மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் கடந்த
ஞாயிற்றுக்கிழமை, ரெயிலில் சென்ற
இளம்பெண்ணை ஒரு ஆசாமி மானபங்கம்
செய்துள்ளான். செல்போனை பிடுங்கியதுடன்,
அவரை கற்பழிக்க முயன்றதாகவும் தெரிகிறது.
உதவிக்கு ஆள் இல்லாததால் மானத்தைக்
காப்பாற்றிக் கொள்ள அந்த பெண், பேலூர் என்ற
இடத்தில் ரெயில் சென்றபோது கீழே குதித்தார்.
இதில் பலத்த காயம் அடைந்து மயங்கி கிடந்த
அந்த பெண்ணை உள்ளூர் மக்கள்
காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர்.
மருத்துவமனைக்கு சென்று ஆறுதல் கூறிய
முதல்வர் மம்தா பானர்ஜி, தேவையான
மருத்துவ செலவை ஏற்பதாக தெரிவித்தார்.
இந்நிலையில், ஓடும் ரெயிலில்
இளம்பெண்ணை மானபங்கம் செய்த வழக்கில்,
உத்தர்பாராவைச் சேர்ந்த தேப்சங்கர் சாவ் (36)
என்பவரை கொல்கத்தா போலீசார்
நேற்று கைது செய்துள்ளனர்.
Bobs Haircuts Images
-
[image: Bobs Haircuts][image: Bobs Haircuts][image: Bobs Haircuts][image:
Bobs Haircuts][image: Bobs Haircuts][image: Bobs Haircuts][image: Bobs
Haircuts][...
9 years ago
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?