சமீபத்தில் கருணா கனடா சென்றதாகவும் அங்கே புலம்பெயர் தமிழ் மக்களை அவர் சந்தித்ததாகவும் ஒரு செய்தி இணையத்தளவாயிலாக வெளியாகி இருந்தது. ஐ.நா வால் போர் குற்றவாளி மற்றும் சிறுவர்களைப் படையணியில் சேர்த்தது என்பது போன்ற பாரிய குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள கருணா மற்றும் பிள்ளையான் போன்றவர்களுக்கு அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகள் எவ்வாறு விசா கொடுக்கும் என்ற கேள்விகள் இருக்கின்றன. ஆனால் "எதிரி" என்று அழைக்கப்படும் ஒரு இணையமும் மற்றும் ஐ.பி.சி தமிழ் வானொலியும் சேர்ந்து திட்டமிட்டே இந்தப் பரப்புரையை மேற்கொண்டு வந்தது. அப்படியே கருணா கனடா சென்றால் கூட அவர் அங்கே எடுத்துக்கொண்டதாக ஒரு படமும் வெளிவரவில்லையே என்ற சந்தேகத்தில் அதிர்வு இணையம் அச் செய்தியைப் பிரசுரிக்கவில்லை. அதிர்வு இணையம் மேல் சேறு பூசு பல காலம் காத்திருந்த இந்தத் திருட்டுக் கும்பல் இதனைப் பயன்படுத்தி அதிர்வு இணையம் கருணாவின் நண்பன் என்றும் அதனால் தான் அச் செய்தியை நாம் பிரசுரிக்கவில்லை என்றும் பொய்யான திட்ட மிட்ட பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றன.
ஒரு பொறுப்புள்ள ஊடகம் என்ற வகையில் எதையும் ஆராய்ந்து பார்க்காமல் இவர்களைப் போல நாமும் சிறுபிள்ளைத் தனமாக செய்தி எழுத முடியுமா? அதிர்வு இணையமானது இலங்கையில் உள்ள கனேடிய தூதரகத்துடன் தொடர்புகொண்டு கருணாவுக்கு விசா வழங்கப்பட்டதா என வினவியபோது கடந்த 30 திகனங்களுக்குள் அவ்வாறு தாம் விசா எதுவும் வழங்கவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே கருணா கனடாவுக்குச் சென்றது என்பதே மொத்ததில் ஒரு பெரிய பொயாகும் ! இதனை தமிழ் சமூக விரோத இணையமான எதிரியும் தமிழர்களைக் குழப்புவதற்கு என்றே செயல்படும் ஐ.பி.சி வானொலியாலும் திட்டமிட்டு பரப்பப்பட்ட கட்டுக்கதையாகும். இதனை கனேடிய தூதரகம் உறுதிசெய்துள்ளது.
ஐ.பி.சி இன் ஏகபொக உரிமையாளர் சத்தியர் போடும் எலும்புத் துண்டிற்காக வாலாட்டி நிற்கும் எதிரி என்னும் இணையத்தளம் முன்னர் "கலகம்" என்ற பெயரில் நடத்தப்பட்டது. அதன் ஆசிரியர் என்று தன்னைத் தானே கூறிக்கொள்ளும் வன்னி மைந்தனுக்கு தமிழ் எழுதவே தெரியாது என்பது வேடிக்கையான விடையம். 2009ம் ஆண்டு போர் உச்சக்கட்டத்தில் இருந்தவேளை கல்மடுக்கட்டு அணை உடைக்கப்பட்டது ! 5000 ஆமி செய்த்தார்கள் பின்னர் கோத்தபாய பறந்த உலங்கு வானூர்தி சுடப்பட்டது என்பது போன்ற தொடர்ச்சியான பொய்களை கலகம் என்னும் இணையம் எழுதி வந்ததை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். பின்னர் அது எழுதிவந்த பொய்களைத் தாங்க முடியாத அதன் வடிவமைப்பாளர்களில் ஒருவர் அதனை முடக்கினார். பின்னர் இந்த வன்னி மைந்தன் "எதிரி" என்னும் இணையத்தை ஆரம்பித்து அதிர்வில் விளம்பரம் போடவும் கேட்டார். அதிர்வு விளம்பரம் போட்டும் கொடுத்தது. அதற்கான 3 மாதக் காசை இதுவரை அவர் கட்டவே இல்லை. இந்த விளம்பரக் காசைக் கூட கட்டாமல் ஏமாற்றிய வன்னி மைந்தன் தற்போது ஐ.பி.சி சத்தியர் என்னும் பண முதலையுடன் சேர்ந்து அவர் கொடுக்கும் காசுக்காக எதையும் தனது இணையத்தில் எழுதும் நிலையில் உள்ளார்.
இவ்வாறு பணத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் 15,000 பவுண்டுகளை மாதம் செலவழித்து ஐ.பி.சி வானொலிய நடத்திவருகிறார் சத்தி எனும் கந்துவட்டி நபர். இதில் வேடிக்கையான விடையம் என்னவென்றால் இவ் வானொலியை 100 பேர் தான் கேட்க்கிறார்கள். "யாருமே இல்லாத ரீ கடையில் யாருக்கா நீ ரீ போடுகிறாய்" என்று விவேக் கேட்ப்பது போல யாருமே கேட்க்காத வானொலியை நடத்தி அதற்கு மாதம் 15,000 பவுண்டுகளைச் செலவழிப்பதை விட இந்தக் காசைக் கொண்டுபோய் ஈழத்தில் அல்லலுறும் எமது உறவுகளுக்கு கொடுக்கலாமே? ஒருவருக்கு தலா 10 பவுண்டுகள் என மாதம் பிரித்துக் கொடுத்தால் கூட சுமார் 1500 பேருக்கு உதவலாம். இந்த எண்ணிக்கை இவர் ரேடியோவைக் கேட்ப்பவர்கள் எண்ணிக்கையை விட பல மடங்கு அதிகமாக இருக்கும் ஐயா!
அதிர்வின் ஆசிரிய பீடம்
http://tamil-cininews.blogspot.com
http://tamil-starmovies.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?