Monday, 21 April 2014

முத்தக் காட்சியில் ஹீரோவின் உதட்டை கடித்த கங்கனா ரணாவத்!

- 0 comments



தமிழில் தாம்தூம் உள்பட சில படங்களில் நடித்தவர் கங்கனா ரணாவத். இப்போது இந்தியில் கவர்ச்சி கன்னி. தற்போது அவர் ரிவால்வார் ராணி என்ற படத்தில் நடித்து வருகிறார். சம்பல் பள்ளத்தாக்கு கொள்ளைக்கார ராணியாக நடித்து வருகிறார். படத்தில் கங்கனா நடித்துள்ள முத்தக்காட்சி தான் இப்போது பாலிவுட்டில் ஹாட் டாபிக். முத்தக்காட்சி இப்போ சர்வசாதரணம் தான் என்றாலும் இது கொஞ்சம் ஸ்பெஷல். இந்த முத்தக்காட்சியில் நடித்தபோது ஹீரோ வீர்தாசின் உதட்டை கடித்து கங்கனா ரத்தகாயமாக்கியது தான் அந்த சிறப்பு.

சில நாட்களுக்கு முன்பு மும்பை ஸ்டூடியோ ஒன்றில் இந்த முத்தக்காட்சியை எடுத்தார்கள். ஹீரோ வீர்தாசுக்கு முத்தக் காட்சி புதுசு. அதனால் தயக்கத்துடன் நடித்தார். இதனால் பல டேக்குகள் போனது. எரிச்சலுற்ற கங்கனா, ஒரு டேக்கில் வீர்தாசின் உதட்டை இழுத்து வைத்து கடித்துவிட, வீர்தாஸ் உதட்டில் ரத்தம் கசிந்தது. கங்கனா ஷூட்டிங் ஸ்பாட்டை விட்டு வெளியேறி விட்டார். பின்னர் ஒரு வாரத்துக்கு பிறகு வீர்தாசுக்கு பயிற்சி கொடுத்து கங்கனாவை சமாதானப்படுத்தி நடிக்க வைத்திருக்கிறார்கள். இந்த ரத்தமுத்த காட்சியை மேக்கிங் வீடியோவில வெளியிட்டு படத்துக்கு பரபரப்பு பப்ளிசிட்டியை உருவாக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.
[Continue reading...]

இந்தியில் நடிக்க விரும்பாத அனுஷ்கா

- 0 comments


சூப்பர் என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமான அனுஷ்கா, அதைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு படங்களில் மட்டுமே, எட்டு ஆண்டுகளாக நடித்து வருகிறார். தற்போது தான், 'ஜக்குதாதா என்ற கன்னட படத்தில், முதன் முதலாக நடிக்கிறார். இதுபற்றி, அவர் கூறுகையில், 'நான் பிறந்தது கர்நாடகத்தில் உள்ள, மங்களூர் தான் என்றபோதும், இதுவரை கன்னட படங்களில் நடிக்க வாய்ப்பு அமையாதது, மனதளவில் வருத்தமாக இருந்தது. இப்போது, அந்த வாய்ப்பு கிடைத்திருப்பதால் சந்தோஷமாக உள்ளது என்றார். 'அப்படியென்றால், அடுத்து இந்தி சினிமா பிரவேசம்தானா? என்று அனுஷ்காவைக் கேட்டால், 'அப்படியெல்லாம் எதுவும் இல்லை. என்னைப் பொறுத்தவரை தமிழ், தெலுங்கு படங்களில் நடிப்பதே, எனக்கு திருப்தியாக உள்ளது. இந்தி படங்களில் நடிக்க வேண்டும் என, எப்போதும் ஆசைப்பட்டது இல்லை என்கிறார்.
[Continue reading...]

மனீஷா கொய்ராலாவின் வாழ்க்கையும் சினிமாவாகிறது!

- 0 comments


தென்னிந்திய நடிகையான சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை கதையை இந்தியில் த தர்ட்டி பிக்சர்ஸ் என்ற பெயரில் படமாக்கினர். ஆரம்பத்தில் கவர்ச்சி நடிகையின் வாழ்க்கையை படமாக்குவதா? என்று எதிர்ப்புகள் எழுந்த நிலையில், அதில் நடித்த வித்யாபாலனையும் சில அமைப்புகள் விமர்சித்தன. ஆனால் எதையும் பொருட்படுத்தாமல் சில்க் வேடத்தில் நடித்த வித்யாபாலனுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்ததோடு அவரது கேரியரில் அது முக்கியமான படமானது. அதையடுத்து, அப்படத்தை சிலம்பாட்டம் சனாகானின் நடிப்பில் தமிழிலும், மலையாளத்திலும் படமாக்கினர்.

இந்த நிலையில், தற்போது பிரபல இந்தி நடிகையான மனீஷா கொய்ராலாவின் வாழ்க்கையையும் படமாக்கும் முயற்சி நடக்கிறது. இந்தியில் தயாராகும் இப்படம் தமிழ், தெலுங்கில் டப் செய்யப்பட உள்ளதாம்.

மேலும், மனீஷா கொய்ராலா சினிமாவில் நடிகையானது முதல், அவர் 2010ல் சாம்ராட் தஹால் என்ற தொழிலபதிபரை திருமணம் செய்து கொண்டது.பின்னர் இரண்டே வருங்களில் கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்தது. அதையடுத்து, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனீஷா, அதை எதிர்த்து போராடிக் கொண்டிருப்பது வரையிலான முக்கிய அம்சங்கள் அப்படத்தில் இடம்பெறுகிறதாம். இப்படத்திலும் வித்யாபாலன்தான் நடிப்பார் என்று செய்திகள் பரவியபோதும், இன்னும அது உறுதிப்படுத்தப்படவில்லை.
[Continue reading...]

கோடை காலத்தில் சூடேற்றும் இலியானா!

- 0 comments


பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என எல்லா வுட்டுகளிலும் இப்போது இலியானாதான் கவர்ச்சிவுட். வருண் தவானுடன் லிக் லாக் கிஸ்சில் தொடங்கி தனக்கு வருண் தவான் மாதிரி குணங்கள் கொண்ட மாப்பிள்ளைதான் வேண்டும் என்று பரபரப்பை கிளப்புவது வரை இலியானாதான் இப்போது நியூஸ் பாயிண்ட். இப்போது அடுத்த அதிரடி.

ஆண்களுக்கான ஆங்கில பத்திரிக்கை ஒன்றுக்கு கோடைக்காலத்துக்கேற்ற உடை என்ற பகுதியில் இலியானா கொடுத்திருக்கும் டூ பீஸ் போஸ்கள்தான் இப்போது நெட்டுகளில் பொங்கி வழிந்து கொண்டிருக்கிறது.

இந்த போஸ்களுக்காக இலியானா பெரும் தொகையை சம்பளமாக பெற்றிருக்கிறார். தேரா ஹீரோ படத்திலும் பிகினி டிரஸ்சில் கேட்வாக் போட்டிருப்பதாகவும் செய்திகள் பரவிக் கொண்டிருக்கிறது. தமிழ்படமான நண்பனில் இடுப்பை மட்டும் வெட்டி வெட்டி ஆட்டியவர் இப்போது துட்டுக்காக உரிச்ச கோழியாகவும் தயாராகிவிட்டார் என்கிறார்கள்.
[Continue reading...]

கோச்சடையான் பார்த்து ஏமாற்றம் அடைந்தேன்: ரஜினி ஓப்பன் டாக்

- 0 comments




ரஜினி, தீபிகா படுகோனே நடித்துள்ள கோச்சடையான் படம் மோசன் கேப்சன் டெக்னாலஜியில் உருவாகி உள்ள முதல் படம். இந்தப் படம் தெலுங்கில் விக்ரம் சிம்பா என்ற பெயரில் வெளிவருகிறது. இதன் புரமோஷன் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடந்தது. அதில் தாசரி நாராயணராவ், ராமநாயுடு. நடிகர் மோகன்பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர். ரஜினியின் மனைவி லதா, படத்தின் இயக்குனரும் ரஜினியின் மகளுமான சவுந்தர்யா ஆகியோரும் சென்றனர்.

நிகழ்ச்சியில் ரஜினி பேசியதாவது:
இரண்டறை வருடங்களுக்கு முன்பு ராணா படத்தில் நடிக்க வேண்டியது. அப்போது திடீர்னு உடம்பு சரியில்லாம போனதால டாக்டர்கள் நடிக்க கூடாதுன்னு சொல்லிட்டாங்க. அப்புறம் உடம்பு சரியாகி வந்த பிறகு லட்சுமி கணபதி பிக்சர்ஸ் சுப்பிரமணியம் என்னிடம் வந்து கோச்சடையான் கதையை சொன்னார். அதை என் மகளே இயக்குவதால் நடிக்க ஒப்புக் கொண்டேன். கடந்த இரண்டரை வருடமாக சவுந்தர்யா சிரமப்பட்டு இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்.
இந்தப் படத்தை 3டியில் பத்து நிமிடங்கள் பார்த்தேன் பெரும் ஏமாற்றம் அடைந்தேன். ஆனால் பத்து நிமிடத்துக்கு பிறகு கதையில் என்னை ஒன்றிப்போக செய்துவிட்டது படம். ஒரு ரசிகனா அனிமேஷன் படம் என்பதையே மறந்து ரசித்து பார்த்தேன். பொதுவாக உயிரோடு இல்லாதவங்களைத்தான் அனிமேஷன் படமாக எடுப்பார்கள். நான் உயிரோடு இருக்கும்போதே என்னை வைத்து அனிமேஷன் படம் எடுத்ததை பார்க்கும்போது எனக்கே ஒரு மாதிரியாகத்தான் இருந்தது. ஆனால் படத்தின் கதையும், விறுவிறுப்பும் என் எண்ணத்தை மாற்றிவிட்டது. 
எனக்கு சினிமா டெக்னாலஜி பற்றி எதுவும் தெரியாது. அதை தெரிந்தவர் கமல்தான். எந்திரன், கோச்சடையான் படங்கள் கமல் நடிக்க வேண்டியது. டெக்னாலஜி தெரியாத நான் நடிக்க நேர்ந்தது கடவுள் எனக்கு கொடுத்த பரிசு.
இவ்வாறு ரஜினி பேசினார்.
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger