Sunday, 9 October 2011

வாழ்ந்து முடித்���வர்கள்---(சிறுகதை)



அவர்கள் இருவரும் மிக,மிக மகிழ்ச்சியாக இருந்தனர்.

அந்த மகிழ்ச்சி அவர்கள் ஒவ்வொரு அசைவிலும் தெரிந்தது.

"ராணி!மறக்க முடியாத இண்டு மாதங்கள்! இல்லையா?"

"ஆம் ரவி!பூலோக சொர்க்கம்தான்.அந்தக் காட்டேஜும், வசதிகளும்,அபாரம். பணம் கொடுத்தாலும் இப்படி ஒரு வசதி கிடைக்க வேண்டுமே?"

"நீ சொல்வது சரிதான்.அந்தக் காலத்தில் ராஜாக்கள் இப்படித்தான் வாழ்ந்திருப்பார்கள்"

"ரவி!ராஜாக்கள் உல்லாசமாக வாழ்ந்திருந்தாலும்,அவர்களுக்கும் எவ்வளவோ,கவலைகள்,பிரச்சினைகள் இருந்திருக்கும்.நாம் அப்படியல்லவே?எந்த

விதமான கவலைகளும் இல்லாத வாழ்க்கை அல்லவா?"

"ஆம் ராணி!அந்த ரிசார்ட்டில்தான் எத்தனை வசதிகள்?என்ன சுவையான உணவு? எத்தனை பொழுது போக்கு அம்சங்கள்?எதை நாம் விட்டு வைத்தோம்?தினம் நீச்சல் குளத்தில்குளியல்!வாரம் ஒரு முறை மசாஜ்!கோல்ஃப்,பில்லியர்ட்ஸ் என்று பொழுது போக்கு.நல்ல பசி,நல்ல சாப்பாடுஅத்துடன் தினமும்,இரவில்……! என்று கண்களை சிமிட்டினான் ரவி.

ராணி முகம் சிவந்தாள்."சீ!எப்போதும் அதே நினைவு!இப்போதுதான் கல்யாணம் ஆன மாதிரி.எனக்கு வயது 36,உங்களுக்கு 39.கல்யாணமாகி 10 ஆண்டுகளாகி விட்டன.நினைவிருக்கட்டும்!"

"10 வருடம் போனதே தெரியவில்ல ராணி.ஒரு விநாடி கூட துன்பம் இல்லாத, போரடிக்காத வாழ்க்கையல்லவா,நம்முடையது.விடுமுறையில் எல்லா நாடுகளையும் சுற்றி வந்து விட்டோம்.எல்லா வித உணவுகளையும் ருசி பார்த்து விட்டோம்!எல்லா விதமாகவும்…."

" அய்யோ!செக்கு மாடு மாதிரி திரும்பவும் அங்கேயே வந்து நிற்கிறீர்களே!"

"நிறைய சம்பாதிதோம்,செலவழித்தோம்,சேமிக்கவும் செய்தோம்.எந்தக் குறையும் இல்லை ரவி" என்று சொல்லி விட்டு மெல்லிய குரலில் "குறை ஒன்றும் இல்லை" என்று பாட ஆரம்பித்தாள்.

ரவி ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தான்பாட்டு முடிந்தது.ரவி ராணியை அணைத்து,நெற்றியில்,கன்னத்தில் ,உதட்டில் முத்தமிட்டான்.அவளை அழைத்துச் சென்று கட்டிலில் அமர்த்திக் கொண்டான்.

"நினைத்துப் பார்க்கையில் எவ்வளவு நிறைவான வாழ்க்கை வாழ்ந்திருக்கிறோம் என்பது புரிகிறது,ராணி.இது போதும்."

"ஆம் ரவி பத்தாண்டுகளில்,நூறாண்டு சந்தோசம் அனுபவித்து விட்டோம்.இது போதும்"

இருவரும் ஒருவர் கண்களை ஒருவர் ஆழப் பார்க்கின்றனர்,கண்கள் வழியாக மனதையே படிப்பது போல்.

"அப்படியென்றால்"

"ஆம் ரவி அதேதான்!இனி வாழ என்ன இருக்கிறது.முடித்துக் கொள்வோம்!"

ஒரு பேப்பர் எடுக்கின்றனர்.கடிதம் எழுதிகின்றனர்"எங்கள் தற்கொலைக்கு யாரும் காரணமில்லை.நிறைவாக வாழ்ந்து விட்டோம்.முடித்துக் கொள்கிறோம். உறவினர்களுக்குச் சொல்லி விடுங்கள்.எங்களுக்குச் சொந்தமான இந்த வீடு மற்றும் சில சொத்தெல்லாம் இணைத்திருக்கும் உயிலில் பிரித்துக் கொடுத்திருக்கிறோம்.

எங்கள் உடலை மின் மயானத்தில் தகனம் செய்ய வேண்டும்.அதற்காக ரூ.10000/- உறையில் போட்டு வைத்திருக்கிறோம்.செல்கிறோம்"

தூக்க மாத்திரைகளை ஒவ்வொன்றாக,ஒருவர் வாயில் மற்றவர் போடுகின்றனர்……………………

டைம்ஸ் ஆஃப் இந்தியா,8-10-2011.

பனாஜி

நிறைவாக வாழ்ந்த தம்பதி தற்கொலை!

.........................................................................................................................

பிற்சேர்க்கை: பின்னூட்டங்களைப் பார்க்கும்போது இந்தப் பிற்சேர்க்கை அவசியமாகப் படுகிறது.இது கதையல்ல நிஜம்.!இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வந்த ஒரு செய்தியை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்ட கதை.கதை முடிவு கற்பனையல்ல!



http://tamil-joke-sms.blogspot.com



  • http://tamil-joke-sms.blogspot.com

  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger