Showing posts with label ஆபாசப் படம். Show all posts
Showing posts with label ஆபாசப் படம். Show all posts

Friday, 23 August 2013

அலுவலக கம்ப்யூட்டர்களில் ஆபாசப் படம் karnataka warns govt officials against porn in office computers

- 1 comments
அரசு அலுவலகங்களில் உள்ள கம்ப்யூட்டர்களின் மூலம் வலைத்தளங்களுக்கு சென்று ஆபாசப் படங்களை பார்க்கும் அரசு ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கர்நாடக அரசு எச்சரித்துள்ளது.

கர்நாடக அரசுக்கு சொந்தமான வலைத்தளத்தின் மூலம் ஆபாச உடலுறவுக் காட்சிகளை ஒளிபரப்பும் வலைத்தளங்களுக்கு சென்று அரசு ஊழியர்கள் நேரத்தை வீணடிப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. இதனையடுத்து, சி.பி.ஐ. போலீசார் விசாரித்தபோது கர்நாடக அரசின் தலைமைச் செயலகமான விதான சவுதாவில் இருந்து வெளிநாடுகளில் உள்ள ஆபாச வலைத்தளங்களை பல அரசு ஊழியர்கள் பார்த்து ரசித்ததாக தெரிய வந்தது.

இந்நிலையில், கர்நாடக சட்டம் மற்றும் சட்டமன்ற விவகாரத்துறை மந்திரி ஜெயச்சந்திரா நேற்று செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கையில், ‘இவ்விவகாரம் தொடர்பாக எனக்கு ஏதும் தெரியாது அரசு ஊழியர்கள் தவறு செய்தது தெரிய வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்தார்.

கடந்த ஆண்டு கர்நாடக சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது எம்.எல்.ஏ.க்கள் சிலர் கைபேசிகளில் ஆபாசப் படங்களை பார்த்து ரசித்தக் காட்சி ஊடகங்களில் ஒளிபரப்பாகி சந்தி சிரித்தது நினைவிருக்கலாம்.
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger