பாளையில் உள்ள ஒரு சினிமா தியேட்டரில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகை ஷகீலா நடித்த ஆபாச படம் திரையிடப்பட்டிருந்தது. அந்த படத்தில் சென்சார்போர்டு அனுமதிக்காத ஆபாச காட்சிகள் ஒளிபரப்பப்பட்டதாக புகார் கூறப்பட்டது. அதன் பேரில் பாளை போலீசார் அந்த தியேட்டரில் அதிரடி சோதனை நடத்தி ஆபாச பட ரீல்களை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக தியேட்டர் மேலாளர், நிர்வாகிகள் மற்றும் நடிகை ஷகீலா, நடிகர் தினேஷ் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிந்தனர். இந்த வழக்கு விசாரணை நெல்லை முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதற்காக நடிகை ஷகீலா நெல்லை கோர்ட்டில் ஆஜராகி கையெழுத்து போட்டுவிட்டு கிளம்பி சென்றார்.
சாதாரண பெண் போல் உடையணிந்து வந்து சென்றதால் அவரை யாராலும் அடையாளம் காண முடியவில்லை. இந்த வழக்கு விசாரணை அடுத்த மாதம் ஒத்தி வைக்கப்பட்டது.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?