சாம்பியன்ஸ் லீக்: மும்பை அணி வெற்றி CLT20 league stage Mumbai won
Tamil NewsYesterday, 05:30
ஜெய்ப்பூர், செப். 28-
5-வது சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. போட்டியின் 7-வது நாளான நேற்று (வெள்ளிக்கிழமை) ஜெய்ப்பூரில் நடைபெறும் ஏ பிரிவு லீக்கில் ஐ.பி.எல். சாம்பியன் மும்பை இந்தியன்சும், தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த லயன்சும் சந்தித்தன. இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.
இதையடுத்து முதலில் களம் இறங்கிய லயன்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் குவித்தது.
பின்னர் 141 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய மும்பை அணி 18.3 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எளிதாக எட்டியது.
மும்பை அணியில் அதிபட்சமாக 63 ரன்கள் (4 பவுண்டரி, 3 சிக்சர்) குவித்த டெயின் ஸ்மித் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
...
Show commentsOpen link
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?