'ஏழாம் அறிவு', 'வேலாயுதம்', 'ரா.ஒன்' படங்கள் தீபாவளி தினத்தன்று வெளியாயின. தமிழக மக்களிடம் எந்த படம் வரவேற்பை பெற்று இருக்கிறது, பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் எவ்வளவு என்று பட விமர்சகர்கள் கணக்கிட்டு வருகிறார்கள்.
தீபாவளி வெளியீடு முடிந்து எந்த புதுப்படம் வெளியாகும் என்று முறையாக அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் சத்தமில்லாமல் ஒரு படம் இன்று ரீ-ரிலீஸ் செய்யப்பட்டிருக்கிறது. ரஜினி நடிப்பில் மாபெரும் வரவேற்பை பெற்ற 'பாட்ஷா' படம் தான் அது.
ரஜினி நடிப்பில் சுமார் ஒரு வருடம் ஒடி பல சாதனைகளை முறியடித்த படம் 'பாட்ஷா'. பாட்ஷா படத்தில் இடம்பெற்ற "நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி" என்கிற வசனம் இன்றும் சிறு குழந்தைகளிடம் பிரபலமாக இருக்கிறது.
சென்னையில் அண்ணா, ஸ்ரீநிவாசா, நியூபிராட்வே, மகாலெட்சுமி ஆகிய நான்கு தியேட்டர்களில் இப்படத்தை ரீ-ரிலீஸ் செய்திருக்கிறார்கள்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?