Sunday, 9 October 2011

ஏழாம் அறிவு படத்தில் தமிழீழ மக்களுக்காய் சமர்பணமான ஒரு பாடல்!(Video in)

- 0 comments
 

ஹரிஸ் ஜெயராஜ் தற்போது இசையமைத்திருக்கும் ஏழாம் அறிவு படத்தின் பாடல்களில் ஒரு பாடலை இலங்கைத் தமிழர்களுக்கு சமர்ப்பிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.அப்படத்தில் இடம்பெற்றுள்ள இன்னும் என்ன தோழா என்ற பாடலையே இலங்கைத் தமிழர்களுக்கு சமர்ப்பிப்பதாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.அந்த படத்தின் பாடல் .

[Continue reading...]

இதுதான் காதல்!இத���வே காதல்!-----

- 0 comments


"காதல் என்பது எது வரை,கல்யாண காலம் வரும் வரை "என்று சொல்கிறது ஒரு திரைப்படப் பாடல்.

காதலித்து மணம் புரிந்தவர்களின் காதல்,கல்யாணத்துடன் முடிந்து விடுமா?

ஒருவேளை பாடல் , யாரையாவது காதலித்துத் திரிவதெல்லாம் ,கல்யாணம் வரைதான்,யாரோ ஒருவரை மணந்தபின்,காதலாவது,கத்தரிக்காயாவது என்று சொல்கிறதா?.

திருமண உறவில் காதல் இல்லாது போய்விடுமா?

காதல் என்பது வெறும் உடல் சார்ந்த விஷயம் இல்லையே!

காதல் என்பது,ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொள்ளுதல்,ஒருவருக்காக ஒருவர் விட்டுக் கொடுத்தல்.

இதோ அப்படிப் பட்ட ஒரு காதல்.....

நேற்று இரவு.
மணி ஒன்பதைத் தொட்டுக் கொண்டிருந்தது.
வாசலில் அழைப்பு மணி ஒலித்தது.
கதவைத் திறந்து பார்த்தேன்.
எங்கள் குடியிருப்பின் இரவுக் காவல்காரர் நின்று கொண்டிருந்தார்,நெஞ்சை லேசாக அழுத்திப் பிடித்தபடி.முகத்தில் வேதனை.

பதறிப் போய்க் கேட்டேன்".என்ன பெருமாள்,உடம்பு சரியில்லையா?"
அவர் இல்லை என்று தலையசைத்தவாறே கேட்டார்"குடிக்கக் கொஞ்சம் சுடு தண்ணி குடுங்க சார்"
ஃபிளாஸ்க்கில் வெந்நீர் இருந்தது.டம்ளரில் ஊற்றிக் குடிக்கும் சூடாகக் கொடுத்தேன்.
படியில் அமர்ந்து வெந்நீரை அருந்தினார்.தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டார்.புறப்படத் தயாரானார்.

நான் கேட்டேன்"என்ன பெருமாள்,என்ன ஆச்சு?"

சிறிது தயங்கினார்.பின் சொன்னார்"என் சம்சாரம் போன வருஷம் காலமாயிட்டா. இன்னிக்குக் காலையிலேதான் வருஷத் திதி கொடுத்தேன்.இப்போ உட்காந்துக் கிட்டு இருக்கும்போது,அவ நெனைப்பு ரொம்ப அதிகமா வந்து.உடம்பெல்லாம் பட படன்னு வந்துடுச்சு.எல்லாமே ஒரே இருட்டான மாதிரி இருந்திச்சு.அதுதான் சார்"

அவரது வயது 65 என்பது எனக்கு முன்பே தெரியும்.

நான் கேட்டேன்"உங்களுக்கு எந்த வயசிலே கல்யாணமாச்சு?"

"22 வயசிலியே முடிச்சு வைச்சிட்டாங்க சார்"

நான் யோசித்தேன்.42 ஆண்டுகள் மண வாழ்க்கைக்குப் பின் பிரிந்து சென்ற மனைவியை நினத்து,அவளது பிரிவின் தாக்கத்தால்,அவர் உள்ள அளவில்,அதன் காரணமாக உடல் அளவில் பாதிக்கப் படுகிறார் என்றால்,அந்த அன்பு, அவர்களிடை இருந்த நெருக்கம்,அவர்களின் பரஸ்பரப் புரிதல் எத்தனை உயர்வானது?

அது வெறும் அன்பா?மண உறவா?நெருக்கமா?

அதற்கும் மேல்........

இதுதான் காதல்.உண்மைக் காதல்.

அவருக்குத் தொப்பியைத் தூக்கி வணக்கம் சொல்கிறேன்.

இந்தக் காதலுக்கு அவரின் உணர்வுகளே தாஜ் மஹால்!

"உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன

மடந்தையொடு எம்மிடை நட்பு.".....குறள்

(இது ஒரு மீள் பதிவு,,சில சேர்க்கைகளுடன்)



http://tamil-joke-sms.blogspot.com



  • http://tamil-joke-sms.blogspot.com

  • [Continue reading...]

    வாழ்ந்து முடித்���வர்கள்---(சிறுகதை)

    - 0 comments


    அவர்கள் இருவரும் மிக,மிக மகிழ்ச்சியாக இருந்தனர்.

    அந்த மகிழ்ச்சி அவர்கள் ஒவ்வொரு அசைவிலும் தெரிந்தது.

    "ராணி!மறக்க முடியாத இண்டு மாதங்கள்! இல்லையா?"

    "ஆம் ரவி!பூலோக சொர்க்கம்தான்.அந்தக் காட்டேஜும், வசதிகளும்,அபாரம். பணம் கொடுத்தாலும் இப்படி ஒரு வசதி கிடைக்க வேண்டுமே?"

    "நீ சொல்வது சரிதான்.அந்தக் காலத்தில் ராஜாக்கள் இப்படித்தான் வாழ்ந்திருப்பார்கள்"

    "ரவி!ராஜாக்கள் உல்லாசமாக வாழ்ந்திருந்தாலும்,அவர்களுக்கும் எவ்வளவோ,கவலைகள்,பிரச்சினைகள் இருந்திருக்கும்.நாம் அப்படியல்லவே?எந்த

    விதமான கவலைகளும் இல்லாத வாழ்க்கை அல்லவா?"

    "ஆம் ராணி!அந்த ரிசார்ட்டில்தான் எத்தனை வசதிகள்?என்ன சுவையான உணவு? எத்தனை பொழுது போக்கு அம்சங்கள்?எதை நாம் விட்டு வைத்தோம்?தினம் நீச்சல் குளத்தில்குளியல்!வாரம் ஒரு முறை மசாஜ்!கோல்ஃப்,பில்லியர்ட்ஸ் என்று பொழுது போக்கு.நல்ல பசி,நல்ல சாப்பாடுஅத்துடன் தினமும்,இரவில்……! என்று கண்களை சிமிட்டினான் ரவி.

    ராணி முகம் சிவந்தாள்."சீ!எப்போதும் அதே நினைவு!இப்போதுதான் கல்யாணம் ஆன மாதிரி.எனக்கு வயது 36,உங்களுக்கு 39.கல்யாணமாகி 10 ஆண்டுகளாகி விட்டன.நினைவிருக்கட்டும்!"

    "10 வருடம் போனதே தெரியவில்ல ராணி.ஒரு விநாடி கூட துன்பம் இல்லாத, போரடிக்காத வாழ்க்கையல்லவா,நம்முடையது.விடுமுறையில் எல்லா நாடுகளையும் சுற்றி வந்து விட்டோம்.எல்லா வித உணவுகளையும் ருசி பார்த்து விட்டோம்!எல்லா விதமாகவும்…."

    " அய்யோ!செக்கு மாடு மாதிரி திரும்பவும் அங்கேயே வந்து நிற்கிறீர்களே!"

    "நிறைய சம்பாதிதோம்,செலவழித்தோம்,சேமிக்கவும் செய்தோம்.எந்தக் குறையும் இல்லை ரவி" என்று சொல்லி விட்டு மெல்லிய குரலில் "குறை ஒன்றும் இல்லை" என்று பாட ஆரம்பித்தாள்.

    ரவி ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தான்பாட்டு முடிந்தது.ரவி ராணியை அணைத்து,நெற்றியில்,கன்னத்தில் ,உதட்டில் முத்தமிட்டான்.அவளை அழைத்துச் சென்று கட்டிலில் அமர்த்திக் கொண்டான்.

    "நினைத்துப் பார்க்கையில் எவ்வளவு நிறைவான வாழ்க்கை வாழ்ந்திருக்கிறோம் என்பது புரிகிறது,ராணி.இது போதும்."

    "ஆம் ரவி பத்தாண்டுகளில்,நூறாண்டு சந்தோசம் அனுபவித்து விட்டோம்.இது போதும்"

    இருவரும் ஒருவர் கண்களை ஒருவர் ஆழப் பார்க்கின்றனர்,கண்கள் வழியாக மனதையே படிப்பது போல்.

    "அப்படியென்றால்"

    "ஆம் ரவி அதேதான்!இனி வாழ என்ன இருக்கிறது.முடித்துக் கொள்வோம்!"

    ஒரு பேப்பர் எடுக்கின்றனர்.கடிதம் எழுதிகின்றனர்"எங்கள் தற்கொலைக்கு யாரும் காரணமில்லை.நிறைவாக வாழ்ந்து விட்டோம்.முடித்துக் கொள்கிறோம். உறவினர்களுக்குச் சொல்லி விடுங்கள்.எங்களுக்குச் சொந்தமான இந்த வீடு மற்றும் சில சொத்தெல்லாம் இணைத்திருக்கும் உயிலில் பிரித்துக் கொடுத்திருக்கிறோம்.

    எங்கள் உடலை மின் மயானத்தில் தகனம் செய்ய வேண்டும்.அதற்காக ரூ.10000/- உறையில் போட்டு வைத்திருக்கிறோம்.செல்கிறோம்"

    தூக்க மாத்திரைகளை ஒவ்வொன்றாக,ஒருவர் வாயில் மற்றவர் போடுகின்றனர்……………………

    டைம்ஸ் ஆஃப் இந்தியா,8-10-2011.

    பனாஜி

    நிறைவாக வாழ்ந்த தம்பதி தற்கொலை!

    .........................................................................................................................

    பிற்சேர்க்கை: பின்னூட்டங்களைப் பார்க்கும்போது இந்தப் பிற்சேர்க்கை அவசியமாகப் படுகிறது.இது கதையல்ல நிஜம்.!இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வந்த ஒரு செய்தியை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்ட கதை.கதை முடிவு கற்பனையல்ல!



    http://tamil-joke-sms.blogspot.com



  • http://tamil-joke-sms.blogspot.com

  • [Continue reading...]

    வரலாறு காணாத பதி���ர் சந்திப்பு!

    - 0 comments


    வருகையைப் பதிவு செய்ய!
    tata grande dicor--நன்றி!
    கூட்டத்தின் ஒரு பகுதி.
    ஒரு பதிவர்!யார் இவர்?
    அந்தப் பதிவரும் ஜாக்கியும்! உணவு உலகம்(high tea)--சிங்கம்! உணவு உலகம்!(high tea)
    முதுகு சொறிதல்!தெரிந்த முகங்கள்! முதுகு சொறியும் பதிவர்கள்!(முதுகில் தொங்க விடப்பட்ட அட்டையில் எதை வேண்டுமானுலும் எழுதலாம்.அதிகம் கமெண்ட் உள்ள பதிவர்,தமாஷான கமெண்ட் உள்ள பதிவர் எனப் பல்வேறு பரிசுகள் வேறு!)

    சாதாரணமாக அரசியல் கட்சிக் கூட்டங்களை வரலாறு காணாத கூட்டம் என்று சொல்வார்கள்.இங்கே நான் இன்று நடந்த வரலாறு காணாத ஒரு பதிவர் சந்திப்பைப் பற்றிப் பகிர்ந்து கொள்கிறேன்!

    இண்டிப்ளாக்கர் -டாடா க்ரேண்டே இணைந்து நடத்திய பதிவர் சந்திப்பு இன்று ஹோட்டல் ஹயாத் ரீஜன்சி யில் நடை பெற்றது. மதியம் ஒரு மணிக்குப் பதிவு செய்தல் ஆரம்பம் என்பதால் நான் அங்கு ஒரு மனிக்குப் போய்சேர்ந்தேன்.கூட்டம் ரீஜன்சி பால் ரூமில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.நான் சென்றவுடன் அங்கு முதலில் சந்தித்த தமிழ்ப் பதிவர்கள்-ஜாக்கி,டோண்டு,மணிகண்டன் ஆகியோர்.நான் நடந்தது என்ன என்று எழுதிப் போரடிக்கப் போவதில்லை.சில புகைப் படங்களை உங்கள் பார்வைக்கு அளித்திருக்கிறேன்.

    கடைசியில் ஒரு டீ சர்ட் வேறு!

    ஒரு இனிய மாலைப் பொழுது!

    நன்றி இண்டிப்லாக்கர்,டாடா மோட்டார்ஸ்!



    http://tamil-joke-sms.blogspot.com



  • http://tamil-joke-sms.blogspot.com

  • [Continue reading...]

    ஆணுறுப்பின் தோல் உரியவில்லை! மருத்துவ ஆலோசனைகள்!

    - 0 comments
     
     
    Sent: Monday, October 10, 2011 7:58 AM
    Subject: ஆணுறுப்பின் தோல் உரியவில்லை! மருத்துவ ஆலோசனைகள்!
     
     

    என் ஆண் உறுப்பு செக்ஸ்இல் இருக்கும்போது கூட தோல் உரியாமல் அப்படியே இருக்கிறது அதேபோல நான் என் உறுப்பு மொட்டையும் (penis glans) கூட பார்த்ததில்லை, மேல் தோல் ரொம்ப டைட் ஆக இருக்கிறது, இதற்கு என்ன தீர்வு? என உங்களுக்குள்ளேயே யாருக்கும் சொல்லிக் கொள்ள முடியாத பிரச்சினைக்கு தீர்வைத் தேடித் திரிபவர்களா நீங்கள் இதே உங்கள் பிரச்சினைக்கான தீர்வு.

    உங்களுக்கு இருக்கும் பிரச்சனைக்கு ஆங்கிலத்தில் பைமாசிஸ் ( Phimosis) என்று சொல்லுவார்கள். இந்த பிரச்னை உள்ளவர்களுக்கு, ஆண்குறியின் மொட்டை தோல் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ மூடிக்கொண்டு இருக்கும்.
    தோலை உங்களால் பின்னோக்கி இழுத்து மொட்டை முழுமையாக தலைகாட்ட வைக்க முடியவில்லை என்றால் உங்களுக்கு இந்தப் பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம்.
    ஒரு சாதாரணமான ஆண்குறி விரைப்படைந்தால், தோல் அதுவாகவே பின்னோக்கி நகர்ந்து மொட்டு வெளியே தலை காட்ட வழி வகுக்கும். அல்லது, நீங்கள் தோலை பின்னால் இழுத்து விட்டால், மொட்டு வெளியே முழுமையாக தெரிந்து விடும்.
    ஒரு ஆண் குழந்தை பிறக்கும்போது, இயற்கையிலேயே தோல் ஆண்குறி மொட்டை மூடியபடி தான் இருக்கும். அந்தப் பையன் டீன் ஏஜ் பருவத்தை அடையும்போது, அவனுடைய தோல் பின்னோக்கி தளர்ந்து விடும். அதிக பட்சமாக பதினெட்டு வயதுக்குள் தோல் (Foreskin) தளர்ந்து, ஆண் குறியின் மொட்டை முழுமையாக வெளியே தெரியுமாறு செய்யும்.

    பிரச்சனையின் காரணங்கள்:

    1. வித்தியாசமான சுய இன்ப நிலை: உதாரணமாக, தலைக் குப்புறப் படுத்து, தலையணையில் ஆண் குறியைத் தேய்த்தல்.

    2. பிறவியிலேயே ஏற்படும் பிரச்சனை ( Congenital Phimosis).

    3. ஆண் குறித் தோலை கையால், வேகமாக இழுத்ததால் ஏற்படும் காயம்.

    4. ஆண் குறி மொட்டு வீங்கி இருத்தல் ( balanitis).

    5. நீரிழிவு நோயால் ஏற்படும் நோய்.

    6. சுகாதாரமின்மை.

    இந்தப் பிரச்சனைக்கு முடிவு:

    இது ஒரு சாதாரணமான பிரச்சனைதான், எளிதாக தீர்த்து விடலாம்.
    [Continue reading...]

    தயாநிதிமாறன், கலாநிதிமாறன் வீடுகளில் சிபிஐ சோதனை! சன்டிவி அலுவலகத்திலும் சிபிஐ அதிகாரிகள்!

    - 0 comments
     
     
     
    2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள், முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் வீட்டில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். கலாநிதி மாறன் வீட்டிலும், சன் டிவி அலுவலகத்திலும் டெல்லியிலிருந்து வந்த சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் தயாநிதி மாறனின் சென்னை போட்கிளப், டெல்லி, ஹைதிராபாத் இல்லங்களிலும் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
     
    முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மற்றும் அவரருடைய சகோதரர் கலாநிதி மாறன் மீதும் வழக்குகள் பதிவு செய்துள்ள சி.பி.ஐ., அவர்களுடைய அலுவலகங்கள் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்களுடைய வீடுகளிலும் சோதனை நடத்தி வருகிறது.



    [Continue reading...]

    oru paisa tamilan - ayyothidhasapandithar

    - 0 comments

    [Continue reading...]

    'பணக்கார' சுயேட்சை- வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்தபோது கைது

    - 0 comments
     
     
    மதுரை அருகே வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்த சுயேட்சை வேட்பாளர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
     
    மதுரை மாவட்டம் திருமங்கலம் உசிலம்பட்டி ரோட்டில் எஸ்.ஐ. கமர்நிஷா, தனிப்பிரிவு ஏட்டு காளியப்பன் தலைமையில் பறக்கும் படை போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
     
    அப்போது பொக்கம்பட்டி ஊராட்சி தலைவர் பதவிக்குப் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் இளம்பரிதி மற்றும் அவரது ஆதரவாளர்களான பொன்மலை, பாலாஜி, சீனிவாசன் ஆகியோர் திருமங்கலம், பொக்கம்பட்டியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துக் கொண்டிருந்தனர்.
     
    இது குறித்து எஸ்.ஐ. கமர்நிஷா, தனிப்பிரிவு ஏட்டு காளியப்பன் தலைமையிலான பறக்கும் படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
     
    இதனையடுத்து அந்த பகுதிக்கு விரைந்த போலீசார் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்த சுயேட்சை வேட்பாளர் இளம்பரிதி மற்றும் அவரது ஆதரவாளர்களான பொன்மலை, பாலாஜி, சீனிவாசன் ஆகியோரை போலீசார் கையும், களவுமாகப் பிடித்தனர். மேலும், அவர்களிடம் இருந்து ரூ. 21,500 பறிமுதல் செய்யப்பட்டது.



    [Continue reading...]

    அணு உலை மூலம் தமிழர்களைக் கொலல்த் துடிக்கும் காங்

    - 0 comments
     
     
    தமிழர்கள் மீது அணு உலையைத் திணிக்க காங்கிரஸ் அரசு துடிக்கின்றது என்று தமிழர் களம் பொதுச் செயலாளர் அரிமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.
     
    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
     
    காலை நடந்த பேச்சுவார்த்தையின்போது உயர்மட்டக்குழு என்றும், கூடங்குளத்தில் அனைத்துப் பணிகளும் நிறுத்தப்படும் என்றும், மக்கள் தான் முக்கியம் என்றும் பேசிய பிரதமர் மன்மோகன்சிங் மாலையில் வல்லுநர் குழு என்றும், அணு உலைப் பணிகளை உரிய காலத்தில் தொடங்க தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும் என்றும் பல்டிக்கு மேல் பல்டி அடித்துள்ளார்.
     
    உலகநாடுகள் பங்கேற்ற காமன்வெல்த் போட்டிகளுக்கான அரங்குகளும், கட்டிடங்களும் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பாகவே இடிந்து விழுந்தது குறித்து உலகமே விழுந்து விழுந்து சிரித்தது. இதனால் இந்தியா தலை குனிந்து நின்றது.
     
    இதற்குக் காரணமான கல்மாடி போன்ற மலைவிழுங்கிகளை அமைச்சரவையிலேயே வைத்திருந்த மன்மோகன்சிங் இன்று கூடங்குளம் அணு உலையால் எந்த ஆபத்தும் இல்லை என்று அடித்துச் சத்தியம் செய்கிறார். அவர் மூக்கின் கீழேயே நடந்த உலக மகா ஊழல்களை உணராத உத்தமராக அவர் உள்ளார்.
     
    அலைக்கற்றை ஊழலில் ரூ. ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடிகளை விழுங்கி எமகாதகர்கள் ஏப்பம் விட்டது உலகத்திற்கே கேட்டது. ஆனால் அருகிலிருந்த தனக்கு தெரியவே தெரியாது என்று சத்தியம் செய்கிறார். இந்த மகா உத்தமர் தான் இப்போது, கூடங்குளம் பற்றி அடுத்த சத்தியம் செய்கிறார்.
     
    கூடங்குளம் என்பது ஊழல் உலை மட்டுமல்ல. ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகத்திற்கும் உலை வைக்கும் அணு உலை அது.
     
    முதல் அணு உலையைக் கட்டும்போது எச்.சி.எல். என்ற நிறுவனம் ஒதுக்கீட்டுத் தொகையை 46 விழுக்காட்டுக்குத் தான் டெண்டர் கோரி ஒப்பந்தம் எடுத்தது.
     
    கடல் மணலைக் கலந்து கட்டிடம் கட்டுகிறார்கள் என்று அப்போதைய சட்டமன்ற உறுப்பினர் புகார் அளித்தார். இப்படியெல்லாம் கண்ணெதிரேயே தில்லு முல்லு செய்து கட்டிய அணு உலை வரைபடத்திலும், விளம்பரத்திலும் வேண்டுமானால் பாதுகாப்பானதாக இருக்கலாம். நடைமுறையில் அதுவும் ஒரு காமன்வெல்த் கலக்கல் கட்டிடம் தான்.
     
    ஒட்டுமொத்தத் தமிழினத்தையும் அழித்தொழிக்க நினைக்கும் காங்கிரஸ் கட்சிக்கு வரும் உள்ளாட்சித் தேர்தலில் பாடை கட்டுவோம்.
     
    ஈழத் தமிழர் மீது தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை அள்ளிப்போட்டுக் கொன்ற இதே அரசு இன்று தமிழ்நாட்டுத் தமிழர்களை அழித்தொழிக்கும் ஆயுதத்தை நம் நடுவில் நிறுவுகிறது.
     
    வெடித்த பின்னர் வேதனைகளைக் கொட்டக் கூட நாம் இருக்கமாட்டோம். நம்மைக் கொல்லத் துடிக்கும் இன எதிரிகளை இந்தத் தேர்தலிலும் அடையாளம் காண்போம். எங்கெங்கு காங்கிரஸ் கட்சி நிற்கிறதோ அங்கெல்லாம் அக்கட்சியை வேரடி மண்ணோடு சாய்ப்போம்.
     
    இவ்வாறு அந்த அறிக்கையில் அரிமாவளவன் தெரிவித்துள்ளார்.



    [Continue reading...]

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger