ஐஸ்வர்யாராய்க்கும், அமிதாப்பச்சன் மகன் அபிஷேக்பச்சனுக்கும் 2007-ம் ஆண்டு ஏப்ரல் 20-ந்தேதி திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின்பும் ஐஸ்வர்யாராய் தொடர்ந்து நடித்தார். தமிழில் "ராவணன்", "எந்திரன்" படங்களிலும் நடித்தார். கடந்த ஜூன் 21-ந்தேதி ஐஸ்வர்யா கர்ப்பமாக இருக்கும் தகவலை மாமனார் அமிதாப்பச்சன் வெளியிட்டார். அதன் பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்தினார்.
டாக்டர்கள் ஆலோசனைப்படி சத்தான உணவுகள் சாப்பிட்டு வீட்டில் ஓய்வு எடுத்தார். வயிறு பெரிதாக இருந்ததால் பொது விழாக்களில் பங்கேற்பதையும் தவிர்த்தார். ஐஸ்வர்யாராய்க்கு நவம்பர் மாதம் 2-வது வாரத்தில் பிரசவம் இருக்கும் என டாக்டர்கள் கணித்தனர். நாட்கள் நெருங்குவதால் அமிதாப்பச்சன் குடும்பத்தினர் பரபரப்பாகியுள்ளனர்.
சமீபத்தில் உறவினர்கள், நெருங்கிய நண்பர்களை அழைத்து ஐஸ்வர்யாராய்க்கு வளைகாப்பு நிகழ்ச்சியை விமர்சையாக நடத்தினர். பிரசவதேதி நெருங்குவதால் அமிதாப்பச்சன் குடும்பத்தினர் பரபரப்பாகியுள்ளனர். வருகிற 11-ந்தேதி சிசேரியன் மூலம் பிரசவத்துக்கு ஏற்பாடு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அன்றைய தேதி 11-11-11 என்ற அபூர்வ தினமாக கருதப்படுகிறது. எனவே அந்த நாளில் பிரசவம் நடக்க வேண்டும் என்று பச்சன் குடும்பத்தினர் ஆர்வப்படுகின்றனர்.
பேரக்குழந்தைக்கு இப்போதே விளையாட்டு பொம்மைகள், துணிமணிகள் என அமிதாப்பச்சனும் அவர் மனைவி ஜெயாபச்சனும் வாங்கி குவிக்கிறார்களாம். இதற்காக அவர்கள் மும்பையில் உள்ள பிரபல பொம்மை கடைகளில் ஏறி இறங்கிய வண்ணம் உள்ளனர்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?