Tuesday, 28 February 2012

தயாராகிறது முனி 3ம் பாகம்

- 0 comments


லாரன்ஸ் இயக்கி நடித்த 'முனி' மற்றும் முனியின் 2ம் பாகமான 'காஞ்சனா' ரிலீசாகி வெற்றிபெற்றது.



இதையடுத்து 'ரிபெல்' தெலுங்கு படத்தை இயக்கி, இசையமைக்கும் அவர், ஜூன் மாதம் இப்படத்தை ரிலீஸ் செய்கிறார். பிறகு 'முனி 3ம் பாகம்' உருவாக்குகிறார்.

இதுகுறித்து லாரன்ஸ் கூறியதாவது:

ஏப்ரலில், முனி 3ம் பாகத்தின் ஷூட்டிங்கை தமிழ், தெலுங்கில் தொடங்குகிறேன். டைட்டில் முடிவாகவில்லை.

இயக்கி நடிக்கும் நான், என் தம்பி வினோவை அறிமுகம் செய்கிறேன். அவரும், நானும் சேர்ந்து ஆடுகின்ற நடனக்காட்சி ஹைலைட்டாக இருக்கும்.
[Continue reading...]

ஜிம்கானா கிளப்பில் கார்த்திக்கு கட்டுப்பாடு!

- 0 comments
 


புதிதாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வட ஆற்காடு, தென் ஆற்காடு மற்றும் பாண்டிச்சேரி திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினை தொடங்கி வைக்க, சென்னை – அண்ணாசாலை ஜிம்கானா கிளப்பிற்கு வந்த நடிகர் கார்த்தி மற்றும் சென்னை-வடபழனி கமலா திரையரங்கு உரிமையாளர் வி.என்.சிதம்பரம் உள்ளிட்டவர்கள் காலர் இல்லாத சட்டை அணிந்து வந்ததால் உள்ளே விட அனுமதி மறுத்து விட்டது கிளப்!

பின்னர் ரவுண்ட் நெக் டி-சர்ட் அணிந்து வந்த கார்த்திக்கு, அண்ணா சாலையில் உள்ள பிரபல ஜவுளிக்கடை ஒன்றில் புதிதாக கேஷூவல் சட்டை ஒன்றை வாங்கி கொடுத்த விழாக்குழுவினர், அவரது காரிலேயே அந்‌த உடையை மாற்றிக் கொள்ளவும் செய்து விழா நடந்த ஹாலிற்கு அழைத்து வந்தனர். அதேமாதிரி கமலா சிதம்பரம், நடிகர் திலகம் சிவாஜி காலத்து ஆசாமி என்பதால் சிவாஜி ஸ்டைலில் சின்ன காலர் வைத்த சட்டை அணிவது வழக்கம். விழாவிற்கு வந்த அவரையும் பழம்பெருமை வாய்ந்த ஜிம்கானா கிளப் ஊழியர்கள் உள்ளே விட மறுத்து விட்டதால் அவரும், அவரது காரில் உடன் வந்த நண்பரின் சட்டையை வாங்கி அணிந்து கொண்டு இவரது சட்டையை அவருக்கு கொடுத்து விட்டு, சட்டையை காரிலேயே மாற்றிக் கொண்டு விழாவிற்கு வந்ததாக கூறி வருத்தப்பட்டார். மேலும் இது காந்தி பிறந்த தேசம் என ஞாபகப்படுத்தியதுடன், இனி இதுபோன்ற விழாக்களை சட்டயை கலட்டாத இடங்களில் நடத்தும்படி அன்பு வேண்டுகோள் விடுத்தது ஹைலைட்!

இதேபோன்று விபரம் புரியாமல், வெளியூரில் இருந்து வெறும் வேஷ்டி-சட்டையை அணிந்து கொண்டு விழாவிற்கு வந்த தியேட்டர் அதிபர்கள் பலரும் கடைசி வரை விழாவிற்கு வெளியே நிறுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
[Continue reading...]

எதிரிகளை என்கவுண்டர் பண்ண இருக்கும் விஜய்

- 0 comments
 


துப்பாக்கி படத்தில் நடிகர் விஜய் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக நடித்து வருகிறாராம். நண்பன் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் துப்பாக்கி என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இப்படத்தின் சூட்டிங் மும்பையில் நடந்து வருகிறது. படத்தில் விஜய் என்ன கேரக்டரில் நடிக்கிறார் என்பது இத்தனை நாட்களாக ரகசியமாக இருந்து வந்தது. இந்நிலையில் படத்தில் விஜய்யின் கேரக்டர் குறித்த செய்தி இப்போது வெளியாகி இருக்கிறது. அதாவது படத்தில் விஜய் எதிரிகளை போட்டு தள்ளும் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்டாக வருகிறாராம்.

இதுநாள் வரை கமர்ஷியல் கேரக்டரில் நடித்து வந்த விஜய், நண்பன் படத்திலிருந்து தன்னுடைய ஸ்டைலை மாற்றி இருக்கிறார். அந்த மாற்றம் இப்போது துப்பாக்கியிலும் தொடர்கிறது. மேலும் விஜய் இதுபோன்ற ஒரு கேரக்டரில் நடிப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
[Continue reading...]

இணையதளத்தில் ரேஷன் கார்டு

- 0 comments

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது,

தமிழக முதல்வர் ஜெயலலிதா குடும்ப அட்டைகளின் செல்லத்தக்க காலத்தை 01.01.2012 முதல் 31.12.2012 வரை ஓராண்டிற்கு நீட்டிக்க உத்தரவிட்டார்
மேற்படி உத்தரவின்படி புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகளில் வருடம் குறிப்பிடாமல் உள்ள கூடுதல் தாளின் மேற் பகுதியில் 2012 என்று முத்திரையிட்டு செல்லத்தக்கதாக அறிவிக்கப்பட்டது. புதுப்பிப்பதற்கான கால அவகாசம் 28.02.2012 வரை அளிக்கப்பட்டது 1,97,70,682 குடும்ப அட்டைகளில் இதுவரை 1,86,58,768 குடும்ப அட்டைகள் நியாய விலைக் கடைகளில் புதுப்பிக்கப்பட்டுள்ளன. மேலும் கால நீட்டிப்பு வேண்டுமென்று கேட்டு பொது மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. இதனை கனிவுடன் பரிசீலித்த முதல்வர் அரசு மேலும் ஒரு மாத காலத்திற்கு அதாவது 31.03.2012 வரை நீட்டிக்க உத்தரவிட்டுள்ளது. இதன்படி இருப்பிட ஆதாரமாக வழங்கப்பட்டுள்ள வெள்ளை மற்றும் மஞ்சள் நிற தட்கல் குடும்ப அட்டை வைத்திருப்போர் மற்றும் அரிசி, சர்க்கரை விருப்ப குடும்ப அட்டைகள் வைத்துள்ள உடல்நல குறைவு காரணமாக நடக்க இயலாதோர், வயது முதிர்வு காரணமாக நியாய விலைக் கடைக்கு வர இயலாத குடும்ப அட்டைதாரர்கள், புனிதப் பயணம் மற்றும் மதம் சார்ந்த உள்ளிருப்பு விரதம் மேற்கொண்டுள்ளோர் மற்றும் புதுப்பித்தல் நடைபெற்ற காலத்தில் தற்காலிகமாக வெளியூர் சென்றவர்கள் ஆகியோர் பயனடையும் வகையில் அவர்களது குடும்ப அட்டைகளை ஆன்-லைன் முறையில் புதுப்பித்துக் கொள்ள இணையதள வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி htt://210.212.62.8080/newfcp/cardvalidity.do என்ற இணைய தள முகவரிக்கு சென்று புதுப்பித்துக் கொள்ளலாம். இதில் ரேஷன் பொருள் வேண்டுவோர் 2012 ஆண்டுக்கான கால நீட்டிப்பு தாளின் இரண்டு நகல்களை எடுத்துக் கொண்டு ஒரு நகலை குடும்ப அட்டையில் ஒட்டிக் கொண்டும், மற்றொரு நகலை உரிய கடைக்காரரிடம் அளித்து ரேஷன் பொருட்களை தொடர்ந்து பெற்றுக் கொள்ளலாம். ரேஷன் பொருள் வேண்டாதோர் மற்றும் இருப்பிட சான்றாக மட்டுமே வைத்துக் கொண்டுள்ளவர்கள் இணையதளத்தில் உள்ள 2012 ஆண்டுக்கான கால நீட்டிப்பு தாளின் ஒரு நகலை அவர்களுடைய குடும்ப அட்டையில் ஒட்டிக் கொண்டால் மட்டும் போதுமானது. மேற்படி இணையதள வசதி 01.03.2012 முதல் 31.03.2012 வரையில் நடைமுறையில் இருக்கும். இந்த வசதியை பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ், கேட்டுக் கொண்டுள்ளார்
[Continue reading...]

சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட மர்ம நபர் தீவிரவாதியா? விசாரணை தீவிரம்.

- 0 comments

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் நேற்று நள்ளிரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். விமான நிலையத்தில் முக்கிய பிரமுகர்கள் வரும் 4-வது கேட் பகுதியில் ஒரு வாலிபர் அத்துமீறி புகுந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவனை பாதுகாப்பு வீரர்கள் பிடித்தனர்.

அவன் சுவர் ஏறி குதித்து உள்ளே புகுந்தது தெரிய வந்தது. முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவனை விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் அவனை கைது செய்து விசாரணை நடத்தினார்.

விசாரணையில் அவனது பெயர் தினேஸ் சோரன் (30) என்பதும் மேற்கு வங்காள மாநிலம் மால்டா பகுதியைச் சேர்ந்தவன் என்பதும் தெரியவந்தது. கட்டிட தொழில் செய்ய சென்னை வந்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் மனநலம் பாதித்தவன்போல் அவன் செயல்படுகிறான்.

உண்மையில் அவன் மனநலம் பாதித்தவனா? அல்லது தீவிரவாதியா? அல்லது விமான நிலையத்தில் கொள்ளையடிக்கும் நோக்கத்தில் புகுந்தானா? என்பதை அறிய போலீசார் முடிவு செய்துள்ளனர். அவனை பரிசோதனை செய்ய இன்று கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார்கள்.

[Continue reading...]

அடுத்த ரவுண்டுக்கு தயாராகும் நயன்

- 0 comments
 


பிரபு தேவாவுடன் திருமணம் நடப்பதாக இருந்ததால் மதம் மாறி, சினிமாவை விட்டு விலகியிருந்த நயன்தாரா அடுத்த ரவுண்டுக்கு வந்துவிட்டார். இதனால் குஷியாகியுள்ள இயக்குனர்களும், நடிகர்களும் நயனிடம் கால்ஷீட் கேட்கத் துவங்கியுள்ளனர்.

நயன்தாராவுக்கு யாராவது பிராம்ப்ட் செய்தால் சுத்தமாகப் பிடிக்காது. அதாவது வசனத்தை அப்பப்போ எடுத்துக் கொடுத்து உதவுவது பிடிக்காது. எவ்வளவு பெரிய வசனமாக இருந்தாலும் மனப்பாடம் செய்துவிட்டு தான் படப்பிடிப்புக்கு வருவார். இயக்குனர் என்ன சொல்கிறாரோ அதன்படி பேசி நடிப்பார். கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வந்த நயன் தமிழில் நன்றாகப் பேசுவார்.

பேசினால் மட்டும் போதாது என்று நினைத்த அவர் தற்போது தமிழில் எழுதப், படிக்கவும் கற்றுக் கொண்டுள்ளார். தன்னைப் பற்றி வரும் செய்திகளை இணையதளஙகளில் தேடிப்பிடித்துப் படிக்கிறார். இவர் இப்படி இருக்க ஸ்ரேயா தமிழில் நடிக்க வந்து பல ஆண்டுகள் ஆகியும் தமிழில் பேசச் சொன்னால, சாரி ஐ டோன்ட் நோ டாமில் என்கிறார்.

நயன் நம்ம செய்தியையும் படிப்பார் என்று நம்புகிறோம்.
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger