விஜய்யின் வேலாயுதம், சூர்யா நடித்த 7 ஆம் அறிவு படங்கள் தீபாவளிக்கு ரிலீசாகி ஓடிக்கொண்டிருக்கின்றன. இவ்விருபடங்களும் மெகா பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளன. வேலாயுதம் படமும் சுமார் ரூ.45 கோடி செலவில் தயாராகியுள்ளது. இதை விட அதிகமாக 7 ஆம் அறிவு படத்துக்கு செலவிட்டு உள்ளனர். இந்த இரு படங்களும் தற்போது இண்டர்நெட்டில் வெளியாகி தயாரிப்பாளர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
தினமும் இப்படங்கள் வெளியாகும் இண்டர்நெட் வெப்சைட்கள் எண்ணிக்கை கூடிய வண்ணம் உள்ளன. வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட பிரிண்ட்களில் இருந்து திருடி இண்டர்நெட்டில் வெளியீட்டு இருப்பதாக கூறப்படுகிறது. சிலர் இது தற்காலிக பிரிண்ட்தான். விரைவில் தரமான பிரிண்ட்கள் திரையிடப்படும் என்ற தகவலையும் சேர்த்து படங்களை இண்டர்நெட்டில் வெளியிட்டு உள்ளனர். இவைகளை ஆயிரக்கணக்கான திருட்டு வி.சி.டி.க்களில் பதிவு செய்து விற்பனை செய்கின்றனர்.
இது குறித்து "வேலாயுதம்" பட தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் கூறும்போது, நிறைய செலவு செய்து படத்தை எடுத்துள்ளோம். அதை இண்டர்நெட்டில் வெளியிட்டு இருப்பது மன வேதனை அளித்து உள்ளது. எங்களுக்கு வரவேண்டிய பணம் திருட்டு வி.சி.டி.க்களில் போகிறது. இதனால் இதயத்தில் ரத்தம் கசிகிறது என்றார். நடிகர் விஜய்யும் அதிர்ச்சியாகி உள்ளார். அவர் கூறும் போது, "வேலாயுதம்" படம் ரிலீசான உடனேயே இண்டர்நெட்டிலும் திருட்டு வி.சி.டி.யிலும் வெளியான தகவல் அறிந்தோம்.
ஆனாலும் எனது ரசிகர்கள் தியேட்டர்களில்தான் படம் பார்க்கின்றனர் என்றார். 7 ஆம் அறிவு தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் கூறும்போது, "இண்டர்நெட்டில் வெளியான படத்தை தடுக்க பல வகைகளில் முயற்சி எடுத்துள்ளோம்" என்றார். சைபர் கிரைம் போலீசிலும் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?