Thursday, 3 November 2011

கண் கலங்க வைத்த மிஷ்கின்



ஒரு புத்தகத்தை வாங்கி விட்லாம். ஆனால் அதை எப்போது படிக்க வேண்டும் என அந்த புத்தகம்தான் முடிவு செய்ய முடியும்.
புத்தக கண்காட்சியில் கை நிறைய புத்தகங்கள் வாங்கி செல்பவர்கள் அதை பெரும்பாலும் படிப்பதில்லை. நேரமின்மை போன்ற பல காரணங்கள்.

நான் ஆசைப்பட்டு வாங்கிய புத்தகங்களில் ஒன்று நத்தை போன் பாதையில் என்ற ஹைக்கூ புத்தகம்.

ஆனால் அதை படிக்காமல் குப்பையில் தூக்கி போட்டு இருந்தேன்..

ஏனென்றால் அதை எழுதியவர் மிஷ்கின்.

அவர் மேல் ஏன் இந்த வெறுப்பு  என்பதையெல்லாம் விளக்கி மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்க விரும்பவில்லை.

இப்போது பிரச்சினை முடிந்து விட்ட நிலையில், அந்த புத்தகத்தை எடுத்தேன்.

மிக சிறிய புத்தகம். ஐந்து நிமிடத்தில் படித்து விடலாம் என்ற எண்ணத்தில் படிக்க ஆரம்பித்த நான் திகைத்து போனேன். ஒவ்வொரு பக்கமும் மனதை ஸ்தம்பிக்க வைத்தது.  வேகமாக செல்ல முடியவில்லை. அதன் சாரத்தை உள்வாங்குவது ஒரு தியானம் போல இருந்தது. அதற்கு நேரம் தேவைப்பட்டது.

 இலக்கியத்தை மொழி பெயர்ப்பது சிரமம். அதுவும் கவிதையை மொழி பெயர்ப்பது இயலாத ஒன்று.. ஆனால் இதில் மிக சிறப்பாக மொழி ஆக்கம் செய்து இருக்கிறார் மிஷ்கின்.

சில கவிதைகள் கண்களை நனைய வைத்தன.

களவாடிய வீட்டில் திருடன்
விட்டு சென்றது
ஒரு ஜன்னல் நிலா

தும்பியின்
கண்களில் தெரியும்
தூரத்து மலைகள்

மலர்களே அந்த
தோட்டக்காரனுக்கு கொஞ்சம்
சுதந்திரம் கொடுங்கள்


என்று ஒவ்வொரு கவிதையும் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது..

இந்த ஹைக்கூ நூல் எழுதப்பட்ட பின்னணியை பிரபஞ்சன் வெகு அழகாக முன்னுரையில் சொல்லி இருக்கிறார்..

நிலவை தோழமை ஆக்குவதை காட்டிலும், ஒரு புத்தகம் வேறு என்ன செய்ய வேண்டும் மனிதர்களுக்கு என அவர் சொல்லி இருப்பது 100% உண்மை

படிக்க வேண்டிய புத்தகம்..

நத்தை போன பாதையில் - ஹைக்கூ கவிதைகள்
தமிழில்  , மிஷ்கின்
வம்சி புக்ஸ் வெளியீடு
விலை - ரூ 100 




http://maangaai.blogspot.com



  • http://maangaai.blogspot.com

  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger