வேலூர் மாவட்டம், இராணிப்பேட்டை நகராட்சி தலைவர் பதவிக்கு திமுக சார்பில் மகேஸ்வரியும், அதிமுகவில் சித்ராவும் நிற்கின்றனர்.
திமுகவில் தேர்தல் பொறுப்பாளராக மா.செ காந்தி பொறுப்பேற்றுள்ளார். அதிமுகவில் அமைச்சர் முகமதுஜான் பொறுப்பு.
தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் முகமதுஜான், ''மணல் கொள்ளையன் காந்தியின் ஆதரவாளரை தோற்கடிக்க வேண்டும். ரவுடி செய்த திமுகவினரை கைது செய்து உள்ளே தள்ள வேண்டும். 5 ஆண்டுகளில் இவர்கள் போடாத ஆட்டமில்லை. இந்த நகருக்கு என்று எதுவும் செய்யவில்லை'' என போகும்மிடங்களில் எல்லாம் பேசி வருகிறார்.
இதற்கு பதிலடி தரும் திமுக மா.செ காந்தி, ''இன்று அமைச்சராகவுள்ள முகமதுஜான் திமுக ஆட்சியின் போது, அதிமுகவினர் கூட்டம் நடத்த, போராட்டம் நடத்த என்னிடம் தான் வந்து பணம் வாங்கி சென்றார். பலமுறை எழுதி தந்துவிட்டு பணம் வாங்கி சென்றுள்ளார்.
நாங்கள் மணல் விற்பனை செய்தோம். அப்போது ஒரு லோடு 4000க்கு விற்றோம். இன்று ஒரு லோட் மணல் 12 ஆயிரமாக விற்கிறது.
இந்த மணல் கொள்ளை பணம் யார்க்கு செல்கிறது என்பது எனக்கு தெரியும். நாங்கள் சிறைக்கு செல்ல தயங்கியவர்கள் அல்ல.
ஆனால் அதற்கு உடந்தையாக உள்ள உன்னையும் சேர்த்து தான் அழைத்து செல்வோம். எங்களை எதிர்த்தால் உன்னை பற்றி நான் நிறைய பேச வேண்டி வரும் ஜாக்கிரதை'' என்கிறார்.
திமுக மா.செ வின் இந்த பேச்சை அமைச்சர் முகமதுஜானின் எதிர்ப்பு கோஷ்டியினர் ஜெ வுக்கு பேக்ஸ் அனுப்பி வைத்து கட்சி துரோகி முகமது ஜான் பதவியை பறிக்க வேண்டும் என கேட்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?