Sunday, 13 October 2013

அஜித் சொன்னா நடக்கும்!’ – சிவா பேட்டி ajith sir special news by siva

- 0 comments

அஜித் சொன்னா நடக்கும்!' – சிவா பேட்டி

by veni
Tamil news, Tamil culture, செய்திகள் ...Yesterday,

பத்தாவது படமான 'வணக்கம் சென்னை' வெளியான உற்சாகத்தில் இருக்கிறார் சிவா. அதனாலேயே தனது காய்ச்சலையும் பொருட்படுத்தாமல் பேசத் தொடங்கினார்.

'சென்னை -28′, 'வணக்கம் சென்னை' இந்த சென்னை உங்களை விடாது போலிருக்கே?

"இந்தப் பேர் பொருத்தமே ரொம்ப சந்தோஷத்தை கொடுக்குது. எல்லாருக்கும் இப்படி அமையுமான்னு தெரியலை. எனக்கு வாழ்க்கையையும் நிறைய நண்பர்களையும் கொடுத்தது இந்த நகரம்தான். எனக்குப் பிடித்த இந்த ஊரின் பெயர் என் படங்களின் தலைப்பாக வருவதில் ரொம்ப சந்தோஷம்."

தமிழ்ப்படம் மாதிரியான படங்களை தொடர்வீங்களா?

"அந்த மாதிரி படங்களை அடிக்கடி பண்ணமுடியாது. இதுவரைக்கும் வந்த என் படங்களின் பார்முலாவிலிருந்து மாறி புதுவிதமான முயற்சிகளில் இனி படம் பண்ணப் போகிறேன்."

சென்னை 28, சரோஜா குழு நண்பர்கள் எல்லாம் அடிக்கடி சந்தித்துக்கொள்வீங்களா?

"சந்தோஷமான, எதாவது பிரச்சினையான நேரங்கள்ல எல்லோரும் கண்டிப்பா ஒண்ணா இருப்போம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலையில் இப்போ பிஸியாயிட்டாங்க. வெங்கட்பிரபு, ஜெய் எல்லாரையும் பார்க்கமுடியலைன்னாலும் அப்பப்போ போன் பண்ணி பேசிடுவோம். எல்லோரும் சேர்ந்து திரும்பவும் படம் பண்ணணும்னு ஆசையா இருக்கு. பார்ப்போம்"

உங்க மனைவி பிரியாவும், ஷாலினி அஜித்தும் பேட்மிட்டன் தோழிகளாமே?

"ஆமாம். இப்பவும் ரெண்டு பேரும் அவ்ளோ ஆர்வமாக விளையாட்டுல கவனம் செலுத்துறாங்க. அஜித்தும் என்னை அவரோட சகோதரராதான் எங்கேயும் அறிமுகப்படுத்துவார். நான் நல்லா வளரணும்னு நினைக்கிற மனிதர் அவர். சென்னை 28 படத்தை முதல் நாளே பார்த்துட்டு வாழ்த்தினார். இப்போ, வணக்கம் சென்னை பாட்டு கேட்டுட்டு.. 'இந்த படம் உனக்கு புது கலர் கொடுக்கும். இனி நல்லா வருவே'னு பாராட்டினார். அவர் சொன்னா நடக்கும்."

கிருத்திகா உதயநிதி, ஜஸ்வர்யா தனுஷ், நடிகர் விஷ்ணு மனைவி ரஜினி இப்படி பலரும் படம் இயக்கத் தொடங்கிட்டாங்களே? உங்க மனைவிவையும் எதிர்பார்க்கலாமா?

"அவங்க ஆர்வம் எல்லாம் பேட்மிட்டன்ல மட்டும்தான்."

கிருத்திகா உதயநிதியின் முதல் படம் இது. எப்படி பண்ணியிருக்காங்க?

"கதை சொல்லும்போதே கேட்க புதுசா இருந்துச்சி. படத்தில் எமோஷனல் பகுதி எல்லாம் ரொம்பவே அழகா நகர்த்தி யிருக்காங்க. விஸ்காம் படிச்சுட்டு சினிமால எவ்வளவு ஆர்வமா இருந்திருக்காங்கனு படப்பிடிப்பில் தெரிந்துகொள்ள முடிந்தது."

பாடலாசிரியர், பாடகர்னு உங்களுக்குள்ளே இருக்கிற மற்ற திறமைகளை மறைத்தே வைத்திருக்கீங்களே?

"படம் இயக்குறதுதான் எனக்கு ரொம்ப இஷ்டம். அது சரியான நேரத்தில் வெளிப்படும். 'வா' படத்தின் ஷூட்டிங்ல திடீர்னு ஒரு பாட்டு தேவைப்பட்டுது. அதுதான் அப்போ எழுதினேன். ரேடியோ சேனலில் வேலைப்பார்க்கும்போது நிறைய பாட்டு எழுதியிருக்கேன். நேரம் கிடைக்கும்போது எல்லாமும் செய்வோம்! கடவுள் இருக்கார். நம்பிக்கையும் இருக்கு!"

The post அஜித் சொன்னா நடக்கும்!' – சிவா பேட்டி appeared first on ekuruvi is a tamil news Portal offering online tamil news.

Show commentsOpen link

[Continue reading...]

ஹன்சிகாவின் அம்மாவுக்கு நன்றி hansika mother

- 0 comments

ஹன்சிகாவின் அம்மாவுக்கு நன்றி

by admin
TamilSpyToday,

நடிகை ஹன்சிகாவின் அம்மா ஒரு டாக்டர் என்று பலருக்கும் தெரியும். அவரது டாக்டர் தொழில் எந்நேரமும் விழித்துக் கொண்டேயிருக்கிறது என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம். (மகளை ஏங்க டாக்டருக்கு படிக்க வைக்கல? )

கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை விமான நிலையத்திலிருந்து தான் தங்கப் போகும் ஓட்டலுக்கு காரில் வந்து கொண்டிருந்தார்களாம் ஹன்சிகாவும் அவரது அம்மாவும். ஓரிடத்தில் சரியான டிராபிக் ஜாம். கார்கள் மெதுவாக ஊர்ந்து கொண்டிருக்க, கதவு வழியாக வெளியே பார்த்த ஹன்சிகாவுக்கு பேரதிர்ச்சி. ஒரு முதியவர் விபத்துக்குள்ளாகி கிடக்க, யாரும் அவரை காப்பாற்ற மனமில்லாமல் அவரை கடந்து போய் கொண்டிருந்தார்கள். சட்டென காரை நிறுத்த சொல்லிவிட்டாராம் ஹன்சிகா.

டிரைவர், நமக்கெதுக்குங்க இந்த வேண்டாத வேலை என்று கேட்பதையும் பொருட்படுத்தாமல் அந்த முதியவரை காப்பாற்றி ஒரு ஆம்புலன்சில் ஏற்றி வைத்தாராம். அது மட்டுமல்ல, ஆம்புலன்சில் முதியவருடன் பயணம் செய்தவரும் ஹன்சிகாவின் அம்மாதான். அவரது உறவினர்கள் மருத்துவமனைக்கு வரும்வரை காத்திருந்து பின்புதான் தான் தங்கியிருக்கும் ஓட்டலுக்கே சென்றார்களாம் இருவரும்.

நல்ல மனம் வாழ்க.

Show commentsOpen link

[Continue reading...]

பைலின் புயலில் சிக்கிய பனாமா நாட்டுக் கப்பலை காணவில்லை: உயிர் காக்கும் படகில் ஊழியர்கள் கண்டுபிடிப்பு Cargo ship feared to have sunk crew members spotted

- 0 comments

பைலின் புயலில் சிக்கிய பனாமா நாட்டுக் கப்பலை காணவில்லை: உயிர் காக்கும் படகில் ஊழியர்கள் கண்டுபிடிப்பு Cargo ship feared to have sunk crew members spotted

Tamil News10 Oct 2013

கொல்கத்தா; அக்டோபர் 13 ;

வங்கக் கடலில் அந்தமான் அருகே உருவான பைலின் புயல் ஓடிஸா மாநிலத்தில் நேற்று கரையைக் கடந்தது. இந்தப் புயல் கரையை நெருங்கியபோது கடும் சூறாவளி வீசியது. இந்தப் புயலில் சிக்கிய பனாமா நாட்டு சரக்குக் கப்பலொன்று கடலில் மூழ்கியிருக்ககூடும் என்று அஞ்சப்படுகின்றது.

எம்.வி பிங்கோ என்று பெயரிடப்பட்டிருந்த அந்தக் கப்பல் 8,000 டன் இரும்புத்தாதுவுடன் கடந்த 11 ஆம் தேதி மேற்கு வங்கத் துறைமுகமான சாகரிலிருந்து சீனாவிற்கு கிளம்பியுள்ளது. இதில் 19 சீன நாட்டவரும், ஒரு இந்தோனேசிய நாட்டவரும் பணியில் இருந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று வீசிய புயலில் சிக்கிய அவர்கள் சாகர் கடற்பகுதியிலிருந்து 25 கி.மீ தொலைவில் கப்பலில்  உயிர் காக்கும் படகில் தவித்துக்கொண்டிருந்ததை பார்த்ததாக கொல்கத்தா துறைமுக சங்கத்தின் தலைவர் ஆர்.பி.எஸ்.கலோன் தெரிவித்தார்.

கடலின் சீற்றம் அதிகரித்திருந்ததால் அவர்கள் கரையை நோக்கி வர முயற்சி செய்திருக்கக்கூடும் என்று அவர் கூறினார். ஆயினும் இவர்களிடமிருந்து எந்தத் தொடர்பும் கிடைக்காததினால் கப்பலின் கதி என்னவென்பது தெரியவில்லை என்று கூறிய கலோன் ஊழியர்கள் பத்திரமாக இருக்கக்கூடும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும்,இந்தியக் கப்பற்படையைச் சேர்ந்த மீட்புப் பணி விமானம் ஒன்றும், நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றும் இந்த குழுவினரைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் கலோன் கூறினார்.பொதுவாக இதுபோன்ற இயற்கைப் பேரழிவுக் காலங்களில் கப்பல்கள் கரை ஒதுங்குவதைவிட நடுக்கடலில் இருப்பதே பாதுகாப்பு என்பது சர்வதேச நடைமுறைகள் ஆகும்.
...
Show commentsOpen link

[Continue reading...]

அதி வேக ’பைலின்’ புயலுக்கு 90 லட்சம் மக்கள் பாதிப்பு, பெருமளவில் வீடுகள், பயிர்கள் சேதம் Cyclone Phailin hits 90 lakh people huge loss to crops houses

- 0 comments

அதி வேக 'பைலின்' புயலுக்கு 90 லட்சம் மக்கள் பாதிப்பு, பெருமளவில் வீடுகள், பயிர்கள் சேதம் Cyclone Phailin hits 90 lakh people huge loss to crops houses

Tamil News10 Oct 2013

கோபால்பூர், அக். 13-

வங்கக்கடலில் உருவான அதிவேக புயலான பைலின் நேற்று இரவு 10 மணிக்கு மேல் ஒடிசாவின் கோபால்பூர் வழியாக கரையை கடந்தது. மணிக்கு 220 கி.மீ. வேகம் வரை சுமார் 6 மணி நேரத்திற்கு வீசிய இந்த பைலின் புயலுக்கு 90 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 2.1/2 லட்சம் வீடுகள் சேதமடைந்துள்ளன.

கடந்த 14 வருடங்களில் ஒடிசா கடற்கரை கண்டிராத இந்த கடும் புயலினால் பெய்த கனமழைக்கு கஞ்சம் மாவட்டத்தில் பயிரிடப்பட்ட  ரூ. 2400 கோடி பயிர்கள் நாசாமாகியுள்ளன. சாலைகளில் உள்ள மரங்கள், மின்கம்பங்கள் விழுந்ததால் தகவல் தொடர்புகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன.

ஒடிசா கோபால்பூர் கடற்கரைய கடந்து சென்ற அந்த பைலின் புயல் பின்னர் பலஹீனமடைந்தது. இதனால் ஒடிசாவில் ஏற்படவிருந்த பெருமளவிலான பாதிப்புகள் தடுக்கப்பட்டன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சமீப வரலாற்றில் இல்லாத அளவிற்கு 9 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர்.

ராணுவம் மற்றும் துணை நிலை ராணுவத்தினர் பெருமளவில் குவிக்கப்பட்டிருப்பதால் மீட்புப்பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றன. இந்த அதிக வேக பைலின் புயல் கோபால்பூர் கடற்கரையை கடந்து செல்வதற்கு முன்பு வீசிய கடும் காற்றுக்கு ஒடிசா மற்றும் ஆந்திராவில் 9 பேர் வரை பலியாகியுள்ளனர்.

கடந்த 1999-ம் ஆண்டு வீசிய அதி வேக புயலுக்கு ஒடிசாவில் 9,885 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த முறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் ஒடிசா மற்றும் ஆந்திரப்பிரதேச மாநிலங்கள் அதி வேக புயலின் பாதிப்பிலிருந்து தப்பித்துள்ளன.

பைலின் புயலின் தாக்கம் ஒடிசாவின் பராதீப், கோபால்பூர் மற்றும் ஆந்திர மாநிலம் ஸ்ரீகாக்குலம் வரை இருந்தது. இதனால் அருகிலுள்ள பீகார், சத்திஸ்கார், ஜார்கண்ட், மேற்குவங்கம் மற்றும் ஆந்திரப்பிரதேச
மாநிலங்களில் பெருமளவிலான கனமழை பொழிய எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் இமாயமலையில் உள்ள நேபாளில் சென்று பலஹீனமடையும் என்றும் கூறப்படுகிறது.
...
Show commentsOpen link

[Continue reading...]

மும்பை: இளம்பெண்ணை கற்பழித்ததாக கார் டிரைவர் கைது Mumbai young girl molested car driver arrest

- 0 comments

மும்பை: இளம்பெண்ணை கற்பழித்ததாக கார் டிரைவர் கைது Mumbai young girl molested car driver arrest

Tamil News

மும்பை,அக்.13-

தானா மாவட்டம் நாலாசோப்ரா கிழக்கு சந்தோஷ் பவன் பகுதியை சேர்ந்தவர் ராஜு வர்மா (வயது38). கார் டிரைவரான இவர் அப்பகுதியை சேர்ந்த 17 வயது இளம் பெண்ணை வெளியிடங்களை சுற்றிப்பார்க்க தனது காரில் அழைத்து சென்றார்.

அப்போது காரில் வைத்து ராஜு வர்மா பலவந்தப்படுத்தி கற்பழித்தாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவுசெய்து கார் டிரைவர் ராஜுவை கைது செய்தனர். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து போலீசார் ராஜுவை வசாய் கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தினர். கோர்ட்டில் அவரை வருகிற 15 -ந்தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்குமாறு போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.  
...
Show commentsOpen link

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger