3–வது நாளாக மழைநீடிப்பு: குஜராத் வெள்ளத்தில் மிதக்கிறது 50 ஆயிரம் மக்கள் மீட்பு three days rain continue gujarat flood 50 thousand people Recovery
Tamil NewsToday, 05:30
ஆமதாபாத், செப். 27–
குஜராத்தில் 3 நாட்களாக பெய்த மழையில் பல நகரங்கள் வெள்ளத்தில் மதிக்கிறது. 50 ஆயிரம் மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தில் கடந்த 4 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. சவுராஷ்டிரா பகுதியில் உள்ள 7 மாவட்டங்களில் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மத்திய குஜராத்தில் உள்ள வதோதரா மற்றும் ராஜ்கோட், ஆமதாபாத் நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. ராஜ்கோட்டில் சுரங்கப் பாதைகள் நீரில் மூழ்கி நீச்சல் குளம் போல் காட்சி அளிக்கிறது.
சவுராஷ்டிரா பகுதியில் வெள்ளம் பாதித்த பகுதியில் இருந்து 3000 மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 2 நாட்களில் மட்டும் 7,700 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். இதே போல் மற்ற பகுதிகளில் வெள்ளத்தில் தந்தளித்த 50 ஆயிரம் மக்கள் மீட்கப்பட்டு பள்ளிக்கூடங்கள் போன்ற பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ராஜ்கோட்டில் 36 மணி நேரத்தில் 500 மி.மீ மழை கொட்டியது. ராஜகோட்டுக்கு குடிநீர் வழங்கும் பாதர் அணை நிரம்பி ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. இதே போல் அஜி நயாரி அணைகளும் நிரம்பி வழிகின்றன. இதனால் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ராஜ்கோட், வதோதரா பகுதிகளில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. அரசு அலுவலகங்கள் இயங்கினாலும் குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்கள் பணிக்கு வந்தனர்.
ராஜ்கோட்டில் ரெயில் தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியதால் மும்பை ரெயில் உள்பட நீண்ட தூரம் செல்லும் ரெயில்கள் 8 ரத்து செய்யப்பட்டன. இதில் வதோதரா வழியாக செல்லும் விஸ்வாமித்ரி ஆற்றில் 29.6 அடி உயரத்துக்கு அபாய அளவை தொட்டவாறு வெள்ளம் ஓடுகிறது. கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சாமா, ரபோரா நகரங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. பல இடங்களில் பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது. மீட்பு பணிக்கு ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது. அவர்கள் வதோதராவில் வெள்ளத்தில் சிக்கிய 159 பேரை மீட்டனர்.
இதே போல் 4 படகுகளில் 4 அதிகாரிகள் தலைமையில் 45 மீட்பு படை வீரர்கள் மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
...
Show commentsOpen link
[Continue reading...]