சூர்யா நடிக்கும் 'எஸ்கிமோ காதல்'! சூது கவ்வும் இயக்குனரின் அடுத்த படைப்பு!
by admin
TamilSpyToday,
சிறிய பட்ஜெட் படம். சொல்லிக்கொள்ளும் அளவுக்கு கதை இல்லை. படத்தில் ஹீரோ ஒரே ஒருமுறை தான் சிரிப்பார். ஆனால் அந்த திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்று, அதிக வசூலை அள்ளியது. சூது கவ்வும் திரைப்படத்தைப் பற்றி எதிர்காலத்தில் இப்படி ஒரு விளக்கம் கொடுக்கப்படலாம்.
மாபெரும் வெற்றிக்குப் பிறகு, சூது கவ்வும் திரைப்படத்தின் இயக்குனர் நளன் குமாரசாமி இயக்கவிருக்கும் திரைப்படத்திற்கு 'எஸ்கிமோ காதல்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. நளனின் முதல் திரைப்படத்தைப் போலவே, இந்த திரைப்படத்தையும் திருமுருகன் எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிக்கிறது.
சூதுகவ்வும் திரைப்படம் எந்த அளவிற்கு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்ததோ அதே அளவிற்கு திரையுலகினரின் கவனத்தையும் ஈர்த்தது உண்மை தான். சிங்கம் திரைப்படத்திற்குப் பிறகு ஜாலியாக ஒரு படம் நடிக்கவேண்டும் என்று சில மாதங்களுக்கு முன்பு நளனிடம் சூர்யா ஒரு ஸ்கிரிப்ட் கேட்டார். நளன் சுருக்கமாக கூறிய கதை மிகவும் பிடித்துவிட முழு கதையையும் தயார் செய்யச் சொல்லியிருந்தார்.
லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருந்த திரைப்படமும் தாமதமாகிக்கொண்டிருக்க, தற்போது நளன் 'எஸ்கிமோ காதல்' என்ற திரைப்படத்தை துவங்குவதால் சூர்யாவுடன் நளன் இணையும் படம் தான் இது என்று கோடம்பாக்கத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
பல பெண்களை தனது வலையில் விழவைத்த ராணுவ வீரர்!. உண்மைச் சம்பவம், காணொளி
Show commentsOpen link
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?