சேலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு மாநில பா.ஜ.க. பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
யாரிடம்
இருந்தும், எந்த வித அச்சுறுத்தலையும் இது வரை எதிர்கொள்ளாத அவர் மிக, மிக
திட்டமிட்டு கொலை செய்யப்பட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை
எழுப்பியுள்ளது. இதில் உண்மையை கண்டுபிடிக்க சிறப்பு புலனாய்வுக் குழு
அமைத்து முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையே தமிழ்நாட்டில் கடந்த 1980களில் இருந்து பாரதீய ஜனதா மற்றும் இந்து அமைப்பைச் சேர்ந்த தலைவர்கள் மர்மமான முறையில் படுகொலை செய்யப்படுவதாகவும், இதில் தீவிராத அமைப்புகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்றும் கூறப்பட்டது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டது. இதை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் பாரதீய ஜனதா கட்சியினர் முழு அடைப்பு மற்றும் மறியலில் ஈடுபட்டனர்.