மன்னார் தோட்ட வெளிக் கிராமத்தில் கடந்த சனிக்கிழமை வாய் பேசமுடியாதசிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த 65வயதுடைய வயோதிபரை மன்னார் போலீசார் கைது செய்துள்ளனர்.
தோட்ட வெளி கிராமத்தை சேர்ந்த 15வயதுடைய வாய் பேசமுடியாத குறித்த சிறுமி அங்குள்ள கடைக்கு சென்ற போது கடை நடத்துனரின் சகோதரனான வயோதிபர் கடையின் பின் புறத்திற்கு சிறுமியை அழைத்து சென்று துஸ்பிரயோகம் செய்துள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமி அவரின் பெற்றோரிடம் சம்பவத்தை கூறியதை அடுத்து
பெற்றோர் சிறுவர் நன்னடத்தை பிரிவுக்கும்,மன்னார் பொலிசாரிடமும் முறைப்பாடு செய்திருந்தனர்.
இன் நிலையில் குறித்த சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு உட் படுத்தப் பட்டார்
குறித்த வயோதிபர் தலை மறைவான நிலையில் சனிக்கிழமை பொலிசாரால் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைக்கு உட் படுத்தப் பட்டுள்ளார்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?