Monday, 22 July 2013

கங்கா தேவி சொகுசு ஓட்டலில் கள்ளக்காதலுடன் கைது

திருவான்மியூர் லட்சுமி புரத்தை சேர்ந்தவர்
சரவணன். தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில்
வேலை பார்த்து வந்தார்.
இவரது மனைவி கங்கா தேவி.
இவர்களுக்கு திருமணமாகி 10
ஆண்டு ஆகிறது. குழந்தை இல்லை.
கங்கா தேவி சரவணனுக்கு முறைப் பெண்
ஆவார்.
சரவணன் பார்த்து வந்த வேலை பறிபோனதால்
கங்கா தேவி திருநின்றவூரில் உள்ள தாய்
வீட்டிற்கு சென்று அடிக்கடி பணம்
வாங்கி குடும்ப செலவை கவனித்தார்.

அப்போது திருநின்றவூரில் வசித்த
கார்த்திக்குடன் கங்காதேவிக்கு பழக்கம்
ஏற்பட்து. நாளடைவில் இது கள்ளக்காதலாக
மாறியது. இந்த நிலையில் கடந்த 13-ந்
தேதி முதல் கங்காதேவி திடீரென மாயமானார்.
இதற்கிடையே கங்காதேவி தனது அண்ணனுக்கு
போன் செய்து தன்னை கார்த்திக்
வலுக்கட்டாயமாக கடத்தி செல்வதாக
கூறி இணைப்பை துண்டித்து விட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த கங்கா தேவியின்
அண்ணன் திருநின்றவூர் போலீசிலும்,
சரவணண் திருவான்மியூர் போலீசிலும் புகார்
தெரிவித்தனர். போலீசார்
வழக்குப்பதிவு செய்து மாயமான
கங்கா தேவியை தேடி வந்தனர்.
இந்த நிலையில் வேலூர் மாவட்டம்
காவிரிபாக்கம் அருகே உள்ள நங்கமங்கலம்
ஏரிக்கரையில் சாக்குமூட்டையில் நிர்வாண
நிலையில் பெண் பிணம் கிடந்தது.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்திய
போது ராணிப்பேட்டையில் உள்ள தனியார்
பள்ளி ஆசிரியை ஒருவர் பிணமாக கிடந்தவர்
சென்னையில் மாயமான உறவுப் பெண்
கங்காதேவி என தெரிவித்தார்.
உடலை கங்காதேவியின் அண்ணனும், கணவர்
சரவணனும் பார்த்து அதில் இருந்த டாலர்
மற்றும் கையில் கட்டியிருந்த
கயிறை வைத்து இறந்து போனது கங்காதேவி
என உறுதிபடுத்தினர். இதைத்
தொடர்ந்து கங்கா தேவி கொலை
செய்யப்பட்டதாக போலீசார் வழக்குப்
பதிவு செய்து காதலன்
கார்த்திக்கை தேடி வந்தனர்.
பரபரப்பு திருப்பமாக
கங்காதேவி தனது அண்ணனின் செல்போனில்
தொடர்பு கொண்டு நான் இறக்கவில்லை.
கார்த்திக்குடன் விருப்பப்பட்டு வந்துள்ளேன்.
கோவையில் தங்கியிருக்கிறேன் என
கூறி இணைப்பை துண்டித்து விட்டார்.
இதனால் உறவினர்கள்
நிம்மதி பெருமூச்சு விட்டனர். ஆனால்
போலீசாரின் விசாரணை முடியாமல் மேலும்
சிக்கல் ஏற்பட்டது. கங்கா தேவியை பிடிக்க
போலீசார் முடிவு செய்தனர். இதற்காக
அடையாறு துணை கமிஷனர் பெரோஸ்
அப்துல்கான் உத்தரவின் படி உதவி கமிஷனர்
தேவசிகாமணி, இன்ஸ்பெக்டர்
சந்துரு ஆகியோர் கொண்ட
தனிப்படை அமைக்கப்பட்டது. போலீசார்
தேடுவதை அறிந்த
கங்காதேவி தனது இருப்பிடத்தை மாற்றினார்.
அவ்வப்போது உறவினர்களுக்கு போன்
செய்து போலீஸ் நிலையத்தில் ஆஜராக
பஸ்சில் சென்னை வருவதாக தெரிவித்தார்.
இதனால் நேற்று காலை முதல் திருவான்மியூர்
போலீஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
கங்கா தேவியின் வருகைக்காக அவரது கணவர்
மற்றும் உறவினர்கள் ஏராளமானோர்
காத்திருந்தனர். ஆனால் அவர் வர வில்லை.
கங்காதேவி பேசிய தொலைபேசி எண்
குறித்து போலீசார் விசாரித்த போது அவர்
கோவை பஸ் நிலையம், மேட்டுப்பாளையம்
பகுதியில்
இருந்து பேசியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால் தனிப்படை போலீசார்
கோவை சென்றனர். மேட்டுப்பாளையத்தில்
உள்ள தனியார் சொகுசு ஓட்டலில் காதலன்
கார்த்திக்குடன் தங்கியிருந்த
கங்காதேவியை பிடித்தனர். இருவரையும்
சென்னை அழைத்து வந்துள்ளனர். அவர்களிடம்
ரகசிய இடத்தில் விசாரணை நடந்து வருகிறது.
கங்கா தேவி, காதலனுடன்
சிக்கி இருப்பதை அறிந்த
அவர்களது உறவினர்கள் ஏராளமானோர்
இன்று காலை முதலே திருவான்மியூர்
போலீஸ் நிலையத்தில் திரண்டு இருந்தனர்.
இதனால் அப்பகுதி பரபரப்பாக
காணப்படுகிறது. கங்கா தேவியின் கணவர்
சரவணன் மனைவியின்
நிலை குறித்து சோகத்துடன் அங்கு உள்ளார்.
மனைவி எடுக்கப்போகும்
முடிவு குறித்து அவர் கலக்கத்தில் உள்ளார்.
இன்று மதியத்திற்கு மேல் இது தொடர்பான
பேச்சு வார்த்தை நடக்கும் என தெரிகிறது.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger