16 வயது இளம்பெண்ணை விபசாரத்தில்
தள்ளிய 2 பெண்கள் உள்பட 3 பேரை போலீசார்
கைது செய்தனர்.
உத்தரபிரதேசம் மாநிலம், வாரனாசியை சேர்ந்த
16 வயது இளம்பெண் உடல்நலக்
குறைவுக்காக ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள
ஆஸ்பத்திரியில்
தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.
அப்போது பிக்கானரில் வசிக்கும் டோலி என்ற
பெண்ணுடன்
நட்பு ஏற்பட்டு அவளது வீட்டுக்கு சென்றார்.
அப்பகுதியை சேர்ந்த விபசார தரகர் ராம்ரத்தன்
என்பவனுக்கு அந்த இளம்பெண்ணை ரூ.20
ஆயிரத்துக்கு பேரம்
பேசி டோலி விற்று விட்டார்.
விலைக்கு வாங்கிய அந்த
பெண்ணை ராம்ரத்தன் அவரது மனைவி மற்றும்
மும்பையை சேர்ந்த இன்னொரு பெண்
ஆகியோர் வற்புறுத்தி விபசாரத்தில்
ஈடுபடுத்தி பணம் சம்பாதித்து வந்தனர்.
அவர்களது பிடியில் இருந்து தப்பியோடி வந்த
அந்த பெண் போலீசில் புகார்
அளித்ததை தொடர்ந்து ராம்ரத்தன்,
அவரது மனைவி, மும்பை பெண் ஆகிய 3
பேரை போலீசார் கைது செய்தனர்.
தலைமறைவாக இருக்கும்
டோலியை கைது செய்ய தேடுதல்
வேட்டை நடத்தி வருகின்றனர்.