சாம்பியன்ஸ் லீக் தொடரின் இறுதிப் போட்டியைப் பார்க்க இந்தி நடிகரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளருமான ஷாருக் கான் சென்னை வந்தார். ரா ஒன் படத்தில் ஒரு காட்சியில் நடித்துக் கொடுத்த நடிகர் ரஜினிகாந்த்தையும் தான் பார்க்கவிருப்பதாகவும் அவர் கூறினார்.
சாம்பியன்ஸ் லீக் தொடரின் இறுதிப் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இதில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
இப்போட்டியைப் பார்ப்பதற்காக ஷாருக் கான் இன்று சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவரை சூழ்ந்த செய்தியாளர்கள் சென்னை விஜயம் குறித்துக் கேட்டபோது, சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியைப் பார்க்க வந்துள்ளேன்.
ரா ஒன் தமிழ்ப் பதிப்பின் டிரெய்லர் வெளியீடு நடைபெறவுள்ளது. அதிலும் பங்கேற்கவுள்ளேன் என்றார்.
ரஜினிகாந்த்தைப் பார்ப்பீர்களா என்ற கேள்விக்கு ரஜினியையும் சந்திப்பேன் என்றார் ஷாருக்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?