நடிகர் ரஜினி காந்த்தை இந்தி நடிகர் ஷாருக்கான் இன்று காலை சந்தித்தார்.
ரஜினிகாந்த் நீண்ட நாள் ஓய்வுக்கு பிறகு மும்பை சென்று ஷாருக்கானின் Ôரா ஒன்Õ இந்தி படத்தில் நடித்தார். இந்த படத்தில் ஒரு காட்சியில் ரஜினி தோன்றுவார். ஷாருக்கான் கேட்டதால், இதில் நடிக்க ரஜினி ஒப்புக்கொண்டார். எனவே இதற்காக ரஜினியை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க விரும்புவதாக ஷாருக்கான் தெரிவித்தார். இதற்காக ரஜினியிடம் நேரம் ஒதுக்க கேட்டிருந்தார்.
இதையடுத்து மும்பையில் இருந்து புறப்பட்டு இன்று காலை 10.30 மணிக்கு ஜெட்ஏர்வேஸ் விமானம் மூலம் சென்னை வந்தார் ஷாருக்கான். பின்னர் ரஜினியை வ¦ட்டில் சந்தித்தார். வாசலுக்கு வந்து ஷாருக்கானை ரஜினி வரவேற்றார். பின்னர் இருவரும் தனிஅறையில் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தனர். அதன் பிறகு ஷாருக்கான் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?