த வழக்கு விசாரணை நெல்லை முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதற்காக நடிகை ஷகீலா நெல்லை கோர்ட்டில் ஆஜராகி கையெழுத்து போட்டுவிட்டு கிளம்பி சென்றார்.
 
சாதாரண பெண் போல் உடையணிந்து வந்து சென்றதால் அவரை யாராலும் அடையாளம் காண முடியவில்லை. இந்த வழக்கு விசாரணை அடுத்த மாதம் ஒத்தி வைக்கப்பட்டது.



[Continue reading...]

ஏழாம் அறிவு' என் மனதுக்கு நெருக்கமான படம்: சூர்யா சந்தோஷம்

- 0 comments
 
 
 
சூர்யா, ஸ்ருதிஹாசன் நடிப்பில் தீபாவளி தினத்தன்று வெளியான படம் 'ஏழாம் அறிவு'. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க, உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருந்தார். இப்படம் தெலுங்கிலும் டப்பிங் செய்து வெளியிடப்பட்டுள்ளது.
 
'ஏழாம் அறிவு' படம் குறித்து நடிகர் சூர்யா கூறியிருப்பது " ஏழாம் அறிவு மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்று இருப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
 
'ஏழாம் அறிவு' படம் என் மனதுக்கு நெருக்கமான படம். எனது திரையுலக வாழ்வில் சிறந்த ஐந்து படங்களில் இப்படம் கண்டிப்பாக இடம் பெறும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
 
நமது வரலாற்றில் பல்வேறு சூப்பர் ஹீரோக்கள் இருந்து இருக்கிறர்கள். அவற்றில் ஒருவர் தான் போதிதர்மன். இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ஒரு அற்புதமான இயக்குனர். மரபணு மாற்றம் போன்ற விஷயங்களைக் கூட இப்படி ஒரு படத்தில் இணைத்து அற்புதமாக இயக்கியிருக்கிறார். அதுமட்டுமல்லாது இப்படத்தில் இளைஞர்களுக்கான நல்ல கருத்துக்களும் இருக்கிறது "



[Continue reading...]

மீண்டும் பாட்ஷா !

- 0 comments
 
 
 
'ஏழாம் அறிவு', 'வேலாயுதம்', 'ரா.ஒன்' படங்கள் தீபாவளி தினத்தன்று வெளியாயின. தமிழக மக்களிடம் எந்த படம் வரவேற்பை பெற்று இருக்கிறது, பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் எவ்வளவு என்று பட விமர்சகர்கள் கணக்கிட்டு வருகிறார்கள்.
 
தீபாவளி வெளியீடு முடிந்து எந்த புதுப்படம் வெளியாகும் என்று முறையாக அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் சத்தமில்லாமல் ஒரு படம் இன்று ரீ-ரிலீஸ் செய்யப்பட்டிருக்கிறது. ரஜினி நடிப்பில் மாபெரும் வரவேற்பை பெற்ற 'பாட்ஷா' படம் தான் அது.
 
ரஜினி நடிப்பில் சுமார் ஒரு வருடம் ஒடி பல சாதனைகளை முறியடித்த படம் 'பாட்ஷா'. பாட்ஷா படத்தில் இடம்பெற்ற "நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி" என்கிற வசனம் இன்றும் சிறு குழந்தைகளிடம் பிரபலமாக இருக்கிறது.
 
சென்னையில் அண்ணா, ஸ்ரீநிவாசா, நியூபிராட்வே, மகாலெட்சுமி ஆகிய நான்கு தியேட்டர்களில் இப்படத்தை ரீ-ரிலீஸ் செய்திருக்கிறார்கள்.



[Continue reading...]

ரஞ்சிதா ஆபாச வீடியோ காட்சியுடன் நித்யானந்தா படம் ரிலீசுக்கு தயார்

- 0 comments
 
 
 
பெங்களூர் நித்யானந்தா சாமியாரும் நடிகை ரஞ்சிதாவும் படுக்கை அறையில் நெருக்கமாக இருப்பதுபோல டெலிவிஷனில் ஆபாச படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இதையடுத்து நித்யானந்தாவை போலீசார் கைது செய்தனர். ரஞ்சிதா தலை மறைவானார். பல மாதங்களுக்குபின் ரஞ்சிதா திடீரென பத்திரிகையாளர்கள் முன் ஆஜராகி ஆபாச வீடியோவில் இருப்பது நான் அல்ல என மறுத்தார்.
நித்யானந்தாவும் வீடியோ போலியானது என்றார்.
 
இந்த சர்ச்சைகள் உள்ளடக்கி நித்யானந்தா வாழ்க்கையை பெங்களூரில் சினிமா படமாக எடுக்கின்றனர். அப்படத்துக்கு சத்யானந்தா என பெயரிட்டுள்ளனர். கன்னடம், தெலுங்கு மொழிகளில் இது தயாராகிறது. தமிழில் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர். இதன் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. படத்துக்கு கோர்ட்டு தடை விதிக்குமா என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது.
 
இப்படத்தில் ரஞ்சிதா வேடத்தில் அனுகி நடித்துள்ளார். ரஞ்சிதா இப்படத்தை எதிர்க்கவில்லை என்றும் எப்படி நடிக்க வேண்டும் என்று எனக்கு ஆலோசனைகள் வழங்கினார் என்றும் அனுகி கூறியுள்ளார்.
 
அவர் அளித்த பேட்டியில் ரஞ்சிதா எனக்கு நல்ல தோழியாக இருக்கிறார். சத்யானந்தா படத்தில் ரஞ்சிதா வேடத்தில் நான் நடிப்பது தெரிந்ததும் எனக்கு வாழ்த்து தெரிவித்தார். எப்படி நடிக்க வேண்டும் என்று எனக்கு அறிவுரை வழங்கினார் என்று தெரிவித்தார்.



[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger