அன்புடன், தமிழ்ராணி அன்புள்ள ராணி,
உங்கள் கருத்துகளுக்கு நன்றி. நிறைய படித்து வருகிறேன். புரிந்து கொள்ள முயல்கிறேன்
*******************************
தோழர் விஷ்ணு, சிலவற்றை படித்து தெரிந்து கொள்ள முடியாது. அனுபவித்தில்தான் தெரிந்து கொள்ள முடியும். இன்றிலிருந்து சில நாட்களுக்கு நம்மை சுற்றி நிகழும் சராசரி விஷ்யங்களை மட்டும் கவனியுங்கள். அதை மட்டுமே இன்ஃபார்மர் இதழில் பிரசுரியுங்கள் நம்மை பற்றிய ஒரு புரிதலை அது அளிக்கும். அணு சக்தியை நம்மால் கையாள முடியுமா என்பதற்கும் அது விடையளிக்கும்- உங்களுக்கும், உங்கள் வாசகர்களுக்கும்.
- த ரா
******************************************************************
படித்த்தில் பிடித்த்து..
ஒரு பிரபல பதிவரின் சமீபத்திய இடுகை உங்கள் பார்வைக்கு.
ஒரு நாள் அவசரமாக வண்டலூர் செல்ல வேண்டி இருந்த்து. திருனீர்மலை அருகேயிருந்து கிளம்ப வேண்டிய நிலை. பல்லாவரம் வழியாக சென்றால் நேரமாகும்.. எனவே பைபாஸ் பாலத்தில் ஏறி செல்ல நினைத்தேன். அந்த பாலத்தில் ஏற , ஓர் இட்த்தை உடைத்து விட்டு இருந்தார்கள். அதன் வழியாக ஏறினேன். ஏறிய பின் , நான் வலது புறமாக செல்ல வேண்டும். நான் ஏறிய இட்த்தில் இருந்து வலது புறம் செல்ல முடியாது. இட்து புறம் இரண்டு கிலோ மீட்டர் சென்று , யூ டர்ன் எடுத்தால்தான் , வலது புறம் செல்ல முடியும். நான் எப்போதுமே அவசரக்காரன். நேரத்தை வீணாக்க மாட்டேன். எனவே ஒன் வேயாக இருந்தாலும் பரவாயில்லை என முடிவெடுத்து, ஏறிய இட்த்தில் இருந்தே வலது புறம் வண்டியை பறக்க விட்டேன். எதிர் திசையில் வந்த சிலர் என்னை முறைத்தவாறு சென்றனர். ஒரு மிடில் கிளாஸ் பைக் ஆசாமி ஒரு கணம் என்னை எதிர்பார்க்காமல் திணறி விட்டார். என்னவோ திட்டினார். நானும் பதிலுக்கு திட்டினேன். இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் , சாலையின் எதிர்பக்கம் செல்ல , வழி இருப்பது எனக்கு தெரியும். அங்கு சென்று சரியான திசையை அடைவது என் திட்டம்.
அந்த இட்த்தில் கட் செய்கிறேன், டீக்கடையில் இருந்த ஒரு டிராபிக் போலீஸ் என்னை பாய்ந்து வந்து நிறுத்தினார். நோ எண்ட்ய்ரியில் ஏன் வந்தாய்? டாக்குமெண்ட் எடு , லைசன்ஸ் எடு என மிரட்டினான்.ங்கொய்யால, எனக்கு என்ன நோ எண்ட்ரியில் வர வேண்டும் என வேண்டுதலா? அவசர வேலை என சொல்லிப்பார்த்தேன். அவன் கேட்கவில்லை. நான் முன் கோபக்காரன்.ஆனாலும் அவசரமாக போக வேண்டி இருந்த்தால், மேலும் சண்டையை வளர்க்காமல் , நூறு ரூபாயை விட்டெறிந்து விட்டு கிளம்பினேன். ஒரு நூறு ரூபாய்க்காக இப்படி அலையும் காவலர்களை நினைத்தால் வேதனையாக இருந்த்து. இதற்காகவே அவன் டீக்கடையில் காத்து இருப்பானாம். தயவு செய்து அந்த சாலையில் செல்லும்போது , எச்சரிக்கையாக இருங்கள். ஒன் வேயில் செல்ல நேர்ந்தால், அந்த டீக்கடை அருகே கட் செய்யாதீர்கள். அதற்கு முன்பாகவே , ஓர் இட்த்தில் சாலையை பிரிக்கும் தடுப்பை உடைத்து இருப்பார்கள். அதில் ரோட்டை கிராஸ் செய்யுங்கள். முடியாத பட்சத்தில், சாலையின் கடைசி வரை சென்று , இறுதியில் கிராஸ் செய்யுங்கள். தமிழ் நாட்டின் பெரும்பாலான நெடுஞ்சாலை விபத்துகளுக்கு காரணம் , பொறுப்பற்ற முறையில், ஆங்காங்கு நிறுத்தி வைக்கபடும் வாகனங்கள்தான் – ஆய்வு கட்டுரை
செல்போன் பேசியபடி தொடர் வண்டியை இயக்கி, விபத்துக்கு காரணமான ஓட்டுனர் கைது- செய்தி*********************************************************************************** ஒழுக்கத்துக்கும் கட்டுப்பாட்டுக்கும் பேர் போன ஜப்பானிலேயே அணு உலை விபத்து நடந்தால், பொறுப்பின்மையை வீர செயலாக கருதும் இந்தியாவில் அணு உலைகள் கதி என்ன ? - மக்கள் அச்சம்
*********************************************************** மற்றவர்களை குறை சொல்கிறீர்களே. தமிழ் உணர்வு மிக்கவராக காட்டி கொள்ளும் நீங்கள் உங்கள் இதழுக்கு இன்ஃபார்மர் என ஆங்கிலத்தில் எந்த *** ருக்கு பெயர் வைத்தீர்கள் – பிரபல பதிவர் வாசகர் கடிதம்
*********************************************
அன்புள்ள ராணிக்கு, கடந்த சில வாரங்கள் என்னை முழுதும் மாற்றி விட்டன. அதை எல்லாம் பேச நேரமில்லை. விரைந்து செயல்பட்டு கூட்ங்குளம் திட்ட்த்தை நிறுத்தியாக வேண்டும். நான் உட்பட அனைத்து தமிழர்களும் , இந்தியர்களும் ஒரு குழந்தையை போல நல்லவர்களாகவும், முதிர்ச்சி இன்றியும் இருக்கிறோம். அணு தொழில் நுட்பம் எல்லாம் இருக்கட்டும். சாலையில் செல்வது, போன் பேசுவது போன்ற அடிப்படை விஷயங்கள் கூட நமக்கு தெரியவில்லை . பொறுப்பற்ற மக்கள்,கையாலாகாத நிர்வாகம் . இங்கு அணு உலை திட்டம் என்பது , குழந்தை கையில் துப்பாக்கி கொடுப்பது போன்றது. இன்றைய முட்டாள் தலைமுறையின் தவறுகள் வரக்கூடிய புத்திசாலித்தலைமுறையை அழித்து விடக்கூடாது.
வழக்கமான போராட்டம் வேலைக்கு ஆகாது. அணு உலைக்கு பாதுகாப்பு கொடுக்கும் நிலையில் நம் அரசு இயந்திரம் இல்லை என உணர்த்தும் பொருட்டு ஒரு திட்டம் தயாரித்து இருக்கிறோம்.
நண்பர்கள் சிலர் உதவியுடன் சூட்கேஸ் அணு குண்டு தயாரித்து , அனைவர் கண்களிலும் மண்ணை தூவி விட்டு, பாராளுமன்ற கூட்ட்த்தொடர் நடக்கும் போது , ஒரு பத்திரிக்கையாளராக உள்ளே எடுத்து சென்று , திடீரென எடுத்து காட்டுவோம். லஞ்சம் கொடுத்தால் எதுவும் செய்யலாம் என்ற நிலையில், யார் வேண்டுமானாலும் , அணு உலைக்கு ஆபத்து விளைவித்து தமிழ் நாட்டை அழிக்க முடியும் என்ற செய்தி அப்போதுதான் அவர்கள் மனதில் பதியும்.இதற்கு போலீஸ் அதிகாரி எஸ் பி கோகுல் உதவ இருக்கிறார்.
*******************************************************************
தோழர் விஷ்ணு, நான் ராணியின் சகோதரன். உங்கள் முயற்சிகளை ராணி மூலம் அறிந்தேன். ஆனால், சூட்கேஸ் அணுகுண்டை காட்டுவதுடன் நிற்க போவதில்லை. அதை வெடிக்க செய்யவும் போகிறேன் என எஸ் பி கோகுல் சொல்வதாக நெருங்கிய வட்டாரங்கள் மூலம் கேள்வி பட்டேன். அதற்கான குறியீட்டையும் கொடுத்து இருக்கிறீர்களாமே. இதனால் நமக்கு கெட்ட பெயர்தான் மிஞ்சும்.
*******************************************************
Sir, எஸ் பி கோகுலிடம் நான் தவறான குறியீட்டைத்தான் கொடுத்து இருக்கிறேன். கவலை வேண்டாம் . *******************************************************
கோகுல் பாஸ்வேர்ட் கேட்டதை மறுக்க முடியவில்லை. கொடுக்கவும் விரும்பவில்லை எனவே தவ்றான குறியீட்டை கொடுத்து அவரை சமாதானம் செய்ய முடிவெடுத்தேன். S W H2 SF இது அவருக்கு நான் கொடுக்க போவது. ஆனால் S W H2 SP என்பதே சரியானது.
********************************************************************88
அன்புள்ள ராணி, இது நான் எழுதும் கடைசி கடிதமாக இருக்க கூடும். கதிர் வீச்சை பயன்படுத்தி , சோதனை செய்யும் ரேடியோகிராபி டெஸ்டிங்கில் நான் வேலை செய்வது உனக்கு தெரியும். சரியான பாதுகாப்பு இல்லாமல் இதில் ஈடுபட்டு, கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டு விட்டேன். நான் இறப்பது உறுதி. சாவதற்கு கவலைப்படவில்லை. என் உடலை சரியான முறையில் பிரேத பரிசோதனை செய்து, அணு சக்தி எப்போதுமே அழிவு சக்திதான் என தமிழ் நாட்டுக்கு எடுத்து சொல்.
**************************************************
" ஹலோ, வடகரை கோபால் ? " " ஆமாண்டா விஷ்ணு. உன் ரூம்லதான் இருக்கேன் . சீக்கிரம் வா "
" நான் வர லேட் ஆகும்டா. ஹாஸ்பிடல் போறேன். என் மேஜை டிராயர்ல , ஒரு கவர் இருக்கும். அதை எஸ் பி கோகுல் சாரிடம் சேர்க்கணும் "
" டேய் . இதில் ரெண்டு கவர் இருக்கு ..எந்த கவர் ? "
" சிவப்பு கலர் கவர்.. ஊதா மையில் முக்வரி எழுதி இருக்கும். அதைத்தான் கொடுக்கணும். ஊதா கலர் கவர்ல, சிவப்பு மைல அட்ரஸ் எழுதுன கவர் அங்கேயே இருக்கட்டும். கொடுக்க வேண்டியது சிவப்பு கவர், சிவப்பு மை- சாரி- ஊதா அட்ரஸ். ஊதா கவர், சிவப்பு மை அட்ரஸ் அங்கேயே இருக்கட்டும் "
************************************************************************
சாகுல் பெருமூச்சு விட்டார்.
" அதாவது கதிர் வீச்சால பாதிக்கப்பட்டு, விஷ்ணு இறந்துட்டான், இந்த நேரத்துல இது வெளியானா பிரச்சினைனு எல்லோரும் மறைக்கிறாங்க. தமிழ் ராணி என்ன செய்றாங்கணு தெரியல. சரி, டீவிய கவனியுங்க. பிரதமர் பேச்சு முடிய போகுது. சூட்கேஸ் அணுகுண்டை நம் ஆட்கள் காட்டபோறாங்க.. "
" சார்..இங்கே பாருங்க. " திகிலுடன் அலறினான் ரவி.
அனைவர் பார்வையும் அவன் மேல் பதிந்த்து.
" சார். நம் வசம் இருக்கும் சீட்டில் S W H2 SF அப்படீனு இருக்கு. அதாவது தவறான சீட்டு இங்கேயே இருக்கு. சரியான குறியீடு கோகுலிடம் போய்டுச்சு. சிவப்பு கலர் கவர்.. ஊதா மையை கொடுப்பதற்கு பதில், பதட்ட்த்தில் ஊதா கவர், சிவப்பு மையை அந்த குமார் கொடுத்துட்டான். "
சாகுல் அதிர்ந்தார்.
" இன்னும் சில நொடிகளில் கோகுல் அதை வெடிக்க செய்வார். இதை தடுப்பது நம் கடமை.. நான் நாட்டுப்பற்று மிக்க , அரசு அதிகாரியாக இருந்தவன். ஆனால் இதை எல்லாம் பார்த்த பிறகு, தடுக்க விரும்பல. ஆனால் நீங்க யாராவது ஒருத்தர் இதை தடுக்க சொன்னால், உடனே ஆக்ஷன் எடுப்பேன்.. தடுக்க நினைப்பவர்கள் கை தூக்குங்க"
ஒரு கை கூட உயரவில்லை.அடுத்து நடப்பதை பார்க்க விரும்பாமல் டிவியை அணைத்தார்கள்
போட்டோவில் புத்தர் சிரித்து கொண்டு இருந்தார்