சென்னை, அக். 18–
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளான பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், வீராணம் ஏரி பகுதிகளில் நேற்று 1 நாளில் 322 மி.மீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது. இதனால் 900 கனஅடி தண்ணீர் கிடைத்துள்ளது.
பூண்டி ஏரியில் 56 மி.மீ., சோழவரம் ஏரியில் 30 மி.மீ, புழல் ஏரியில் 54 மி.மீ., செம்பரம்பாக்கம் ஏரியில் 95 மி.மீ, வீராணம் ஏரியில் 87 மி.மீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளதால் ஏரிகளுக்கு தண்ணீர் அதிகமாக வந்து கொண்டிருக்கிறது.
இதற்கிடையே ஆந்திரா மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா தண்ணீர் இன்று காலை பூண்டி ஏரியை வந்தடைந்தது.
பூண்டி ஏரியின் கொள்ளளவான 3230 மில்லியன் கனஅடியில் தற்போது 122 மில்லியன் கனஅடி மட்டுமே இருப்பு உள்ளது. தற்போது மழைநீர் 138 கனஅடி வந்து கொண்டிருக்கிறது. இதே போல் வறண்டு கிடந்த சோழவரம் ஏரிக்கும் இன்று முதல் தண்ணீர் வரத் தொடங்கி உள்ளது.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?