Thursday 22 March 2012

அமெரிக்கா தீர்மானம் நிறைவேறினால்...தமிழர்களை மிரட்டும் சிங்கள ராணுவம்

- 0 comments
 
 
ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானம் நிறைவேறினால் தமிழர் பகுதிகளில் பெரும் கலவரம் வெடிக்கும், ரத்த ஆறு ஓடும் என்பது போல பீதியைக் கிளப்பி வருகிறார்களாம். மேலும் யாழ்ப்பாணத்திலும் தேவையில்லாமல் பெருமளவில் ராணுவம் குவிக்கப்பட்டு வருகிறதாம்.
 
இலங்கையின் இந்த அச்சுறுத்தல் நடவடிக்கைகளால் யாழ்ப்பாணம் மற்றும் தமிழர் பகுதிகள், கொழும்பில் வசித்து வரும் தமிழர்கள் பெரும் பீதியுடன் காணப்படுகின்றனர். சிங்களர்கள் மீண்டும் ஒரு இனவெறித் தாக்குதலை நடத்தலாம் என்ற அச்சத்தில் அவர்கள் உள்ளனர். இருந்தாலும் பூணைக்கு இப்போதாவது ஒரு மணியைக் கட்ட சர்வதேச சமுதாயம் முன்வந்துள்ளதே என்ற வேகத்தில் அவர்கள் உள்ளனர். எனவே என்ன வந்தாலும் சந்திப்போம், அமெரிக்க தீர்மானம் வெற்றி பெறட்டும் என்ற மன நிலையில் அவர்கள் உள்ளனராம்.
 
யாழ்ப்பாணம் துரையப்பா அரங்கில் சாகச நிகழ்ச்சி என்ற பெயரில் இலங்கை ராணுவத்தினர் சர்க்கஸ் காட்டிக் கொண்டுள்ளனராம். இதற்காக கடந்த 2 நாட்களாகவே ராணுவத்தினர் பெருமளவில் வந்து குவிந்துள்ளனர். ஆயுதங்களைப் பிடித்தபடி பஸ்களில் வந்திறங்கிக் கொண்டுள்ளனர்.
 
இதனால் மன ரீதியாக மக்களை ராணுவம் அச்சுறுத்தி வருகிறதாம். இருந்தாலும் யாழ்ப்பாண மக்களிடையே ஒருவிதமான திடமான மன நிலை காணப்படுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இதற்கிடையே கொழும்பில் சிங்கள ரவுடிக் கும்பல்கள் இப்போதே தமிழர்களை மிரட்ட ஆரம்பித்து விட்டனவாம். தீர்மானம் எங்களுக்குப் பாதகமாக இருந்தால் அவ்வளவுதான் என்று தமிழர்களை அவர்கள் மிரட்டி வருகிறார்களாம். அதைத் தட்டிக் கேட்காமல் வேடிக்கை பார்க்கிறதாம் போலீஸ்.
 
பல தமிழர்கள் இந்த மிரட்டல்களால் அச்சமடைந்துள்ளனர். பாதுகாப்பு கருதி வீடுகளை விட்டு வெளியேறி வேறு பகுதிகளுக்குச் செல்ல ஆரம்பித்துள்ளனராம்.
 
பல தமிழர்கள் இத்தகைய அச்சுறுத்தல்கள் குறித்து ஐ.நா. அலுவலகம், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளின் தூதரக அலுவலகங்களுக்கு தகவல் அனுப்பி தங்களுக்கு ஏதும் நேராமல் பார்த்துக் கொள்ளுமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனராம்.
 
சிங்களர்கள் மீண்டும் இனவெறித் தாக்குதலில் ஈடுபட்டால் அதிலிருந்து தப்பிப்பது தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தமிழர்களும், தமிழர் கட்சிகளும் மேற்கொண்டு வருவதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.



[Continue reading...]

திருச்சியில் மத்திய அரசை கண்டித்து சீமான் தலைமையில் உண்ணாவிரதம்

- 0 comments

திருச்சி ஜங்சன் காதி கிராப்ட் அலுவலகம் முன்பு நாம் தமிழர் இயக்கம் சார்பில் தொடர் முழுக்க பட்டினி போராட்டம் இன்று நடைபெற்றது. இலங்கைக்கு எதிரான போர் குற்றவிசாரணைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் காங்கிரஸ் அரசை கண்டித்து நாம் தமிழர் இயக்க தலைவர் டைரக்டர் சீமான் தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் பங்கேற்ற சீமான் பேசியதாவது:-

இலங்கை ராணுவத்தால் ஈழதமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை சேனல்-4 தொலைக்காட்சி ஒளி பரப்பி உலகத்துக்கு வெளிச்சம் போட்டு காட்டியது. ஜெனீவா கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவிப்பது போல ஏமாற்றும் அறிவிப்பை பிரதமர் வெளியிட்டு உள்ளார்.

அதில் என்ன எழுதப்பட்டு உள்ளது என்பது கூட பிரதமருக்கு தெரியாது. இவர்கள் ஓட்டெப்பில் கலந்து கொள்ள மாட்டார்கள். இலங்கையில் தமிழர்கள் வசித்த பகுதி முழுக்க சிங்களர் பகுதியாக மாறிவிட்டது.

முல்லை தீவு 'முல்லிதூவி' என்று மாறிவிட்டது. தமிழர்கள் அங்கு இல்லை. சிங்களர் வாழும் இலங்கை, தமிழர் வாழும் ஈழம் என்று வாக்கெடுப்பு நடத்த கோரி போராட்டம் நடத்தப் போகிறோம்.

முல்லை பெரியாறில் கேரள அரசு அணை கட்ட போவதாக கூறியுள்ளது. அந்த அணை கட்டினால் தமிழ் நாட்டில் ஒரு கேரள காரர் கூட இருக்க முடியாது.

கூடங்குளம் பிரச்சினையில் ஜெயலலிதா நம்பி வந்தவர்களை ஏமாற்றி விட்டார். திட்டமிட்டு மின் வெட்டை ஏற்படுத்தி அணு உலையை திறக்க போகிறார்கள். இதை கண்டித்து 23-ந்தேதி சென்னையில் எனது தலைமையில் போராட்டம் நடைபெறும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த போராட்டத்தில் திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபு, புறநகர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரவீன், மாநில தலைமை கழக பேச்சாளர் கல்யாணசுந்தரம், திலீபன், ஜெயசிங், பாலமுரளி, கோட்டை குமார் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர். ஏராளமான இலங்கை தமிழர்களும் இதில் பங்கேற்றனர்.
[Continue reading...]

இதெல்லாம் ஒரு தோல்வியா?... விஜயகாந்த் பேச்சு!

- 0 comments
 
 
இடைத் தேர்தல் என்பது தமிழகத்தில் ஒரு சடங்காக மாறி விட்டது. கடந்த திமுக ஆட்சியின்போது 11 முறை இடைத் தேர்தல்களில் அதிமுக தோல்வியுற்றது. எனவே சங்கரன்கோவில் இடைத் தேர்தல் தோல்வியை பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
 
சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் தேமுதிக 4வது இடத்திற்குத் தள்ளப்பட்டு டெபாசிட்டையும் பறி கொடுத்தது. இதுகுறித்து கட்சித் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி, பண பலத்தைப் பிரயோகித்து இந்தத் தேர்தலை சந்தித்தது ஆளும் கட்சியான அதிமுக.
 
இந்தத் தேர்தலே உழைப்பிற்கும், பண பலத்திற்கும் இடையிலான போட்டியாகவே இருந்தது. அதில் பண பலம் வென்றுள்ளது. கடந்த திமுக ஆட்சியின்போது 11 இடைத் தேர்தல்கள் நடந்தன. அதில் ஒன்றில் கூட அதிமுக வென்றதில்லை.
 
பொதுத் தேர்தலில் மக்கள் தெரிவிக்கும் கருத்துக்கள், இடைத் தேர்தல்களில் பிரதிபலிப்பதில்லை. மேலும் தமிழகத்தி்ல இடைத் தேர்தல் என்பது ஒரு சடங்காக மாறி விட்டது. எனவே இதை பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை.
 
தொடர்ந்து மக்கள் பிரச்சினைகளுக்காக உழைப்போம், தொடர்ந்து போராடுவோம் என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.



[Continue reading...]

இடிந்தகரைக்குள் போலீஸ் நுழைவதாக பரவிய தகவலால் பரபரப்பு

- 0 comments
 
 
இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு அளித்ததற்கு பிரதமர் மன்மோகன் சிங், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி ஆகியோருக்கு திமுக தலைவர் கலைஞர் நன்றி தெரிவித்துள்ளார்.
 
மேலும் அவர் கூறியுள்ளதாவது,. இலங்கையில் தமிழர்கள் தாக்கப்படும் அபாயத்தை தடுக்க வேண்டும். தமிழீழம் அமைவது தான் திமுகவின் குறிக்கோள். சகோதர யுத்தம் தான் தமிழீழம் அமைவதை கெடுத்துவிட்டது.
 
 
இலங்கை புரிந்த கொடுமைக்கு பரிகாரம் தேட ஐ.நா. தீர்மானம் வழிவகுக்கும். தீர்மானத்தால் உலகத்தின் முன் இலங்கை தலைகுனிந்து விளக்கம் தர வேண்டியுள்ளது. தமிழருக்கு நடந்த கொடுமை தொடராமல் தடுக்க தீர்மானம் உதவும். தீர்மானத்தின் மீது எதிர்த்து வாக்களித்த நாடுகளுக்கு மனிதாபிமானத்தின் மீது நம்பிக்கை இல்லை என்றார்.



[Continue reading...]

சட்டம் ஒரு இருட்டறை ரீமேக்கில் மீண்டும் இணையும் கார்த்திகா,பியா.

- 0 comments

விஜயகாந்த் நடிப்பில் வெளி வந்து வெற்றிகரமாக ஓடிய படம் சட்டம் ஒரு இருட்டறை. எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கி இருந்தார்.இப்படம் தற்போது ரீமேக் ஆகிறது. நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது. கதாநாயகனாக விக்ரம் பிரபு நடிப்பார் என பேச்சு அடிபடுகிறது. இவர் நடிகர் பிரபுவின் மகன் ஆவார். தற்போது பிரபு சாலமன் இயக்கும் கும்கி படத்தில் நடித்து வருகிறார். கதாநாயகிகள் வேடத்துக்கு கார்த்திகா, பியா இருவரும் தேர்வாகியுள்ளனர்.

இவர்கள் கோ ஹிட் படத்தில் இணைந்து நடித்திருந்தனர். கார்த்திகாவும், பியாவும் சமீபத்தில் எஸ்.ஏ.சந்திரசேகரனை சந்தித்து இந்த படத்தில் நடிப்பது பற்றி பேசி முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

பியா இதுபற்றி கூறும்போது, சட்டம் ஒரு இருட்டறை ரீமேக்கில் நடிக்க தன்னை அணுகி பேச்சுவார்த்தை நடத்துகின்றனர் என்றார்.இந்த படத்தை எஸ்.ஏ. சந்திரசேகரன் தயாரிக்க உள்ளார். புதுமுக டைரக்டர் இயக்குவார் என தெரிகிறது.

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger