பைலின் புயலில் சிக்கிய பனாமா நாட்டுக் கப்பலை காணவில்லை: உயிர் காக்கும் படகில் ஊழியர்கள் கண்டுபிடிப்பு Cargo ship feared to have sunk crew members spotted
Tamil News10 Oct 2013
கொல்கத்தா; அக்டோபர் 13 ;
வங்கக் கடலில் அந்தமான் அருகே உருவான பைலின் புயல் ஓடிஸா மாநிலத்தில் நேற்று கரையைக் கடந்தது. இந்தப் புயல் கரையை நெருங்கியபோது கடும் சூறாவளி வீசியது. இந்தப் புயலில் சிக்கிய பனாமா நாட்டு சரக்குக் கப்பலொன்று கடலில் மூழ்கியிருக்ககூடும் என்று அஞ்சப்படுகின்றது.
எம்.வி பிங்கோ என்று பெயரிடப்பட்டிருந்த அந்தக் கப்பல் 8,000 டன் இரும்புத்தாதுவுடன் கடந்த 11 ஆம் தேதி மேற்கு வங்கத் துறைமுகமான சாகரிலிருந்து சீனாவிற்கு கிளம்பியுள்ளது. இதில் 19 சீன நாட்டவரும், ஒரு இந்தோனேசிய நாட்டவரும் பணியில் இருந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று வீசிய புயலில் சிக்கிய அவர்கள் சாகர் கடற்பகுதியிலிருந்து 25 கி.மீ தொலைவில் கப்பலில் உயிர் காக்கும் படகில் தவித்துக்கொண்டிருந்ததை பார்த்ததாக கொல்கத்தா துறைமுக சங்கத்தின் தலைவர் ஆர்.பி.எஸ்.கலோன் தெரிவித்தார்.
கடலின் சீற்றம் அதிகரித்திருந்ததால் அவர்கள் கரையை நோக்கி வர முயற்சி செய்திருக்கக்கூடும் என்று அவர் கூறினார். ஆயினும் இவர்களிடமிருந்து எந்தத் தொடர்பும் கிடைக்காததினால் கப்பலின் கதி என்னவென்பது தெரியவில்லை என்று கூறிய கலோன் ஊழியர்கள் பத்திரமாக இருக்கக்கூடும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும்,இந்தியக் கப்பற்படையைச் சேர்ந்த மீட்புப் பணி விமானம் ஒன்றும், நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றும் இந்த குழுவினரைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் கலோன் கூறினார்.பொதுவாக இதுபோன்ற இயற்கைப் பேரழிவுக் காலங்களில் கப்பல்கள் கரை ஒதுங்குவதைவிட நடுக்கடலில் இருப்பதே பாதுகாப்பு என்பது சர்வதேச நடைமுறைகள் ஆகும்.
...
Show commentsOpen link
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?