2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள், முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் வீட்டில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். கலாநிதி மாறன் வீட்டிலும், சன் டிவி அலுவலகத்திலும் டெல்லியிலிருந்து வந்த சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் தயாநிதி மாறனின் சென்னை போட்கிளப், டெல்லி, ஹைதிராபாத் இல்லங்களிலும் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மற்றும் அவரருடைய சகோதரர் கலாநிதி மாறன் மீதும் வழக்குகள் பதிவு செய்துள்ள சி.பி.ஐ., அவர்களுடைய அலுவலகங்கள் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்களுடைய வீடுகளிலும் சோதனை நடத்தி வருகிறது.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?