நடிகை ரம்பாவின் மகள் லான்யாவுக்கு அவரது அண்ணன் வாசு ரூ. 50 லட்சம் மதிப்புள்ள லேண்ட் ரோவர்-ஜாக்குவார் காரை பரிசாகக் கொடுத்து அசத்தியிருக்கிறாராம்.
ரம்பாவுக்கு என்ன அவ்வளவு பெரிய புள்ளையா இருக்கு என்று நினைக்க வேண்டாம். லான்யா 8 மாதக் குழந்தை.
ஈழத் தமிழர் இந்திரன் பத்மநாதனை திருமணம் செய்து கனடாவில் செட்டிலான ரம்பாவுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் அழகிய பெண் குழந்தை பிறந்தது.
அதற்கு லான்யா என்று பெயர் வைத்துள்ளார். சமஸ்கிருதத்தில் லான்யா என்றால் தேவதை என்று பொருளாம்.
குழந்தை நல்லபடியாக பிறந்தால் திருப்பதி கோவிலுக்கு வருவதாக வேண்டிக் கொண்ட ரம்பா, லான்யாவுடன் இந்தியாவுக்கு வந்தார்.
திருப்பதி உள்பட பல கோவில்களுக்கு சென்று குட்டி தேவதையைத் தந்த இறைவனுக்கு நன்றி தெரிவித்தார்.
ஏற்கனவே குளிருக்குப் பெயர்போன கனடாவில் குளிர்காலம் முடியும் வரை இந்தியாவில் தங்கியிருக்க திட்டமிட்டுள்ளார்.
அவரது கொலுக், மொலுக் மகளைப் பார்க்க பல திரை நட்சத்திரங்கள் ரம்பா வீட்டுக்கு வந்து செல்கிறார்களாம்.
இந்நிலையில் ரம்பாவின் அண்ணனும், தயாரிப்பாளருமான வாசு ரூ. 50 லட்சம் மதிப்புள்ள லேண்ட் ரோவர்-ஜாக்குவார் காரை 8 மாதக் குழந்தை லான்யாவுக்கு பரிசாகக் கொடுத்துள்ளாராம்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?