Sunday, 9 October 2011

எத்தனை கோடிக்கும் மயங்காத சூப்பர்ஸ்ராரும் உலகநாயகனும்

 

கோடி, கோடியாய் பணம் கொடுக்க விளம்பர நிறுவனங்கள் தயாராக இருந்தும் விளம்பரஙகளில் நடிக்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.

முன்பெல்லாம் விளம்பரப் படங்களில் மாடல்கள் தான் நடிப்பார்கள். அந்த காலம் மலையேறிவிட்டது. தற்போது திரை நட்சத்திரங்கள் தான் விளம்பர உலகை ஆண்டு வருகின்றனர்.

பிரபலமான திரை நடச்த்திரங்களை வைத்து தங்கள் பொருட்களை விளம்பரப்படுத்தினால் அது மக்கள் மத்தியில் சீக்கிரம் பிரபலமாகும் என்று தயாரிப்பாளர்கள் நினைக்கின்றனர்.

அமிதாப் பச்சன், ஷாருக்கான், ஆமீர் கான், நம்ம விஜய், தல அஜீத், சூர்யா, கார்த்தி, அனுஷ்கா, ஸ்னேகா, தமன்னா, த்ரிஷா, மாதவன், மனோரமா ஆச்சி, சுகன்யா, சுஹாசினி என்று பெரிய நட்சத்திரப் பட்டாளமே விளம்பரப் படங்களில் நடித்து வருகிறது.

திரையுலகில் அதுவும் ரசிகர்களின் மனதில் எப்பொழுதும் உயர்வான இடத்தில் இருப்பது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன்.

அவர்கள் இருவரையும் எப்படியாவது விளம்பரப் படங்களில் நடிக்க வைத்துவிட வேண்டும் என்று எத்தனையோ பேர் முயற்சி செய்துள்ளனர். கோடி, கோடியாய் தருகிறோம் என்றெல்லாம் கூறினார்கள்.

இதற்கெல்லாம் மயங்கிவிடுபவர்களா அவர்கள். என்ன தான் குட்டிகர்ணம் போட்டாலும் விளம்பரப் படங்களில் நடிக்க மாட்டோமே என்று உறுதியாக இருக்கிறார்கள்.

என்ன சொன்னாலும் மசிய மாட்டேன் என்கிறார்களே என்று விளம்பரதாரர்கள் கையைப் பிசைகிறார்களாம்!

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger