எட்டு மாத குழந்தையுடன் இந்தியா வந்துள்ள ரம்பாவிற்கு, ரம்பாவின் அண்ணன் ரூ.50 லட்சம் மதிப்புள்ள கார் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார். கனவு தேவதையாக ரசிகர்களின் கனவுக்குள் நுழைந்து, இதயத்துள் நிறைந்து, தன் குதூகலிக்கும் சிரிப்பாலும், குழந்தைதன பேச்சாலும், ரசிகர்களை தன் நடிப்பால் கட்டி போட்டு வைத்தவர் நடிகை ரம்பா. கடந்த ஆண்டு, கனடாவை சேர்ந்த தொழிலதிபர் இந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டு கனடாவில் செட்டிலானார். இந்நிலையில் கர்ப்பமாக இருந்த ரம்பாவுக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு லான்யா என்று பெயர் வைத்துள்ளார். லான்யா என்றால் சமஸ்கிருதத்தில் தேவதை என்ற பொருளாம்.
இந்நிலையில் தனது எட்டு மாத குழந்தையை எடுத்து கொண்டு இந்தியா வந்துள்ளார் ரம்பா. குளிர்காலம் முடியும் வரை இந்தியாவில் தான் இருக்க முடிவு செய்துள்ளாராம். இந்தியா வந்துள்ள ரம்பாவிற்கு, அவரது அண்ணனும், தயாரிப்பாளருமான வாசு, குழந்தை லான்யாவிற்கு 50 லட்ச ரூபாயில் லேண்ட் ரோவர் மாடல் காரை பரிசாக தந்துள்ளார்.
இது குறித்து ரம்பா நம்மிடம் பேசுகையில், லான்யா பெயரில் நிறைய பூக்களோடு கார் வந்து நின்றதும் பயங்கர சந்தோஷம். என் குழந்தைக்கு அண்ணா, கொடுத்த முதல் பரிசை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது. என் கணவரின் கம்பனி இந்தியாவில் இருப்பதால், அவருக்கு உதவியாகவும், குளிர்காலங்களில் அங்கு இருக்க முடியாததால், இந்தியா வந்துள்ளதாக கூறும் ரம்பா, நிறைய பேர் இப்போதும் என்னை நடிக்க கூப்பிடுகின்றனர். ஆனால் எனக்கு அக்கா, அண்ணி, போன்ற ரோலில் நடிக்க விருப்பம் இல்லை. டிவி ஷோ வேண்டுமானால் பண்ணுவேன், மத்தபடி இப்போதைக்கு நடிக்க விருப்பம் இல்லை. என் ரசிகர்களுக்கு எப்போதும் என் அன்பு உண்டு என்று முடித்து கொண்டார்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?