மதுரை அருகே வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்த சுயேட்சை வேட்பாளர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் உசிலம்பட்டி ரோட்டில் எஸ்.ஐ. கமர்நிஷா, தனிப்பிரிவு ஏட்டு காளியப்பன் தலைமையில் பறக்கும் படை போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பொக்கம்பட்டி ஊராட்சி தலைவர் பதவிக்குப் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் இளம்பரிதி மற்றும் அவரது ஆதரவாளர்களான பொன்மலை, பாலாஜி, சீனிவாசன் ஆகியோர் திருமங்கலம், பொக்கம்பட்டியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துக் கொண்டிருந்தனர்.
இது குறித்து எஸ்.ஐ. கமர்நிஷா, தனிப்பிரிவு ஏட்டு காளியப்பன் தலைமையிலான பறக்கும் படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து அந்த பகுதிக்கு விரைந்த போலீசார் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்த சுயேட்சை வேட்பாளர் இளம்பரிதி மற்றும் அவரது ஆதரவாளர்களான பொன்மலை, பாலாஜி, சீனிவாசன் ஆகியோரை போலீசார் கையும், களவுமாகப் பிடித்தனர். மேலும், அவர்களிடம் இருந்து ரூ. 21,500 பறிமுதல் செய்யப்பட்டது.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?