Img ஏதாவது செய்து தேவயானியின் பிரச்சினையை தீருங்கள்: அமெரிக்காவிடம் கெஞ்சும் இந்திய வெளியுறவு அதிகாரிகள் Please solve Devayani problem by doing something Indian officials entreat America
புதுடெல்லி, டிச. 23–
அமெரிக்காவுக்கான இந்திய துணைத் தூதர் தேவயானி விசா மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து அவரை கடந்த 12–ந்தேதி அமெரிக்க போலீசார் கைது செய்தனர். பிறகு அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
தேவயானி கைது செய்யப்பட்ட போது அவர் கை விலங்கிடப்பட்டதாகவும், ஆடைகளை களைந்து சோதனை நடத்தியதாகவும் கூறப்பட்டது. இதனால் கொந்தளிப்புக்குள்ளான காங்கிரஸ் தலைவர்கள் அமெரிக்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றனர்.
ஆனால் மன்னிப்பு கேட்க முடியாது என்று திட்டவட்டமாக அறிவித்த அமெரிக்கா, தேவயானி மீதான வழக்கை தொடர்ந்து நடத்தப் போவதாக கூறியது. இதனால் அதிர்ச்சி அடைந்த மத்திய அரசு தேவயானியை ஐ.நா.வுக்கான நிரந்தர தூதராக்கி அவரை தப்புவிக்க முயன்றது. ஆனால் அதற்கும் வெற்றி கிடைக்கவில்லை.
அமெரிக்கா இந்த விவகாரத்தில் வருத்தம் தெரிவித்ததைத் தவிர வேறு எந்த விஷயத்திலும் இறங்கி வரவில்லை. இதனால் மத்திய அரசு வெளியுறவுத்துறை அதிகாரிகள் மூலம் பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளது.
அவர்கள் அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகளிடம், ஏதாவது செய்து தேவயானியை விடுவியுங்கள் என்று கெஞ்ச தொடங்கியுள்ளனர். வெளியுறவுத்துறை மந்திரி சல்மான் குர்ஷித்தும் அமெரிக்கா ஏதாவது செய்ய வேண்டும் என்று வெளிப்படையாக கூறி உள்ளார்.
இதற்கிடையே இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதர்களுக்கு வழங்கியுள்ள அடையாள அட்டைகளை திரும்ப தர வேண்டும் என்று மத்திய அரசு கூறி இருந்தது. அதற்கான கெடு இன்றுடன் முடிகிறது.
...