பலருடன் உல்லாசமாக இருந்த தாய் 3 வயது மகனை வெட்டிக் கொல்ல முயற்சி!
சிறுவனை வெட்டி கொல்ல முயன்றதாக தாயை போலீசார் கைது செய்தனர்.திருவாரூர் மாவட்டம், குடவாசல், அரித்துவாரமங்கலத்தைசேர்ந்தவர் பரமானந்தன். 30.
இவர் மனைவி நதியா, 28. இவர்களுக்கு சுரேஷ், 3, ஜெயஸ்ரீ,1, ஆகிய குழந்தைகள் உள்ளனர்.நதியாவின் நடத்தை பிடிக்காததால், கடந்த ஆண்டு பரமானந்தம் பிரிந்து சென்றார்.நதியா, இரு பிள்ளைகளுடன், தாய் சரோஜாவுடன் வசித்து வந்தார்.
நதியா, குடித்து விட்டு, பலருடன் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.நேற்று முன்தினம், அப்பகுதியில் உள்ள நரிக்குறவர்களுடன், வீட்டில் மது குடித்து, உல்லாசமாக இருந்ததை, அவரது தாய் சரோஜா கண்டித்துள்ளார்.இதில் ஆத்திரம் அடைந்தவர், அரிவாளால், தன் மூன்று வயது மகனை, வெட்டினார்.
படுகாயம் அடைந்த சிறுவனை, அப்பகுதியினர் மீட்டு, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்த்தனர். குடவாசல் போலீசார், வழக்குப் பதிந்து, நதியாவை கைது செய்தனர்.